.
.
அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவி ஜோதி, நேற்று தன் வீட்டில்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம்,
ராசிபுரத்தில் உள்ள முள்ளிக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி என்ற
18 வயது பெண். +2வில் 1105 மதிப்பெண்கள் பெற்ற ஜோதிக்கு, அண்ணா
பல்கலைகழகத்தில் பொறியியல் (இ.சி.இ) பிரிவில் இடம் கிடைத்தது.
விடுதியில் தங்கி படித்த ஜோதி வார விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த
போது, தன்னை ஆண் மாணவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு
செய்வதாக, அண்ணனிடம் கூறி அழுதிருக்கிறாள். ஆங்கிலத்தில் சரிவர
உரையாட முடிய வில்லை என்பதால் அவளை மற்ற மாணவர்கள் கேலி
செய்ததாக தெரிய வந்துள்ளது. அவள் மொபைல் போனில் உள்ள
எஸ்.எம்.எஸ்களே சாட்சி என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைகழக நிர்வாகம், துணைமுதல்வர் மன்னர் ஜவஹர் முதலானார்
இதை மறுத்துள்ளனர். பல்கலைகழக வளாகத்தில் ராகிங் தடை செய்யப்
பட்டுள்ளதெனவும், புது மாணவர்களை மூத்த மாணவர்கள் சந்திக்க
அனுமதி கிடையாதெனவு்ம் தெரிவித்துள்ளார்.
ஒரு கிராமத்து விவசாயதொழிலாளியின் பெண், இத்தனை மதிப்பெண்கள்
பெற்று பொறியியல் படிப்பது, அதுவும் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தது
அந்த குடும்பத்துக்கு எத்தனை சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கும்?
எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? ஆங்கிலத்தில் உரையாட முடிய
வில்லை என்ற காரணத்துக்காக அந்த பெண் தற்கொலைக்கு தள்ளப்
பட்டிருப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, அவமானகரமானதும்
கூட.
தமிழில் பொறியியல் படிப்புகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை
என அறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கம், இந்த தற்கொலைக்கு
என்ன பதில் சொல்லப் போகிறது..?
.
20 comments:
வேதனையான விஷயம்.
//தமிழில் பொறியியல் படிப்புகள், வேலை வாய்ப்புகளில் முன்னுதாரணம்
என அறிவிப்புகளை வெளியிடும் அரசாங்கம், இந்த தற்கொலைக்கு
என்ன பதில் சொல்லப் போகிறது..?//
enna seiyum... sila naalil filai mudi vidum. Ezhai vivasayi enna seivar pavam.
எவ்வளவோ இன்னல்களில் பெற்றோர்கள் படிக்க வைத்ததற்கு அந்தப் பெண்ணின் கோழைத்தனமான முடிவு கரி பூசியது போல் உள்ளது.
மாணவர்கள் இடையில் நடக்கும் இயல்பான உரையாடல்களை தாழ்வு மனப்பான்மையால் தாங்கிக் கொள்ள முடியாமல் பிறர் மீது பழிபோடுவதை ஏற்க முடியவில்லை.
இருந்தாலும் பெற்றோர்களின் சோகம் மனதை பிழிகிறது
பெண் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலுடன் தைரியத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டிய கட்டாயமான சூழலில் இருக்கிறோம் என்பதை முதலில் பெற்றோர் உணர வேண்டும்.......அதுதான் இது போன்ற கொடுமைகளுக்கான தீர்வாக அமையும்.
மிகவும் வேதனையான விஷயம்... என்றும் எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது..
மிகுந்த வேதனையாக இருந்தது செய்தியில் பார்த்தபோது! :-(
வேதனையான விஷயம்.. ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் தற்கொலை செய்வது தவறு..
யாரை நோக எதை நோக?
பெத்த வயிறு பாவம்
பள்ளிக்கூட மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், படிப்பு மட்டும் இல்லாமல் உலக அறிவையும் வளர்த்துக்கொள்வது நல்லது. பெரும்பாலும் புத்தகப் புழுவாக இருக்கும் மாணவர்களே இவ்வாறு புதிய சூழ்நிலைகளில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். வீடுகளில் பெண்கள் சீரியல் பார்ப்பதோடு மட்டுமில்லாது செய்திகளையும் வழமையாகப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கும் பேப்பர் படிப்பது, செய்திகள் பார்ப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
கலங்க வைக்கும் நிகழ்வு. கோவி.கண்ணனை வழிமொழிகிறேன்.
இது போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு சாவை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கோழைகளாக இருப்பது மிக வருத்ததுக்குரியது.. தன் பெற்றோர்களை நினைத்துபார்த்தால் எந்த தலைகுனிவும் தலைகுனிவே அல்ல.. பலமுறை நம்குழந்தைகளுக்கு சொல்லவேண்டியது வாழ்வின் எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட ஒரு வழியை தேர்ந்தெடுப்பது பெற்றவர்களின் வாழ்க்கையை சூனியமாக்குவது போன்றது என்பதைதான்.
அவளை அந்நிலைக்கு தள்ளியது நண்பர்கள் என்றால் அவர்கள் வெட்கப்படவேண்டியவர்கள்
ஆரம்ப கல்வியிலிருந்து எல்லா மட்டத்திலும் இருபாலர் சேர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும்.வெளி உலகிலும் குழந்தைகள் பால் வித்தியாசம் இல்லாமல் பழகும் கலாச்சாரம் தோன்றவேண்டும். தமிழகம் தவிர வேறு மாநிலங்களில் பெண்களுக்கு என்று விசேசமான தனி ஏற்பாடுகள் இல்லை என்பது குறிப்பிட தகுந்தது.
ஆங்கிலம் பேசி என்ன கிடைக்க போகுது?
முயற்சி செஞ்சா தானா வந்துட போகுது..
இதுக்காக தற்கொலை என்பது கோழைத்தனமான முடிவு...
ஒரு கிராமத்து விவசாயதொழிலாளியின் பெண், இத்தனை மதிப்பெண்கள்
பெற்று பொறியியல் படிப்பது, அதுவும் யுனிவர்சிட்டியில் இடம் கிடைத்தது
அந்த குடும்பத்துக்கு எத்தனை சந்தோஷமான விஷயமாக இருந்திருக்கும்?
எத்தனை கனவுகள் கண்டிருப்பார்கள்? ஆங்கிலத்தில் உரையாட முடிய
வில்லை என்ற காரணத்துக்காக அந்த பெண் தற்கொலைக்கு தள்ளப்
பட்டிருப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, அவமானகரமானதும்
கூட.
..... English is a language.... not a talent.
It is sad to know that other students were mean to her - without helping her out.
கிராமத்து பொண்ணுங்கதான் ரொம்ப தைரியமா இருப்பாங்கன்னு சொல்வாங்க. ஒரு சின்ன விஷயத்துக்காக தற்கொலை செஞ்சது அதிர்ச்சியா இருக்கு.
இதில் ஆங்கிலம் தவிர, ஆண் மாணவர்களின் எஸ்.எம்.எஸ். தொல்லைதான் முக்கிய காரணியாகத் தெரிகிறது. அண்ணனிடம் பகிர்ந்துகொள்ளும் அளவு வீட்டாரோடு நெருக்கம் இருந்தும், இப்படியொரு முடிவா?
பல்கலைகழக வளாகத்தில் கைப்பேசிகளுக்கு அனுமதியில்லை என்று படித்த நினைவு. கைப்பேசிகளின் சாபங்கள் தொடர்கின்றன.
வேதனையான விஷயம்....
எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது..
அரசாங்கம், இந்த தற்கொலைக்கு
என்ன பதில் சொல்லப் போகிறது..?
மிகவும் வேதனையளித்த சம்பவம்.
பெண்கள் மனதைரியத்தை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகமிக அவசியம்.
இது போன்ற விஷயங்களை கேள்விப்பட்டாலே பகீரென்று இருக்கிறது...
பெற்றோர்கள் எவ்வளவு சிரமங்களுக்கிடையில் தன் பிள்ளைகளை படிக்க அனுப்புகிறார்கள்... ஆனால், அங்கொன்றும், இங்கொன்றுமான இது போன்ற நிகழ்வுகள் படிக்கும் அனைவரின் எதிர்காலத்தையுமே கேள்விக்குறியாக்குமே!!
படிப்பு வந்தளவுக்கு
அந்தப் பெண்ணுக்கு
கொஞ்சம்
தன்னம்பிக்கையும்
வந்திருந்தால்
இது நடந்திருக்காது.
ஆனாலும்
காரணமானவர்கள்
தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
ஈவ் டீசிங்கால் இந்த தற்கொலை நிகழவில்லை என ஐ ஜீ சிவணாண்டியின் விளக்கம் கண்டிக்கத்தக்கது.ராகிங்க் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்.
வேதனையாக இருந்தது
Post a Comment