Friday, November 12, 2010

ரயில் பயணத்தில் ஒரு கனவான்.

.

.சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த

போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால்

அல்ல. இங்கு நாலரை மணி லிங்க் ட்ரெய்னில் ஏறி, நெல்லை சென்று,

அ்ங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் பயணித்து, சென்னை சென்றடையும்

நேரம் காலை 6 1/2 என்பது பலசமயங்களில் 7 1/2 ஆகிவிடுமாதலால்

மொத்தம் 15 மணிநேரம் பயணம்.., வெறுத்துப் போய்விடுகிறது. ரயில்

பயணம் சௌகர்யம் என்றாலும், அலுப்பு தட்டிவிடுகிறது. இதைவிட10 1/2

அல்லது 11 மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடுகிற ஆம்னிபஸ்

களே தேவலாம் என்றிருக்கிறது.



நானும், கணவரும் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் ஒரு பெண்மணி,

பள்ளி ஆசிரியை என்பது கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்து

தெரிந்தது. அடுத்து இரு ஆண்கள், சைட் சீட்டில் ஒருகணவன், மனைவி

இரு பெண்குழந்தைகள். முதல் பெண்ணுக்கு ஐந்து வயது இருக்கலாம்.

அடுத்தது ஏழெட்டு மாதமே நிரம்பியிரு்ந்த கைக்குழந்தை. அந்த கணவர்

நல்ல கண்ணியமான தோற்றத்துடன் காணப்பட்டார். நேர்த்தியாக உடை

அணிந்திருந்தார். பார்க்க படித்தவர் போல் தெரிந்தார். ரயில் கிளம்பியது

தான் தாமதம், ஒரு வாராந்தரியை எடுத்துக் கொண்டு மேல் பெர்த்துக்கு

சென்று விட்டார். அந்த முதல்பெண் `துறு துறு வென ஓடிக்கொண்டும்,

மேல்பெர்த்துக்கும், கீழ்பெர்த்துக்கும் ஏறி இறங்கிக் கொண்டுமாக இருந்தது.

மின்விளக்கு, மின்விசிறிகளின் சுவிட்சுகளை போட அணைப்பதுமாக

விளையாடிக் கொண்டிருந்தது. அந்தபெண் மடியில் கைக்குழந்தையை

வைத்துக் கொண்டு, பெரியபெண்ணின் அத்தனை குறும்புகளையும்

சமாளித்துக் கொண்டிருந்தார்.



சற்று நேரத்தில் அனைவரும் சாப்பிட தொடங்கினர். அந்த கணவர்

கொண்டு வந்திருந்த பார்சலை எடுத்து தருமாறு உத்தரவிட்டார்.

மேலிருந்தபடியே பார்சலை வாங்கிக் கொண்டு அங்கேயே வைத்து

சாப்பிட தொடங்கினார். பெரிய பெண்ணுக்கு அம்மா ஊட்டிக் கொண்டி

ருந்தார்.பெண் தண்ணீர் கேட்க, அந்த பெண் கணவரிடமிருந்த தண்ணீர்

பாட்டிலை தருமாறுக் கேட்டார். அவர்,`ஏன் வேற பாட்டில் இல்லையா’

என்று கேட்டார். மனைவி இல்லையென தலையாட்டியதும், அவருக்கு

வந்ததே கோபம்.,` ஒரு பாட்டில் தண்ணீ எப்படி போதும், காலைல

வரைக்கும் வேண்டாமா? அறிவிருக்கா ஒனக்கு’ என காச்மூச் எனக் கத்த

ஆரம்பித்தார். ``மூணு பெருக்கு ஒரு பாட்டில் தண்ணீ... ஹூம்..’’

தலையிலடித்துக் கொண்டார். அவரின் மனைவி தலை கவிழ்ந்து,

கீழுதட்டை கடித்து, பொங்கிவரும் கண்ணீரை அடக்க பிரயத்தனம் செய்து

கொண்டிருந்தார். அந்த இடமே நிசப்தமாகி விட, அத்தனை பேரும் அந்த

கனவானை உறுத்துப் பார்த்தோம். `நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ என்ற

கேள்வி அனைவர் பார்வையிலும் தொக்கி நின்றது. நான்குபேர் முன்னிலை

யில் குழந்தைகளை அதட்டுவதே நாகரீகமான செயல் அல்ல. ஆனால்

அந்த கனவான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், விடுவிடென இறங்கி

சென்றவர், சற்று நேரம் கழித்து வந்தார்; மீண்டும் மேலேறினார்.

மல்லாந்து படுத்தவர் நிச்சிந்தையாக தூங்க ஆரம்பித்தார். கீழே அந்தப்

பெண் அழும் கைக்குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தார். மெல்லிய

குறட்டையொலி வெளிப்பட்டது அந்த கனவானிடமிருந்து.

.

42 comments:

எல் கே said...

சிலரை திருத்த முடியாது .இப்படியும் சிலர்

ராம்ஜி_யாஹூ said...

இடைவெளி ரயில் நிலையங்களான சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோட்டில் தண்ணீர் பாடிகள வந்திருக்குமே, வாங்கியிருக்கலாமே அவர்கள்.

சஞ்சயன் said...

என்ன செய்வது. பலர் தங்கள் உலகமே புனிதமானது என்று நினைத்தபடியே வாழ்ந்து தொலைக்கிறார்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் கனவானும் அல்ல! கண் அவனும் அல்ல அதாவது கணவன்...இவர் கல் அவனே!

Anonymous said...

மெல்லிய

குறட்டையொலி வெளிப்பட்டது அந்த கனவானிடமிருந்து.//நானும் இது போல ஆட்கள் நிரைய பேரை பார்த்திருக்கிறேன்..குழந்தை எவ்வலவு அழுதாலும் புத்தகம் படித்துகொண்டிருப்பார்கள் பல சமயம்..

Anonymous said...

ஓட்டு போட்டாச்சி அருமையான பதிவு

ஜெயந்த் கிருஷ்ணா said...

திருந்தாத கண்ணியவான்கள்...

Radhakrishnan said...

:(

அமுதா கிருஷ்ணா said...

என்ன செய்ய ஆண்கள் என்றால் வேலை எதுவும் பார்க்க கூடாது என்று வளர்த்து விடுகிறார்களே..வளர்ப்பு அப்படி...

தமிழ் உதயம் said...

அவர்கள்
பிறர் கஷ்ட நஷ்டம் தெரியாமல்
தான் தன் சுகம் என்று வாழுபவர்கள்.

Unknown said...

என்ன செய்வது தலை எழுத்து என வாழப் பழகிக்கொண்ட அந்த சகோதரியை நினைத்துதான் கவலையா இருக்கு ..

சி.பி.செந்தில்குமார் said...

இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசனும்.பொதுவாகவே ஆண்கள் பொது இடத்தில் அதட்டுவதை ஒரு கவுரமாக நினைக்கிறார்கள்.சில பெண்கள் தங்கள் கணவர்களை மற்றவர் முன்னிலையில் அதட்டுவதை கண்டிருக்கிறேன்.2மே தவறு

ராமலக்ஷ்மி said...

இப்படியும் சிலர் :(!

ரிஷபன் said...

அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..

ஜோதிஜி said...

சிலர் அல்ல பலரும் இப்படித்தான் பல்விளக்கக்கூட ஆள் தேடியலைக்கூடிய கணவான் என்ற தோற்றத்தில் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வெகு கனம் பொருந்தியவர் போல இருக்கிறது. தலைக்கனம்!
அராஜகம் பிடித்த இவரையெல்லாம் கணவனாக அடைந்த அந்தப் பெண்ணின் நிலமைதான்
வருத்தமாக இருக்கிறது.

Unknown said...

பார்த்திட்டு ஏன் பேசாம இருந்தீங்க? 'சொல்லத்தான் நினைக்கிறேன்' னு நினைச்சிட்டீங்களா! நீங்க அந்த அம்மாக்கு கொஞ்சம் உதவியிருக்கலாம். அதப் பார்த்தான அந்த ஆளுக்கு சூடு சொரணை வரலைனா, கொஞ்சம் எடுத்து சொல்லிட்டு வந்திருக்கலாம். எல்லாம் சிலருக்கு எடுத்து சொன்னாத் தான் தெரியும். சிலர் தான் செய்வது தவறென்று தெரியாமல் இருக்கிறார்கள்.

அம்பிகா said...

உதவத்தான் செய்தோம். தண்ணீர் பாட்டில் கொடுத்தோம். நாம் ஏதாவது கேட்டால், அவர் அதற்கும், உன்னால் தானே’ என்று அந்த பெண்ணிடம் பாய்வாரோ என்ற தயக்கமும் காரணம். அந்த அளவுக்கு அடிப்படை நாகரீகம் இல்லாமல் தான் அவர் நடந்து கொண்டார்.
மௌனமாக இருக்கிறோமோ என்ற உறுத்தல் எனக்கும் இருந்தது.
உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி.

Unknown said...

விளக்கத்திற்கு நன்றிங்க. தப்பா நினைக்காதீங்க.

பவள சங்கரி said...

நல்ல பதிவுங்க.....வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

/ரயில் பயணத்தில் ஒரு கனவான்./

"கன"வான்.

Prasanna said...

அவரை கற்பனை செய்து பார்த்தால், 'கண'வானாக, பெரிய தொப்பையுடன், சட்டை போடாமல், புலிச்சங்கிலி.. இப்படி தெரிகிறார் :)

ஹேமா said...

இப்படியான சில ஆண்களால் எல்லா ஆண்களிலுமே வெறுப்பு வருகிறது.அடிப்படையில் ஆண்கள் மனம் இப்படித்தானோ !

மாதவராஜ் said...

குழந்தை விளையாட்டுக்களில் இருந்தே இந்த பாகுபாடு நிலவுகிறது. பெண் குழந்தைக்கு சமையல் செய்யும் சொப்புச் சாமான்களும், ஆண் குழந்தைக்கு பைக், கார் போன்ற விளையாட்டுப் பொருட்களும் எனவும் வாங்கிக் கொடுக்கிற சமூகம்தானே இது.

தைக்கிற மாதிரி, உறைக்கிற மாதிரி, பளாரென அறை விடுகிற மாதிரியான பதிவு அமபிகா.

Sriakila said...

சில ஜென்மங்களைத் திருத்தவே முடியாது. அந்தப் பெண்ணின் நிலைமைதான் பரிதாபத்திற்குரியது..

க.பாலாசி said...

படிக்கும்போதே பளிச்சென்று அந்தாள் முகத்தில அறையனும்னு தோணுது... இவன்லாம் நிச்சயமா தாயையும் உதாசினப்படுத்துபவனாகத்தான் இருப்பான்..

Deepa said...

அந்தாளைக் கீழே இழுத்து மிதி மிதின்னு மிதிச்சிருக்கணும். சே! இப்படிப் பட்ட ஆண்களுக்குப் பிள்ளை பெற்றுத் தருவதை விட...வேண்டாம் விடுங்கள்.

மின்மினி RS said...

என்னவென்று சொல்வது இந்தமாதிரி ஆட்களை.. சே என்ன மனுசன் இவன்?.. ரொம்ப வருத்தமா இருக்கு.. அவனோட குணம் அறிந்து சகித்து போறாங்களே அந்த பெண் உண்மையிலே பாராட்டப்பட வேண்டியவர்.

நல்ல பகிர்வு அம்பிகா அக்கா.

மங்குனி அமைச்சர் said...

கனவான் .......நல்ல பேரு வச்சிங்க மேடம்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு அக்கா. அந்த சகோதரியை நினைத்தால் தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. பொது இடத்திலேயே இப்படி நடந்துகொள்ளும் மனிதர் வீட்டில் என்ன பாடுபடுத்துவாரோ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமான நிகழ்வு. கல்நெஞ்சக்காரன்.

a said...

அருமையான பதிவு...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

நல்ல பதிவு. அந்த மாதிரியான சுயநலவாதிகள் பலர் உலகின் பல பாகங்களில் பரவிக் கிடக்கிறார்கள். போன மாதம் நானும் என் மனைவியும் தென்னிந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்து இருந்தோம். பெங்களூரில் இருந்து பத்ராவதிக்கு இரயிலில் செல்லும் போது எங்களுக்கும் அந்த மாதிரியான கசப்பான உணர்வுகள் ஏற்பட்டன. மலேசியாவில் இருந்து முத்துக்கிருஷ்ணன்.

நிலாமதி said...

some people like this well written. thank you.

ஜெயந்தி said...

பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான்.

ஹுஸைனம்மா said...

அம்பிகா, எனக்கென்னவோ அந்தாளைவிட அந்தப் பெண்ணின்மேலேதான் கோவம் அதிகம் வருகிறது. இவள் செய்துகொள்வாள், சமாளித்து விடுவாள் என்பதை அறிந்துதானே அவர் இப்படியிருக்கிறார்? குட்டக் குட்ட குனிந்துகொண்டே இருந்துவிட்டு, நிமிர நினைக்கும்போது முதுகெலும்பில் நிரந்தரக் கூன் ஏற்பட்டிருக்கும்.

சுந்தரா said...

தன்னையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, அதட்டலுக்கு அடங்கிப்போவதைத்தவிர,
பெண்ணானவளுக்கு வேறெந்த உணர்வும் இருக்கக்கூடாதென்கிற அகம்பாவமும்,அலட்சியமும்தான் காரணம்.

அந்தப்பெண் பதில்பேச ஆரம்பித்திருந்தால் அவர் மேற்கொண்டு பேசியிருக்கமாட்டார்...பாவம் அந்தப்பெண்.

Ahamed irshad said...

Ennatha Solrathu...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_19.html

மணிஜி said...

தீர்ந்து போச்சு அம்பிகா குழம்பு...இன்னும் ஒரு டப்பா பார்சல்..இன்னும் மணந்து கொண்டிருக்கிறது குழம்பும், நினைவுகளும்

goma said...

அந்த பெண்ணுக்காக வேதனைபடுவதைத் தவிர நாம் எதுவும் செய்ய முடியாது.
பாவம்

goma said...

அவரை கற்பனை செய்து பார்த்தால், 'கண'வானாக, பெரிய தொப்பையுடன், சட்டை போடாமல், புலிச்சங்கிலி.. இப்படி தெரிகிறார் :)

பிரசன்னாவின் கற்பனை அருமை...