Showing posts with label வழக்கங்கள்.. Show all posts
Showing posts with label வழக்கங்கள்.. Show all posts

Monday, September 20, 2010

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?

.

.அந்த வீதியின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல் தலை

வருக்கோ அல்லது திருமண நிகழ்ச்சிக்கோ அல்ல. பூப்புனித நீராட்டு விழா

வுக்கான அறிவிப்பே அது. ஒரு சிறுமியின் `பெரிய’ படத்துடன்... பெருகி

வரும் புது கலாச்சாரம் இது. கிராமங்களில், சிறு நகரங்களில், மட்டு

மல்லாது, பெருநகரங்களிலும் பூப்புனித நீராட்டு விழாக்கள் இப்படி ஆடம்

பரமாக, பெரிய அளவில் கொண்டாடப்படுவது வியப்பையும் எரிச்சலை

யும் தருகின்றது.



பெண் பருவமடைந்து விட்டால் `சடங்கு’ வைப்பது சம்பிரதாயமான ஒரு

வழக்கம். முற்காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து

கொடுத்து விடுவது பழக்கமாயிருந்தது. பெண், வயதுக்கு வந்துவிட்டால்,

`எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு

வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள்

நடத்தப் பட்டனவாம். அக்காலத்தில் பெண்களை பெரியவர்களாகி விட்டால்

வெளியில் அனுப்ப மாட்டார்கள்.



ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து

பள்ளியில் பயிலுகின்றனர். இந்நிலையில், பெண்களின் உடலில் ஏற்படும்

மிக இயல்பான, இயற்கையான நிகழ்வை, இப்படி பகிங்கரமாக அறிவிக்க

வேண்டுமா? படிப்பறிவும் நாகரீகமும் வளர வளர, இத்தகு பழம் சம்பிர

தாயங்கள் குறைய வேண்டாமா? மிகநெருங்கிய உறவினர்களுடன் வீட்டில்

வைத்து `தலைக்கு ஊற்றி ’ அடக்கமாக முடித்துக் கொள்ள முடியாதா?

அதிலும், இப்போதெல்லாம் பெண்கள், 9 லிருந்தி 11 வயதுக்குள் பருவ

மடைவது அதிகரித்து வருகிறது. குழந்தைத்தனம் மாறாத இந்த சிறுமி

களை மற்றவர் பார்வையில் ஏன் `பெரிய மனுஷி’ யாக்க வேண்டும்?

குழந்தைகளாக அவர்கள் இயல்புடன் வளர விடலாமே.!

.