
.
எனக்கொரு தோழி இருந்தாள்;
விடுதி வாழ்வில் ஒரு விடியலாய்,
மனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,
தொலைத்து விட்டேன் அவளை...
அவளுக்கென விருப்பு வெறுப்புகள் இருந்ததில்லை.
என் விருப்புகளே அவள் விருப்புகளாய்,
என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,
தேடிக் கொண்டிருக்கிறேன் அவளை இன்னமும்...
கடைசிநாளின் புகைப்படம்,
கடிதம் வழிவந்த உன் ப்ரியங்கள்,
உனக்கான என் தேடல்கள்,
பொக்கிஷமாய் அத்தனையும்; நீ பார்க்கவென.
காத்திருக்கிறேன் வேலரசி!
கட்டாயம் நீ கிடைப்பாய்.
.
25 comments:
இப்படி ஒரு தோழி கிடைக்கிறது அதிசயங்க :-).
அருமை
இப்படியான நட்பை எப்படிக் கை விட்டீர்கள் அம்பிகா.
நிச்சயம்கிடைப்பாள்.
நம்பிக்கையோடு இருங்கள்.
இளம் பராய் நட்புமறக்க் முடியாதுங்க. உங்க தோழி கிடைக்கக் பிராத்திக்கிறேன்.
சிக்கிரமே கிடைத்து விடுவாள். கிடைத்த பின் மறக்காமல் எங்களுக்கும் தெரியப் படுத்தவும்
உங்க தோழி நிச்சயம் கிடைப்பாள்.
உங்கள் தோழி கிடைக்க என் பிராத்தனையும்........
அலுவலக/குடும்ப சுமைகளை காரணம் சொல்லி, நானும் பல வேலரசன்களை தொலைத்துக்கொண்டு இருக்கிறேன் :(
அருமையான கவிதை.
உங்கள் தோழியை நீங்கள் விரைவில் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.
கிடைப்பாள். விரைவில் கிடைக்க வாழ்த்துகிறேன்.
நல்ல நட்பாயிருக்கே சீக்கரம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
நட்பையும் கற்று மற.
மனம் இறுக்கமான நேரங்களில் நெருக்கமாய்,
தொலைத்து விட்டேன் அவளை...
எனக்கும் அப்படி ஒரு தோழியிருந்தாள்!!!
நல்ல கவிதை
“Good friends are hard to find, harder to leave, and impossible to forget”
“Friends are needed both for joy and for sorrow”
One loyal friend is worth ten thousand relatives."
கட்டாயம் கிடைத்ததும் எங்களுக்கும் சொல்லுங்க..
வேளரசி விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்..
கிடைத்ததும் எங்களுக்கும் சொல்லுங்க.
கண்டிப்பாய் கிடைப்பாள்
வேலரசியின் ஊருக்குப் போய் தேடிப் பாருங்க.
எல்லாருடைய வலைப்பூக்களில் விளம்பரம் தரலாம். அவர் படம் இருந்தால் தாங்க.
கவிதை தோழி அருமை.
நல்லாருக்கு சகோ.
நட்பை பிரிந்த ஏக்கம் கவிதையின் வார்த்தைகளின் வாயிலாக கண்ணீர்த்துளிகளை கசிய வைக்கிறது . மிகவும் சிறப்பான உணர்வுகளை சொல்லும் கவிதை . பகிர்வுக்கு நன்றி !
அழகு...காத்திர்ந்தல் கொடுமை..
கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்து விட்டது எனக்கும்...கூடவே நான் தொலைத்த நட்புகளும்! வாழ்க்கையின் தடங்கள்!!
என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,
அழகான வரிகள்
நன்று
என் விருப்புகளே அவள் விருப்புகளாய்,
என் வெறுப்புகளும் அவள் விருப்புகளாய்,
கட்டாயம் நீ கிடைப்பாய்.
.
நல்ல தொரு நட்புக்கு பிரிவேது கட்டாயம் கிடைப்பார் அம்பிகா
கிடைத்ததும் உங்கள் மகிழ்ச்சியை கட்டாயம் இடுகையாக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
Post a Comment