.
.என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட்
செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும்
விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவசதொலைக்காட்சிப்
பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி
கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட
தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத்
தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது
பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்
பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்
என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிக்
கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி. வி. யை பெரியண்ண
அரசுவிடமே கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.
ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக
வாங்கிப் படித்தார்.
அதில் ‘ மனிதனுக்கு டி . வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான்.
ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம்.
தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை
எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகுஅடைந்து விட்டனவா?
குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு
அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்தபின்
மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக
இருந்திருக்கும் . இதற்கு மட்டும்எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின்
முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.
டி . வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான
மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து
போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு
மாவாட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம் .
இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி,
மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே
போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை
அனைத்தையும்வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ
அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை,
லஞ்சம் ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு
நடமாடும் பிணமாக நான் எப்படி டி . வி. பார்க்க முடியும்? எனவே
எனக்கு இந்த டி.வி . வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு
மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது .
எனவே,இந்த டி.வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்
கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்
அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச செய்தாலே போதும்.
இந்தியா வல்லரசாகி விடும் ’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை. அருகில்
இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த
மனுவையும் டி. வி. யையும்வாங்கி வைத்துக் கொண்டு மேலும்
பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு
நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்
கிட்டிருக்கான் . இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும்
வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய்
இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .
சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு .ரொம்ப சீப்பா கணக்குப்
போட்டாலும் ஒரு டி. வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில்
ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்பஅட்டைக்கும்
டி. வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை
வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு
டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி. வி. பாத்து
வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி . யை திருப்பிக்
கொடுத்தேன்’’ என்றார் .
டி.வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு
கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி. க்கள் 2519.
அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு
டி.வி. யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’
என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்
படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்
பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறி
களாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை
பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!
செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று தெரிய வில்லை.
உண்மையெனில், விவசாயி விஜயகுமார் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் .
உரியவர். அவருக்கு வாழ்த்துக்கள்.
கற்பனையெனில், இந்த இலவசங்கள் மீதான வெறுப்பில்,
இப்படி நடந்து விடக் கூடாதா, என்ற ஆதங்கத்துடன், இவ்வாறு
கற்பனை செய்து ஒரு செய்தி அனுப்பிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
செய்தி உண்மையென்று முத்துச்சரம் ராமலக்ஷ்மி உறுதி செய்திருக்கிறார்.
அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார்.
http://surveysan.blogspot.com/2010/12/blog-post_22.html
.
.
35 comments:
Kalainyarukku kannathtil arainthaar pol irunthirukkum.mika vedhanaiyana,nekilvaana nikazhvu.avanthaanda maanamulla thamizhan
நல்ல பகிர்வு அம்பிகா. செய்தி கற்பனை அன்று. கடந்த வாரம் சர்வேசனின் இது குறித்த பதிவு:
http://surveysan.blogspot.com/2010/12/blog-post_22.html. இதில் இணையத்தில் வெளியான செய்திக்கான சுட்டியும் உள்ளது. விவசாயி விஜயகுமார் பாராட்டுக்குரியவர்.
நன்றி ராமலக்ஷ்மி.
செய்தியை உறுதி செய்தமைக்கும், லிங்க் கொடுத்தமைக்கும்.
நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான்.
நல்ல மனப்பான்மை
வார இதழ் ஒன்றில் வாசித்தேன்!
||முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி!!"||
இதையும் வாங்கி வரவுல வச்சிருப்பாங்களோ!!! # டவுட்டு
Super. Attakasam.
Wishing you and your family a Happy and Prosperous New Year.
இந்த மாதிரி அவமானமெல்லாம் ரோஷம் உள்ளவங்களுக்குத்தான் உறைக்கும்!!
சாட்டையடி..
Namma Thamilanukku yamathranganu puriya arambichuduchu!!!!! Ramba santhosam!
தன்மானம் இன்னும் மிச்சமிருக்கிறது தமிழர்களிடத்தில் :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்பிகா :)
நானும் வார இதழ் ஒன்றில் வாசித்தேன். எல்லோரும் அறியக் கொடுத்த அம்பிகாவுக்கு வாழ்த்துக்கள்.
விவசாயி விஜயகுமார் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்!
வாழ்த்துகள் விஜயகுமார்!
பகிர்விற்கு நன்றி அம்பிகா!
இப்படியான மனிதர்களும் நாட்டில் வாழ்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
விஜயகுமார்
கொடுத்து விட்டார்.
ராசா கொடுப்பாரா?
நடந்த சம்பவம் தான் போல...
ராயல் சல்யுட்
விவசாயி பாராட்டுக்குரியவர்.
நல்ல பகிர்வு, அம்பிகா அக்கா.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்
படும் லஞ்சம் தான் இலவசங்கள் // மிகச் சரிதான் .. அருமையான பகிர்வு அம்பிகா..
விவசாயி விஜயகுமார் அவர்களுக்கு எனது சல்யூட்! முதல்வரே, நீர் சிறு பிள்ளை அல்ல 89 வயது முதியவர், அரை டஜன் பிள்ளைகள் இரண்டு டஜன் பேரப் பிள்ளைகள் அப்புறம் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் பெற்றவர். அப்படி இருந்துகொண்டு, தமிழன் வயிற்றில் பலூற்றாவிட்டாலும் சாராயத்தை ஊற்றி ஏறிய விடாமலாவது இருக்கலாமே. விஜயகுமார் வயதில் இளையவர், உமக்கு சொந்த புத்தி இல்லையென்றாலும், அவரது மதி நுட்பத்தில் ஒரு சதவிகிதமாவது ஏற்று கொண்டு நீர் செயல் படும். எங்களுக்கு எவ்வளவோ நன்மையாக இருக்கும். உம்மை போற்றி புகழும் வீணர்கள் நிஜத்தில் உம்மைப் புகழவில்லை. நீர் உட்கார்ந்திருக்கும் பதவிக்காக, அதிலிருந்து அவர்களுக்கு குறுக்கு வழியில் கிடைக்கும் நன்மைக்காக. ஆகவே, எந்நேரமும் திரைப் படத்துக்கு கதை எழுதுவது, படப்பிடிப்பு பார்க்க வீல் சேரில் செல்வது, நடிகைகள் ஆபசமாக ஆடும்போது உட்கார்ந்து கொண்டு பார்ப்பது போன்றவற்றை விடுத்து மக்களுக்கு நல்லது எதாச்சும் செய்ய முடியுமா என்று பாரும். நாட்டை அடமானம் வைக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மாதிரி பண்ணி எங்களை சாகடிக்க வேண்டாம்.
சிந்திக்க வைத்த பதிவு!!!
மிக அருமை!!!
அருமையான விவசாயம் செய்திருக்கிறார் அந்த விவசாயி... நான் நண்பர் ஒருவரின் பதிவில் படித்தேன். நல்ல பகிர்வு அக்கா.
சாட்டையடி கொடுத்திருக்கார் அவரை போல நாமும் சேர்ந்து சிந்திக்க நடைமுறை அரசியல் மாறும் அல்லாவ சாட்டையடி கொடுக்க ஏன் தயக்கம் சுயம் வெல்ல ஒரு ஏழை விவசாயால் முடியும் போது நம்மால் ஏன் முடியாது
நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய மனிதர்...
சாட்டையடி மனு!
அரசியல் வா(வியா)திகளுக்குத்தான் சூடும் சுரணையும் கிடையாதே.
அறிந்த செய்திதான்.. இருந்தாலும் மீண்டும் பகிரும்போது அந்த மனிதனை பெருமைப்படுத்துகிறது... ஆம்..உண்மையான மனிதன்..
ஹ்ம்...
/*இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி,
மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே
போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை
அனைத்தையும்வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ
அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
*/
எத்தனை உண்மையான வார்த்தைகள். இலட்சம் கோடி ஊழல் ஒருபக்கம் , இலவசம் ஒருபக்கம் என்று ஒன்றுக்கும் உதவாத ஆனால் மக்களை பாதிக்கும் விஷயங்கள் தான் இருக்கின்றன... :-(
நானும் வார இதழ் ஒன்றில் படித்தஞாபகம். இந்த அவமானம் ரோஷமுள்ளவங்களுக்குமட்டுமே.
நல்ல பகிர்வு அம்பிகா. புத்தாண்டுவாழ்த்துக்கள்.
உண்மையோ இல்லையோ இதை படிக்கும் ஒரு சிலராவது திருந்தினால் நல்லது.
விவசாயிக்கு பாராட்டுக்கள்...
பகிர்வுக்கு நன்றிங்க...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
Ilavasangalukakave ,tamilarkala or tamilarkale ilavasama.
Post a Comment