.
தெருவில் ஒரே கூச்சலும், களேபரமுமாயிருந்தது. இரண்டு வீடுகள்
தள்ளியிருந்த வேப்ப மரத்தடியில் படுக்க வைக்க பட்டிருந்தான், அந்த
சிறுவன். பத்து, பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. வலி
யால் துடித்துக் கொண்டிருந்தான். வலது கை ஒரு மாதிரி கோணிக்
கொண்டு கிடந்தது. அவனை சுற்றி ஒரேக் கூட்டம். ஆளாளுக்கு ஏதோ
பேசிக் கொண்டிருந்தனர்.
பக்கத்து பள்ளிக்கூடத்து மரத்தில் ஏறி விளையாடியவன், கீழே விழுந்து
கையை ஒடித்துக் கொண்டிருக்கிறான். கூட்டத்திலிருந்த ஒருவர் `அவன்
பாட்டிய எங்கே காணும்’, என்றதும், `அது வேலைக்கு போயிருக்கு,
சாயங்காலம் தான் வரும்’ என்றார் இன்னோருவர். தாயில்லாத அவனை
பாட்டி தான் ஏதோ கூலிவேலை செய்து வளர்த்துக் கொண்டிருந்தார்.
`பண்டார வெளக்காரர் கிட்டே கூட்டிட்டு போங்கப்பா’ என்றார் இன்னொரு
வர். பண்டாரவிளைக்காரர் என்பவர் அந்த சுற்றுபட்டியிலிருக்கும் எல்லா
ஊர்காரர்களுக்கும் எலும்புமுறிவுக்கு கட்டு போட்டு வைத்தியம் செய்பவர்.
அதற்குள் வைத்தியருக்கு யாரோ போன் செய்ய, அவர் பக்கத்து ஊரிலி
ருப்பதாகவும், அங்கு வர இரண்டு்மணி நேரமாகும் என்றும், வலிகுறைய
மாத்திரை கொடுத்து படுக்க வைக்குமாறும் கூறியிருக்கிறார். பக்கத்துவீட்டு
பெண்மணி சோறு வடித்த கஞ்சி கொடுத்து், மாத்திரையும் கொடுத்தார்.
இதற்குள் அவன் பாட்டி தகவல் தெரிந்து வந்து விட்டார்கள். வந்த
வேகத்தில் பையனை நாலு சாத்து சாத்தியது. `அறிவிருக்கா.? கை
ஒடஞ்சி கடக்கவன போட்டு அடிக்கியே’ என எல்லோரும் பிடித்துக்
கொண்டனர்.
`நா என்ன செய்வேன், வைத்தியருக்கு எப்படி ருவா குடுப்பேன்,
ஒவ்வொரு தடவ கட்ட வரும்போதும் அம்பது, நூறுனு குடுக்கனுமே,
நா என்ன செய்வேன். இப்படி தெண்டம் இளுத்து வுட்டுட்டானே’ என
அழுது கொண்டிருந்தாள்.
பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை. பாவம், அவள் என்ன செய்வாள்...
.
.