.
.நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி
மலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்கிறேன்.
பொறுப்புணர்வு
.நான்கு சாலைகள் சேரும் இடத்தில், ஒர்ஓரமாக அந்த பெரிய சின்டெக்ஸ்
நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. சுற்றிலுமிருந்த நான்கைந்து
தெருமக்கள் குடிநீர் தவிர்த்த மற்றைய அனைத்து தேவைகளுக்கும் அந்த
நீர்தேக்கத்தொட்டியையே நம்பியிருந்தனர்.வீடுகளில் கிணறு, போர்வெல்
அமைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் அங்கே தான் தண்ணீர்
பிடிப்பார்கள். தொட்டியின் இருமருங்கிலும், குழாய்கள் அமைக்கப்பட்டு
சுற்றிலும் சிமெண்ட்டினால் மேடை கட்டப் பட்டிருந்தது. அதிக உப்பாயிரா
மல், கொஞ்சம் சப்பென்றிருக்கும். குடிநீர்குழாய்கள் காலை வாரிவிடும்
சமயங்களில், சோறு பொங்கவும், ஏன் குடிப்பதற்கும் கூட சிலர் இந்நீரை
பயன்படுத்துவதுண்டு.
அந்தப்பகுதியை கடந்து செல்கையில் கவனித்தேன், அந்த தொட்டியில்
சிறுதுளை ஏற்பட்டு, அதன் வழியே தண்ணீர் சர்ரென்று பீய்ச்சியடித்துக்
கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சிலர் தண்ணீர் பிடித்துக்
கொண்டிருந்தனர். இலேசாக M_Seal வைத்துக்கூட அடைத்து விடலாமே
என எண்ணமிட்டவளாய் கடந்து சென்றுவிட்டேன். இரண்டு நாட்களாய்
இதே நிலை தொடர்ந்தது.
மூன்றாவது நாள் பார்க்கும் போது துளை அடைக்கப் பட்டிருந்தது. சரி
செய்து விட்டர்கள் போலும் என நினைத்தவள், அருகிலிருந்த சிறுமி
யிடம் ``இதை அடைத்துவிட்டார்களா’’ எனக் கேட்டேன். அந்தப்பெண்
தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை சுட்டிக் காட்டி
`அதோ அவங்க தா பபுள்கம்மை வச்சி அடைச்சி வச்சிருக்காங்க’’
என்றாள்.
.
27 comments:
நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி
மலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்கிறேன்.
....Thats a great news!!! Congratulations!!!
வாழ்த்துக்கள்
கொட ரிப்பேர், செம்மலரில் வெளியாகியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
அந்தச் சிறுவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வைப் பாராட்டுக்குரியது. அதே சமயம்... என்ன சொல்ல..? சிந்திக்க வைக்கும் பகிர்வு.
வாழ்த்துக்கள்
உங்க குடை ரிப்பேர் பதிவானதிற்கு வாழ்த்துகள். எங்க பின்னூட்டங்களும் வெளியாகி இருக்கா?
தீபாவளி மலரில் வெளிவந்ததுக்கு வாழ்த்துகள்..
குட்டிப்பசங்களுக்கு பாராட்டுகள்..
கொட ரிப்பேர், செம்மலரில் வெளியாகியிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் உங்களுக்கு.
வாழ்த்துக்கள் அம்பிகா
செம்மலரில் உங்கள் படைப்பு வெளியானதுக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்!!!
poruppunarvu nalla pahirvu
வாழ்த்துகள் அம்பிகா அக்கா. உங்கள் கதை தீபாவளி மலரில் இடம்பெற்றிருப்பதற்கு எங்களுக்கு மிகுந்த சந்தோசம். மேலும் தொடருங்கள்.
வாழ்த்துகள் அம்பிகா.
பொறுப்புணர்ச்சி அசத்தல் !
கொடரிப்பேர் செம்மலரில் வெளிவந்தமை குறித்து மகிழ்வு
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அம்பிகா! சிறுவர்களின் பொறுப்புணர்வு நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.
வாழ்த்துகள்!!!!
வாழ்த்துக்கள்!!!!
கதைக்கும் கருத்துக்கும் செம்மலரில் வெளியானதற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்பிகா.
செம்மலர் வாழ்த்துக்கள் :) அவர்களுக்கு அது விளையாட்டு.. நமக்கு பெரிய பொறுப்பு :)
R.V.SARAVANAN said
வாழ்த்துக்கள் ambika
சின்னப் பசங்கன்னு நினைப்போம்; ஆனா அவங்கதான் சம்யத்துல பொறுப்பா இருப்பாங்க. நல்லாருக்கு.
’செம்மலர்’க்கும் வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள் அம்பிகா..:))
செம்மலரில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!
குழந்தைகளிடமாவது பொறுப்புணர்வு இருக்கிறதே.
வாழ்த்துகள். எதிர்கால சந்ததியினரிடம் பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை காட்டும் காவியம்.
kulanthikalidam naam neriya kathukka vendum..
Nalla irukku..
அன்பு அம்பிகா அவர்களுக்கு
தீக்கதிர் தீபாவளி மலரில்
கொட ரிப்பேர்
இடம் பெற்றமைக்குச் சிறப்பு வாழ்த்துக்கள்..
எஸ் வி வேணுகோபாலன்
Post a Comment