.
.நேற்று மாலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.
பலத்தமழை இல்லையென்றாலும், கொஞ்சம் பலத்த தூறலாக, அவ்வப்
போது கொஞ்சம் பலமாக என இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
அந்த சின்ன குடிசையின், முன்னிருந்த ஒட்டு திண்ணையில் சுருட்டி
மடக்கி உட்கார்ந்து இருந்தார் தண்டுபத்து பாட்டி. குடிசையின் பல இடங்
களில் மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. அலுமினிய போணி, தகர
வாளி, பிளாஸ்டிக்டப்பாஎன அங்கங்கே ஒவ்வொன்று, சொட்டும் துளிகளை
வாங்கிக் கொண்டிருந்தன.
பக்கத்து தெருவிலிருக்கும் இந்துஸ்கூலில் லீவு விட்டுவிட்டார்கள் போலும்
குழந்தைகள் `ஹைய்யா’ என்ற உற்சாக ஆரவாரத்துடன், `இன்னிக்கு
ஃபுல்லா மழ பெய்யுமாம்’ எனக் கத்தியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சாயங்காலம் மாதிரி அடைத்து இருட்டிக் கொண்டிருந்த வானத்தை பார்க்க,
பார்க்க பாட்டிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போலிருந்தது.
பாட்டியின் பேரே நிறைய பேருக்கு தெரியாது. பிறந்த ஊரான தண்டுபத்தி
லிருந்து வாழ்க்கை பட்டு வந்ததிலிருந்து `தண்டுபத்தாள்’ தான்.இதைப்
போல `காயாமொழியாள், மூலக்கரையாள்’, என ஊர் பெயரே சொந்த
பேரானவர்கள் நிறைய பேர் இருந்தனர். கொஞ்சம் பெரிசுகளுக்கு தண்ட
பத்தக்கா, மற்ற எல்லோருக்கும் தண்டபத்து பாட்டி தான். பாட்டி அவள்
கணவர்க்கு இரண்டாம் தாரம். அவரை விட அவர் கணவர் இருபது
வயது கிட்ட மூத்தவர். மூத்தாள் மகன் ராமசாமிக்கு 18 வயதிருக்கும்.
இவரைவிட நான்கைந்து வயது தான் குறைவு. திருமணமான கொஞ்ச
நாளிலேயே கணவர் போய் சேர்ந்துவிட, குழந்தை குட்டி இல்லாத
பாட்டி தனியானார். `சொந்த மகனே ஒண்ணும் செய்றதில்ல, இவ எங்க
நம்மள கவனிப்பா’ன்னு பாட்டி தன்கையே தனக்குதவின்னு வேலை செய்ய
ஆரம்பத்தார்.
நல்ல மினுமினுக்கும் கறுப்பு நிறம், எண்பது வயதுக்கு தளராத தேகம்.
மூணு வருஷத்துக்கு முன் `சிக்கன்குனியா’ காய்ச்சல் வரும்வரை,
பாட்டி அறுப்பு, நடவு என ஏதோ ஒரு வயல் வேலை பார்த்துக் கொண்டு
தானிருந்தார். தெருவில் முக்கால்வாசி பேரின் நடையே காய்ச்சலால்
வித்தியாசமாக மாறிவிட்டது. பாட்டியையும் மூட்டுவலி படாதபாடு படுத்தி
விட்டது. காய்ச்சலில் கிடந்த போது, ராமசாமியின் மகள் பாக்கியம் தான்
பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் முன்கோபம் அதிகமே தவிர ஓரளவு
செய்வாள். யார்யாரையோப் பார்த்து, எழுதிப்போட்டதில் முதியோர்
உதவித் தொகை 400 ரூ வருகிறது. அதில் 200 ரூ வை சாப்பாட்டுக்கு
என பாக்கியத்திடம் கொடுத்து விடுவாள். மிச்சப் பணத்தை சேர்த்து
வைத்ததில் 2000 ரூ இருக்கிறது.
கூரைக்கு புதுஓலை வைக்கலாம் என விசாரித்துப் பார்த்தாள். `ஓல
வாங்க மட்டுமே 2000 ரூ ஆவுமாம், அப்புறமா மோட்டு ஓல தனியா
வேணும், இத்துப் போன நாலஞ்சு கம்ப மாத்தணும், கூலி தலக்கி
400 ரூன்னு ரெண்டு பேருக்கு, ‘ பாட்டி தனக்குள் கணக்கு பார்த்துக்
கொண்டு இருந்தார்.
மழை விடுவதாக இல்லை. `போனதடவ ரோடு போடுறேன்னு ரோட்ட
வேற ஒசத்திப் புட்டானுவ. மழத்தண்ணீ உள்ள வந்துறும் போல இருக்கு’
எரிச்சலோடு அங்கேஇங்கேயிருந்து நாலைந்து துண்டு செங்கல்லை எடுத்து
வந்து வாசல் முன்னால அடுக்கி வச்சு, அதும்மேல கொஞ்சம் மண்ணை
அள்ளிப் போட்டு தற்காலிகதடுப்பு சுவர் அமைத்து அதையே பயத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தார். `ஹூம்... பல நாள் பாவத்த தாங்குனாலும்,
ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது போல’, அங்கலாய்த்துக் கொண்டு
இருந்தார். மழை இன்னும் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பக்க வாத்யமாக
பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொண்டது.
.
29 comments:
good one madam
அருமை அம்பிகா
அந்த கடைசியில் வர பலநாள் பாவம் புண்ணியம் ,சொற்றொடரை இந்த முறை தான் எங்கவீட்டுக்காரங்களோட ஆச்சி சொல்லி க் கேட்டேன்..
அட.. நல்லா இருக்குங்க...
அப்புறம் பாட்டி குடிசை என்னாச்சு...
மிக அருமை!
ரொம்ப கஷ்டம் :( இப்படி ஒரு பாட்டியை பற்றிய கதை தான் இந்த படம்..
http://tamilkothu.blogspot.com/2010/11/way-home-2002.html
very nice!
அருமை
மனதெல்லாம் பிசுபிசுக்கிறது மழை ஈரம்!
அருமை!
மழை நீர் வடிவதற்கான பாதைகளை சுத்தமாக மூடிவிட்டால இதைபோல் இன்னும் நிறைய பிரச்சினைகளை ஏழைகளோடு பணக்காரர்களும் சேர்ந்து அனுபவிக்கும் காலம் இன்னும் பக்கத்தில்தான் இருக்கிறது ..
பாவம் பாட்டி.. அப்புறம் மழை இந்த மாதிரி உள்ளவங்களுக்காகவே கொஞ்சமா அப்போ அப்போ பெய்யணும்னு நினைச்சுப்பேன் அம்பிகா.. சென்னையில் சில ப்ளாட்பாரவாசிகள் பாவம்..
நல்ல இடுகை.. அம்பிகா .. உண்மை போல உணரவைத்து விட்டீர்கள்
படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க.
நம்மளால உதவி செய்ய முடியுங்க. எப்பிடி செய்யறது என்று சொன்னீங்கனா இந்த பதிவுலகம் படிப்பவர்கள் உடன் செய்வாங்க. நானும் செய்வேங்க.
மழை விட்ட இரண்டொரு நாட்களில் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கூரை வைத்து விடுவார்கள்.
உங்கள் இளகிய மனதுக்கு மிகவும் நன்றி சேது.
பாட்டியின் கவலை உங்கள் பதிவில்............
நல்லா இருக்குங்க..
மனசெல்லாம் ஈரமாய் அம்பிகா !
`ஹூம்... பல நாள் பாவத்த தாங்குனாலும்,
ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது போல’, அங்கலாய்த்துக் கொண்டு
இருந்தார். மழை இன்னும் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பக்க வாத்யமாக
பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொண்டது.
......மனக்கண் முன் காட்சி விரியும் வண்ணம் எழுதி இருக்கீங்க....
அருமை! பகிர்வுக்கு நன்றி
Very nice flow.Good article
இப்போ சில வருடங்களாக மழை நிறையப்பேரை இப்படித்தான் நினைக்க வைக்கிறது.
மனதை தொடடுவிட்டது!!
தண்டுபத்து பாட்டி... மழை.. ஈரம்..
மனதில் நிற்கும் பதிவு அக்கா.
அக்கா அருமையா இருக்கு.
மழையைப் பெரும் பேறாக நினைத்து மாதம் மும்மாரி பெய்ய வேண்டிய காலம் போய், பருவத்தில் மட்டுமாவது பெய்யும் அளவான மழையைக் கூட வெறுக்கும் நிலை!! சுற்றுச் சூழல் நிலை அப்படி.
நம்ம ஊர் மழைக்காட்சி கண்முன்னால் விரிகிறது.
அன்பு அம்பிகா,
நல்லாயிருக்கு... இந்த பதிவு... தண்டுபத்து பாட்டி... ஒரு அழகான சிறுகதை... கொஞ்சம் சமூகப்பார்வையுடன்... அருமை அம்பிகா... ஆறுமுகநேரி மீன்குழம்ப மிஸ் பண்ணீட்டேனே...
அன்புடன்
ராகவன்
/*பல நாள் பாவத்த தாங்குனாலும்,
ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது */
:-( அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
Post a Comment