.
.சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்ததை எழுத தொடங்கி
இன்றுடன் ஓராண்டு நிறைவுறுகிறது.. பெரிய திட்டமிடல்களோ,
முனைப்போ இன்றி, என் மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்
என மனதில் பட்டதை ஒரு ஆர்வத்துடன் எழுதினேன். இதுவரை
எழுதிய பதிவுகள் 76, என்னை பின்தொடர்வோர் 140 பேர். மிகப்
பெரிய சாதனையாக இல்லாவிடினும், என் எழுத்துக்கு கிடைத்த
மிகப் பெரிய அங்கீகாரமாகவே கொள்ள முடிகிறது. தமிழ்மணம்
தெரிவு செய்த முதல் இருபது பதிவுகளில் 13 வதாக, ஒருமுறை
வந்ததுமே எனக்கு சாதனையாகத் தான் தெரிகிறது.. என்
பதிவுகளை தொடர்ந்து வாசித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டு
எனக்கு அன்பும், ஆதரவும் நல்கும் அனைத்து அன்பு உள்ளங்
களுக்கும், என் அன்பும், நன்றியும். என் பதிவுகள் அச்சில் வர
உறுதுணையாயிருந்த, என்வலைப்பக்கத்தின் முதலாண்டு
நிறைவுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்த
திரு.எஸ். வி. வேணுகோபாலன் அவர்களுக்கும் என் நன்றியும்,
அன்பும்.
மகாகவியின் பிறந்த நாளில் என் வலைப்பக்கம் தொடங்கப்
பெற்றது தற்செயலான நிகழ்வெனினும், எனக்கு பெருமைக்
குரியதே! ஆனால் அவர்க்கு அது வருத்தந் தருவதாயிருக்
கலாம். மகாகவியின் பிறந்த நாளில்,
எண்ணிய முடிதல் வேண்டும்;
நல்லவே எண்ணுதல் வேண்டும்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெலாம்
பரிதிமுன் பனியேப் போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னையே!
என்பதைத் தவிர வேறென்ன வேண்டிட முடியும்?
.
35 comments:
வாழ்த்துகள் அம்பிகா அக்கா :-)
இடுகைகள் தொடரட்டும்!
அன்பு முல்லை,
மாதுஅண்ணனுக்கு அடுத்து, என் முதல் இடுகைக்கு முதல் வாழ்த்து சொன்னவரும் நீங்கள் தான். இப்போதும் முதல் வாழ்த்து உங்களிடமிருந்தே! மிக சந்தோஷம் முல்லை.
என் இனிய வாழ்த்துக்கள்!
தொடருங்கள் அம்பிகா :)!
வாழ்த்துக்கள் அம்பிகா!
வலைப்பயணம் இன்னும் பல சிறப்புகளைச் சேர்க்கட்டும்!
வாழ்த்துக்கள் அம்பிகா...*மீண்*டும் சந்திப்போம்...
அன்பான வாழ்த்துக்கள் அம்பிகா...!
பாரதியையும் உங்களையும் ஒன்றாக நினைவு கூற செய்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள், மென் மேலும் வளருங்கள் அம்பிகா.
என் இனிய வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் மேடம்
Great news!
வாழ்த்துக்கள்! தொடர்ந்து அசத்துங்கள்!
இனிய வாழ்த்துகள்
மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
சந்தோஷமாக இருக்கிறது அம்பிகா..
இனிய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்.தொடர்ந்து நல்ல பல படைப்புக்கள படைத்து வலையுலகில் வெற்றி நடை போடுங்கள்.
வணக்கத்துடன் வாழ்த்துக்கள் சகோ
ரொம்ப மகிழ்ச்சியும், நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்.. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள்!கூடவே பரதியின் வரிகளை குறிப்பிட்டு மகுடம் சூட்டி விட்டீர்கள்.
ஓராண்டு நிறைவு வாழ்த்துகள்.
என்னங்க என்ன சாதாரனமாவா எழுதறீங்க. அண்ணனுக்கு சளைக்காம ஈடு கொடுத்து, சமுதாயத்துக்கு தேவையா ஒவ்வொன்னும் நச் நச்ன்னு தாங்க இருக்கு. தொடருங்க.
வாழ்த்துக்கள் சகோ.. நான் பதிவுகளுக்கு வந்த புதிதில் அறிமுகமானது உங்கள் வலைப்பூ.. சந்தோசமாக இருக்கிறது...
நன்றிகளும்
வாழ்த்துக்கள் அம்பிகா.
hearty congratulations ambika :-)
வாழ்த்துகள் அக்கா. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அம்பிகா! இன்னும் நிறைய எழுதுங்கள்
அன்பு அம்பிகா அவர்களுக்கு
எதிர்பாராமல் எனது பெயரை உங்கள் இடுகையில் இரவு பதினோரு மணிக்குப் பார்க்கையில் அடைந்த பெருமிதத்தை சொற்களால் விளக்க இயலாது.
உங்களது கொட ரிப்பேர் சொல்லோவியத்தை, Bank Workers Unity பத்திரிகையின் டிசம்பர் இதழில், படித்ததும் கேட்டதும் பகுதியில் எடுத்துப் போட்டிருக்கிறோம்....இந்தப் படித்ததும் கேட்டதும் பகுதி நீண்ட காலத்திற்குப் பின் புதுப்பிக்கப்பட்டிருப்பது. கூட்டங்களில், பொது வெளியில் காதில் விழுந்தவை, புத்தகங்களில் - பத்திரிகையில் கண்ணில் பட்டவை இவற்றை சுவாரசியமாகத் தொகுத்துக் கொண்டிருந்தவன் உங்களது வலைப்பூவில் இருந்து எடுத்துப் பயன்படுத்துவது இலக்கியத்தின் புதிய சாளரம் திறந்திருப்பதை, எங்களது எளிய வாசகர்களுக்கு உங்களது பதிவின் மூலம் அறிமுகப்படுத்துவதாகவும் ஆகியிருக்கிறது.
சக மனிதர்களின் கண்ணீரை, உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கும் வேதனைகளை,
இன்றைய உலகம் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய மதிப்பீடுகள் காணாமல் போகச் செய்து கொண்டிருக்கும் மெல்லிய உணர்வுகளை
நம்பிக்கையோடு எதிர்பார்த்துப் பிரிக்கத் தக்க வலைப்பூவின் சொந்தக்காரரே..வாழ்த்துக்கள் இந்தப் பூவின் பிறந்த நாளில்...மணக்கட்டும் கால காலத்திற்கும் இந்த வாடாத வலைப்பூ!
எஸ் வி வேணுகோபாலன்
வாழ்த்து வாழ்த்து அன்பான வாழ்த்து அம்பிகா.சந்தோஷம்.இன்னும் தொடருங்கள்.தொடர்கிறோம் !
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அம்பிகா!!
வாழ்த்துகள் அம்பிகா அக்கா.
வாழ்த்துகள்..
இது போல பல அகவைகளைக் காணட்டும்..
வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்
Post a Comment