Monday, February 8, 2010

நினைவுகளின் பக்கங்கள்

               டீனேஜ் டைரியின் பக்கங்கள் எனும் தொடர்பதிவுக்கு நம் முல்லை அழைத்திருந்தார்கள். அந்த வயதில் டைரி எழுதும் பழக்கம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. உண்மைகளை எழுத முடியாததால் டைரி எழுதுவதில்லை என்று யாரோ ஒரு மேதை குறிப்பிட்டிருந்தார். நானும் என்னை மேதை என்று நினைத்து கொண்டு டைரி எழுதுவதில்லை. டைரி எதுவும் இல்லாததால் என் நினைவின் பக்கங்களில் இருந்து சிலவற்றை உங்களோடு பகிர்கிறேன்.

               நான் பள்ளியில் படித்த காலங்களில் யூனிபார்ம் பாவாடைதாவணிதான். அதுவும் தாவணியை பின்னால் `v shape' வர்ற மாதிரியெல்லாம் கட்டக் கூடாது. 2 1/2 மீட்டர் வாயில் தாவணி, முன்னால் 2சுருக்கு வைத்து தான் கட்ட வேணடும். நல்ல திக்கு பச்சை கலரில் பாவாடை தாவணி, ஒற்றை பின்னல், கருப்பு ரிப்பன் வைத்து மடித்து கட்ட வேண்டும். ஒரு மார்க்கமாக இருப்போம். என் ப்ரெண்ட், சுமதி னு ஒரு பொண்ணு, ஆசையா 2 மீட்டர் ல தாவணி எடுத்து வி ஷேப்ல கட்டிட்டு வந்தா. அசெம்பிளி யில நிக்கவச்சு H.M விட்ட டோஸ் ல, மறுநாளே ஒரு தாவணிய ரெண்டா வெட்டி மத்த தாவணியோட ஒட்டு போட்டு, அடக்க ஒடுக்கமா கட்டிகிட்டு வந்தா.

               டீனேஜ் டைரி குறிப்பு, சி.பி.ஐ டைரி குறிப்பு மாதிரி சுவாரஸ்யமா இல்ல னு பாக்குறீங்களா?. நான் படித்ததெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள் பள்ளிதான். கிராமம் வேறு, அதனால் பேப்பர் வைக்கிறது, ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாம் கிடையாது. அதிலும் மூன்று அண்ணன்கள், ஒருதம்பி என நாலு பையன்கள் இருக்கும் வீட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ய யாருக்கு துணிச்சல் வரும். காதலுக்கு மரியாதை பாணியில் வாங்கி கட்டிக்கொள்வோம் என்ற பயமாகக் கூட இருக்கலாம். நாங்கள் பள்ளி செல்லும் வழியில் பள்ளிக்கு கொஞ்சம் முன்னால் ஒருகடை உண்டு. அதில் பையன்கள் கூட்டமாய் நிற்பான்கள். அந்த கடையை தாண்டும் வரை நாங்கள் எதுவும் பேசமாட்டோம். ஆனாலும் ஏதாவது சொல்லி சிரிப்பான்கள். எனக்கு வில்லன் என் பெயர் தான். எப்படியோ என் பேரை தெரிஞ்சுகிட்டு, நான் போகும் போதெல்லாம் “அம்பிகையே, ஈஸ்வரியே, என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமகாரி ”ன்னு பாடுவான்கள். நானும் இரண்டொரு நாள் முறைத்துப் பார்த்தேன். அதற்குள் பள்ளி ஆண்டுவிழா வர, அதில் ஒரு நாடகத்தில் நான் ராமராக நடித்தேன். தசரதராக நடித்த என் தோழி எபனேசர், நிஜமாகவே அப்பா மாதிரி இருப்பாள்.அப்படி ஒரு ஆகிருதி, குரல். நாடகம் முடிந்த மறு நாளிலிருந்து, என்பெயர் மாறி விட்டது. ராமர் ராமர் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். உடன்வந்த என் நாடக அப்பா, `எவன் ல‘ அது ன்னு கட்டைகுரலில் அதட்ட, அனைவரும் கப்சிப். நாங்கள் H.M. இடம் புகார் செய்ய, அவர்கள் கடைக்காரரை கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலில் மறுநாளில் இருந்து கடை, கடையாக மட்டும் இருந்தது.

               கல்லூரியில் படிக்கும் போது தோழியொருத்தி, சகதோழிகளுடன் சினிமாவுக்கு போயிருக்கிறாள். அவளது அண்ணன், அவளை பார்த்துவிட்டு, தியேட்டரில் வைத்தே அவளை அடித்து அழைத்துப் போயிருக்கிறான். இப்படியும் இருப்பார்களாவென அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மாவோ, அப்பாவோ, அண்ணன்களோ, இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என எனக்கு எந்த கோடுகளும் கிழிக்கவில்லை. அண்ணன்கள், தம்பியோடு சண்டைகள், விளையாட்டுகள் இருந்தனவே தவிர சந்தேக பார்வைகளோ, மிரட்டல்களோ ஒரு நாளும் இருக்கவில்லை. என்னை ஒரு இளவரசியாகத்தான் வைத்து இருந்தார்கள்.               என் சந்தோஷமான நாட்களை நினைவுகூரச் செய்ததற்காக, முல்லை உங்களுக்கு என் அன்பும், நன்றியும்..


               நானும் தொடர்பதிவுக்கு யாரையாவது அழைக்க வேண்டுமே!. ஹூசைனம்மா, கண்ணகி, சங்கவி, ராகவன், விருப்பமிருந்தால் தொடருங்களேன்...

36 comments:

அண்ணாமலையான் said...

நினைவுகள் மலர்ச்சியாக, மகிழ்ச்சியாக இருக்கிறது

Sangkavi said...

உங்களது நினைவுகள் அருமை....

//அண்ணன்கள், தம்பியோடு சண்டைகள், விளையாட்டுகள் இருந்தனவே தவிர சந்தேக பார்வைகளோ, மிரட்டல்களோ ஒரு நாளும் இருக்கவில்லை.//

ரொம்ப கொடுத்து வைச்சவங்க நீங்க...

தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி... நிச்சயம் முயற்சி செய்கிறேன்....

சந்தனமுல்லை said...

தொடர்ந்தமைக்கு நன்றி அம்பிகா அக்கா.மிக சுவாரசியமாக இருந்தது.

அதுவும் 'ராமர்' `எவன் ல‘ - :-))))

மாதவராஜ் said...

இன்று என்ன... எல்லோரும் கடந்தகால நினைவுகளுக்குள் இழுத்துச் செல்கீறீர்கள்...! காமராஜ் எழுதிய பதிவைப் படித்தே தீராமல் இருக்கிறது!

இன்னும் நிறையச் சொல்லி இருக்கலாம்.....

தெரு, விளையாட்டுக்கள், புத்தகங்கள், என எல்லாம் நிறைந்ததுதானே டீன் ஏஜ்!

இல்லையென்றால், நானும், அண்ணன்களும் அந்தத் தெருவில் ஹீரோக்களாய் இருந்தோமே... அதையாவது
சொல்லியிருக்கலாம்.... :-)))))

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ அப்ப நானும் ஒரு மேதைங்கறீங்களா.. :)
அம்பிகையே ஈஸ்வரியே ..சூப்பர் :)

அழகான புகைப்படம்..

கண்ணகி said...

நினைவுகள் என்னையும் அழைக்கின்றன. அழைப்புக்கு நன்றி. அம்பிகா. முயற்ச்சிக்கிறேன்.

ponraj said...

மலரும் நினைவுகள் அருமை!!!
இன்னும் எழுதுங்கள்........

செ.சரவணக்குமார் said...

அருமையான நினைவுப் பகிர்வு சகோதரி.

//இல்லையென்றால், நானும், அண்ணன்களும் அந்தத் தெருவில் ஹீரோக்களாய் இருந்தோமே... அதையாவது
சொல்லியிருக்கலாம்.... :-)))))//

அப்படியா மாதவ் அண்ணா.. ரைட்டு.

க.பாலாசி said...

டீனேஜ் அனுபவங்கள் நல்லாயிருக்குங்க...

ரமேஷ் கார்த்திகேயன் said...

// அதிலும் மூன்று அண்ணன்கள், ஒருதம்பி என நாலு பையன்கள் இருக்கும் வீட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ய யாருக்கு துணிச்சல் வரும்
//

பசங்க இத தான் விரும்புவாங்க

கோமதி அரசு said...

அருமையான பகிர்வு.

Anonymous said...

இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட அந்த இணப்பை அழுத்துங்கள்=http://www.trekpay.com/?ref=169994

காமராஜ் said...

அம்பிகா...
அருமையா இருக்கு நினைவுகள்.
அந்த ப்ரௌன் கலர் சட்டை மாதுவா ?
இது நான் பார்க்காத போட்டோ .

ஷங்கர்.. said...

அதுவும் 'ராமர்' `எவன் ல‘ - :-))))//

ஆமாங்க எனக்கும் இதுதான் செம சிரிப்பு.. ஒரு காட்சியாகவே மனசுல வந்து போனது..:)) பாவாடை தாவணி - ப்ச் அது ஒரு அழகுங்க. எனக்கு பெண் குழந்தை இல்லையேன்னு ரொம்பவே பீல் பண்றேன்..:))

நல்ல பகிர்வு..வாழ்த்துக்கள்:)

Deepa said...

நல்ல பகிர்வு அக்கா. அங்கிள் சொன்னது போல் நீங்கள் இன்னும் எழுதி இருக்கலாம்.

//இல்லையென்றால், நானும், அண்ணன்களும் அந்தத் தெருவில் ஹீரோக்களாய் இருந்தோமே... அதையாவது
சொல்லியிருக்கலாம்.... :-)))))//
அதான் காதலுக்கு மரியாதை அண்ணன்கள் (வில்லன்கள்) நு சொல்லிட்டாங்க இல்லை? அப்புறமும் ஏன் இந்தக் கேள்வி?
:-))

தேவன் மாயம் said...

டீனேஜ் நினைவுகள் அருமை!!!

தமிழ் உதயம் said...

நன்றாக இருந்தது. நினைவுகளின் பக்கங்கள்- நிஜங்களின் பக்கங்களாக.

ஜெகநாதன் said...

பெல் பாட்டம் காலத்திற்கு சென்று வந்தாற்​போல இருக்கு இதைப் படிச்சது.

பெ.பா. காலத்தில் நான் பொடிப்பயல். பயங்கர ரஜினி ஃபேன். ஒரு ரஜினி படத்தைப் பாத்துட்டு வந்து வீட்டில இருக்கிற தலையணைய கத்தியால கிழிச்சி பறக்க விட்டிருக்கேன் (அதான் பயங்கர ஃபேன்)

பரிமளா என்று ஒன்றுவிட்ட அக்கா ஒருத்தி. அவளை நினைவு கூறும்​போதெல்லாம் எனக்கு அந்த பெல் பாட்டம் காலம் நினைவுக்கு வரும்.
அக்கா உடுத்தும் உடை, பேச்சு, அலங்காரம் என எல்லாம் 80களின் மீட்சியாக படும்.

அக்காவுக்கும் அவளின் +2 பள்ளித்​தோழிகளுக்கும் கமல் என்றால் உயிர். எனக்கு கமல் படம்னா திரையை கத்தியால கிழிச்சி பறக்க விடலாம்னு இருக்கும்.

ஒருமுறை என்னை கஷ்டப்பட்டு சகலகலா வல்லவனுக்கு இழுத்துப்​போயிருக்கிறார் இவர்கள் (பாதுகாப்புக்கு ஒரு ஆண்துணைன்னு நினைச்சிருப்பாங்களோ?)

படம் முடியறவரைக்கும் நான் அடங்கவே இல்லியாம். ரஜினி படம்தாண்டா இது.. ​வெயிட் பண்ணி பாரு வருவாரு என்றே 3 மணி​நேரத்தைப்​போக்கிவிட்டார்கள். அப்புறம் அக்காவோட படம் பாத்ததா நினைவில்ல.

இதை நினைவூட்டிவிட்டது உங்க இடுகை. நன்றிங்க!

அன்புடன் மலிக்கா said...

அழகிய நினைவுகளை அள்ளிதெளித்ததுபோன்ற உணர்வு அம்பிகா.

வாங்க வாங்க எங்கவீட்டுக்கும்..

ஹுஸைனம்மா said...

அம்பிகா, எழுதிட்டேன்!!

ஓரம்போ.. ஓரம்போ..

அம்பிகா said...

நன்றி அண்ணாமலையான்.

சங்கவி, உங்கள் பதிவுக்காக வெய்ட்டிங்.

முல்லை,
ஒரு அருமையான தொடர்பதிவை தொடங்கிவைத்ததற்காக நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அம்பிகா said...

மாதண்ணா,
பதிவு நீளமாக போய்விடுமோ என்ற பயம் தான்.

\\இல்லையென்றால், நானும், அண்ணன்களும் அந்தத் தெருவில் ஹீரோக்களாய் இருந்தோமே... அதையாவது
சொல்லியிருக்கலாம்.... :-)))))\\

தொடர்பதிவுக்கு ராகவன் அழைத்திருக்கிறார். ஹீரோ கதைகளெல்லாம் எடுத்து விடலாமே!!

அம்பிகா said...

நன்றி ராமலக்ஷ்மி.


கண்டிப்பா நீங்க மேதையேதான்.
நன்றி முத்துலெட்சுமி.

கண்ணகி, பதிவுக்காக காத்திருக்கிறோம்.

பேநா மூடி said...

நினைவுகள் அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, மாதவ் சார் ஒரு குட்டை உடைச்சிருக்காரே, பதிவை விட சுவாரசியமாய் ;)))

அது எவன்ல :)))

சிரிச்சு மாளல. செட்டுல ஒருத்தர் இப்படி தைரியசாலியா இருப்பாங்க போல.

அம்பிகா said...

பொன்ராஜ், நன்றி.

சரவணகுமார், வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

பாலாசி, நன்றி.

ரமேஷ் கார்த்திகேயன், வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

வாங்க கோமதிஅரசு, உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

ஆமாம் காமராஜ்அண்ணா, அது உங்கள் நண்பன் மாதுவேதான்.

வாங்க, ஷங்கர்,
அந்த தோழியை சிலமாதங்களுக்கு முன் சந்தித்தபோது இந்த நிகழ்ச்சியைக் கூறி இருவருமே சிரித்துக் கொண்டோம்.
பகிர்வுக்கு நன்றி ஷங்கர்.

அம்பிகா said...

தீபா,

வில்லன்னு சொன்னா உன் அக்கா சண்டைக்கு வரப் போகிறாள்!!!
ஹீரோயிசம் எல்லாம் பதிவாக விரைவில் வரும்.

அம்பிகா said...

நன்றி, தேவன்மாயம்.

நன்றி தமிழுதயம்.

வாங்க ஜெகநாதன்,
நீங்க ரஜினி ரசிகரா?
இப்போ??? உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

அன்புடன் மலிக்கா, உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நன்றி ஹூசைனம்மா. இதோ `ஓரம் போ’ காண வருகிறேன்.

வாங்க பேநா மூடி, உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

வாங்க அமித்தம்மா, மாதவ் சாரின் பக்கங்களும் விரைவில் வரும். ராகவன், அண்ணாவை பதிவிட அழைத்திருக்கிறார்.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு அம்பிகா.

வலை உலகை வீடு மாதிரி,ஒரே குடும்பம் மாதிரி உணர்கிற தருணங்கள்,அமித்து அப்டேட்ஸ்,பப்பு டைம்ஸ்,நேகாவின் நேரம்,இப்படி சில இடுகைகள் உண்டு.குடும்பங்களை விட்டு தூர இருக்கிற மனிதர்களை,குடும்பத்தோடு சேர்ப்பது போல் இருக்கும்.

இந்த இடுகையையும் அப்படியே உணர்கிறேன் அம்பிகா.

திருமணம் முடிந்த பிறகு உறவுகளோடு உட்கார்ந்து பேசி சிரிப்பது மாதிரியான பின்னூட்டங்களும்.

//இல்லையென்றால், நானும், அண்ணன்களும் அந்தத் தெருவில் ஹீரோக்களாய் இருந்தோமே... அதையாவது
சொல்லியிருக்கலாம்.... :-)))))//
அதான் காதலுக்கு மரியாதை அண்ணன்கள் (வில்லன்கள்) நு சொல்லிட்டாங்க இல்லை? அப்புறமும் ஏன் இந்தக் கேள்வி?
:-))

மிக ரசித்தேன் அம்பிகா,தீபா.

:-)))))

அம்பிகா said...

\\வலை உலகை வீடு மாதிரி,ஒரே குடும்பம் மாதிரி உணர்கிற தருணங்கள்,\\

நானும் பல நேரங்களில் இப்படி உணர்வதுண்டு. உங்கள், ராகவன், காமராஜ் அண்ணன் பின்னூட்டங்களை படிக்கும் போது, நீங்கள் குறிப்பிட்ட அதே மழலைகளை படிக்கும் போதென பல நேரங்களில் இப்படி உணர வாய்க்கிறது. இததனையும் தந்த வலையுலகை நினைத்து பெருமை கொள்ளவும் தோன்றுகிறது.

நன்றி, பா.ரா.

thenammailakshmanan said...

//உண்மைகளை எழுத முடியாததால் டைரி எழுதுவதில்லை என்று யாரோ ஒரு மேதை குறிப்பிட்டிருந்தார். நானும் என்னை மேதை என்று நினைத்து கொண்டு டைரி எழுதுவதில்லை...//

superb AMBIKA

thenammailakshmanan said...

//அண்ணன்கள், தம்பியோடு சண்டைகள், விளையாட்டுகள் இருந்தனவே தவிர சந்தேக பார்வைகளோ, மிரட்டல்களோ ஒரு நாளும் இருக்கவில்லை.//

இது மிக அருமை அம்பிகா

அம்பிகா said...

வாங்க தேனம்மைலக்ஷ்மணன்,
யாருமே மேதை ன்னு சொல்ல மாட்டேங்குறாங்க. அதனால் தான் இப்படி...
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

VijayaRaj J.P said...

நல்ல நினைவு..

சிறப்பான பதிவு.

மாதுவின் ஆதங்கம் சிரிப்பை வரவழைத்தது.