Friday, June 25, 2010

முழுமை பெற்ற காதலெல்லாம்....

.

மாமாவைத் தேடிக் கொண்டு அவர்களது நண்பர் வந்திருந்தார். சிறுவயது

முதலே அவர்களிருவரும் நெருங்கிய நண்பர்கள். மாமா ஊருக்கு வரும்

போதெல்லாம் தவறாமல் ஆஜராகி விடுவார்கள். மாமாவைப் போலவே

அம்மாவை அக்கா என்றும், அப்பாவை அத்தான் என்றும் அழைப்பார்கள்.

உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து `ரிட்டயர்ட்’ ஆனவர்கள்.அவர்கள் தேடி வரும்போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். `நீயும்

கொஞ்சம் சாப்பிடு’ என மாமா உபசரித்தார்கள். முதலில் வேண்டாமென்ற

வர்கள், `கொஞ்சம் சாப்பிடுங்கள்’என நானும் கூற, சரியென மாமாவுடன்

அமார்ந்தார்கள். காலை டிபனுக்கு பொங்கல் செய்திருந்தேன். `கொஞ்சம்

வைமா, என்றவாறே சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்தபின்,

`பொங்கல் நல்லாயிருந்த்து மா,’ என்றவரின் குரல் தழுதழுத்தது. அவரே

தொடர்ந்து,` என் வீட்ல அவளுக்கு பொங்கல்னா ரொம்ப பிடிக்கும். உடம்பு

முடியாம படுத்த பிறகு, சாப்பிட எப்பவும் பொங்கல் தான் வாங்கி கேப்பா.

மொதல்ல ஆளுக்கொரு பொங்கல் வாங்கி சாப்பிடுவோம். பெறகு சாப்பிட

முடியாம, ஒரு பொங்கல் வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடுவோம்’ என்றார்

கண்களில் நீர் மல்க. அவர்கள் என்னிடம் ஒரு போதும், இப்படி மனம்

விட்டு பேசியதில்லை. மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் மனைவி

இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தன. இழந்து விட்ட அருமை துணை

யின் நினைவுகளை, பொங்கல் கிளறி விட்டது போலும். நான் வியப்புட

னும், நெகிழ்வுடனும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.என் அம்மாவின் கடைசி நாட்களிலும், அப்பா அம்மாவை மிகவும் அன்புட

னும், பரிவுடனும் கவனித்துக்கொண்டார்கள். `ஜோதிமா, என்று மிகவும்

மென்மையாக கூப்பிடுவார்கள். இளம்வயதில் தன்னை அப்பா சரியாக

கவனிக்கவில்லை, அனுசரணையாய் நடந்து கொள்ளவில்லை என்று

அம்மாவுக்கு நிறைய மனத்தாங்கல்கள் இருந்தன. ஆனால் அதையெல்லாம்

ஈடுகட்டுவது போல், அம்மாவே நெகிழ்ந்து போய்,`அப்பா பாவம். என்னால

ரொம்ப கஷ்ட படுறாங்க’ எனும் அளவுக்கு அப்பா, அம்மாவை கவனித்துக்

கொண்டார்கள்.இளம் வயதின் கோபதாபங்கள், ஆசை நிராசைகள், வாழ்வாதார தேடல்கள்,

ஏக்கங்கள், பிணக்குகள் எல்லாம் தீர்ந்து, அன்பும், அனுசரணையும், ஆதர

வும், தோழமையும் முதுமையில் தான் தோன்றும் போலும். `` முழுமை

பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’’ என அழகான பாடல்

வரிகள் உண்டு. ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
.

19 comments:

சந்தனமுல்லை said...

உண்மைதான்...தங்கள் இடுகையுடன் உடன்படுகிறேன் அம்பிகா அக்கா. இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது...அதைப் பற்றி பிறகு பேசுவோம்! :-)

rk guru said...

muzhumai pettra kathelellam....kalayanththilthaan mudikirathu

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

ரிஷபன் said...

ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

உண்மைதான். அப்போதுதான் மனிதன் அடங்கிப் போய் யோசிக்கிறானோ?!

VELU.G said...

//
. ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

//

மிக அருமையான கருத்து

நானும் ஆமோதிக்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க மாமனாரோட அப்பா, அந்த தாத்தா கடைத்தெருக்குப் போயிட்டு வரும்போது ஆச்சிக்குப் பிடித்த கேக் ந்னு ஆப்பிள் கேக் வாங்கிட்டுவருவாங்க.. அவங்க ஜோடியை நான் கல்யாணமான புதிதில் பயங்கரமா ஓட்டுவேன்.. :)

அமைதிச்சாரல் said...

முதிர்ந்தபிறகுதான் நிறைய பேருக்கு மனைவி இருப்பதே ஞாபகம் வருது அம்பிகா :-))))))). அதுவரை அவளை ஒரு இயந்திரமா மட்டுமே பாக்கிறவங்களும் இருக்காங்க.

க.பாலாசி said...

நீங்க சொல்றதும் சரிதான்... அனுபவ முதுமையில் முழுமை பெறுகிறது காதல்...

ponraj said...

///ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.///

முற்றிலும் உண்மை!!!

நினைக்க வைத்த பதிவு!!! அருமை!!!

Deepa said...

Migavum negizhvaana idugai. kadaisi vari arumai akka.

Chitra said...

இளம் வயதின் கோபதாபங்கள், ஆசை நிராசைகள், வாழ்வாதார தேடல்கள்,

ஏக்கங்கள், பிணக்குகள் எல்லாம் தீர்ந்து, அன்பும், அனுசரணையும், ஆதர

வும், தோழமையும் முதுமையில் தான் தோன்றும் போலும். `` முழுமை

பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’’ என அழகான பாடல்

வரிகள் உண்டு. ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

...interesting topic. nicely written. :-)

அம்பிகா said...

நன்றி முல்லை.
இது தொடர்பான ஒரு இடுகை உங்களிடம் இருந்து வரும் என எதிர்பார்க்கிறேன். சரிதானா.?

நன்றி. rk guru.

நன்றி ரிஷபன்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

நன்றி VELU.G.


பெரியவர்களிடம் இப்படி விளையாடுவது மிக சந்தோஷமானது.
அப்படித்தானே முத்துலெட்சுமி.


\\அமைதிச்சாரல் said...
முதிர்ந்தபிறகுதான் நிறைய பேருக்கு மனைவி இருப்பதே ஞாபகம் வருது அம்பிகா :-))))))). அதுவரை அவளை ஒரு இயந்திரமா மட்டுமே பாக்கிறவங்களும் இருக்காங்க.\\
நிறையபேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.அமைதிச்சாரல்
கருத்துக்கு நன்றி.

நன்றி பாலாசி.

நன்றி பொன்ராஜ்.

நன்றி தீபா.

நன்றி சித்ரா.

ஹேமா said...

வயது போகும் நேரத்தில்தான் மனம் பக்குவப்படுகிறது.எல்லாம் ஓய்ந்த தருணத்தில் தன் துணையை மட்டுமே நாடி நிற்கிறது வயோதிபம்.

மாதவராஜ் said...

அம்பிகா!

இந்தக் கருத்து முழுமையானது அல்ல. நீ குறிப்பிட்ட இரு விஷயங்களிலுமே, ஆண்கள் தங்கள் துணைவியரை வயதான காலத்தில் போற்றுவதாகவும், மதிப்பதாகவும் இருக்கிறது.

ஆனால் பெண்கள் எப்போதுமே ஆண்களை மதிக்கவேச் செய்கிறார்கள். கசிந்துருகிறார்கள். அவர்களென்ன இளவயதிலேயே முதுமை அடைந்துவிட்டவர்களா?

இதுகுறித்து நிறைய பேசலாம். கொஞ்சம் யோசிக்கலாம் என்பதற்காக இவ்வளவே இப்போது.

பத்மா said...

நிச்சயம் அம்பிகா ...முதுமையில் தான் காதல் அழகு...
திருமணத்தின் வெற்றியே முதுமையில் காதலை அனுபவிப்பது தான் . அதும் நம்மூர் பெரியவர்களுக்கு வெளிப்படுத்ததெரியாமல் சிறு அக்கறையின் மூலம் அது வரும் பொது அன்பு ரெட்டிப்பாக மலர்வது தெரியும் .

அம்பிகா said...

மாதண்ணா,
பெண்கள் கசிந்துருகுவதாலும், ஆண்களை மதிப்பதாலும், மட்டுமே காதல் முழுமை அடைந்து விடுவதில்லை. எப்போது தன் காதலுக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லயோ, அங்கே காதல் செத்து விடுகிறது. வாழ்ந்தாக வேண்டுமே என்ற கடமையும், கட்டாயமுமே மட்டுமே மீதமுள்ளது.
காதலே இல்லாத போது முழுமை எங்கிருக்கும்.

ஆனால், அதே பெண்கள், இளமையில் கொடுமை படுத்தினான் என்பதற்காக, முதுமையில் கணவனை உதாசீனப்படுத்துவதில்லை.
அன்பையும், அனுசரணையையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
பதிலுக்கு அரவணைக்கவும் செய்கிறார்கள்.
அதனால் தான் காதல் முழுமை பெறுவதே முதுமையில் தானோ என்ற கருத்தில் எழுதினேன்

ராசராசசோழன் said...

ஆண்கள் நம் சமூகத்தில் அப்படி வளர்க்க பட்டுவிட்டார்கள்... எனக்கு தெரிந்த பல ஆண்கள் மனைவிகளை சரிவர கவனிப்பதில்லை...உடல் நலம் சரி இல்லாத தருணங்களில் கூட...நீங்கள் சொல்லுவதுபோல் முதுமை தான் அவர்களுக்கு பாடம் நடத்தும் போல்.

சி. கருணாகரசு said...

பாசத்தின் ஏக்கம்....
உணர்வுள்ள படைப்பு.

ஹுஸைனம்மா said...

வாழ்க்கையின் பெரும்பகுதியை தத்தம் பெற்றோர், குழந்தைகள் என்று கழித்த பிறகு, முதுமையில்தான் தமக்கென வாழ்கின்றனர். மிகுதியான அன்பு அப்போதுதான் வெளிவரும்.

ஆனால், அமைதிச்சாரல் சொன்னதுபோல, மனைவியை அப்போதுதான் மதிக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். யானைக்கொரு காலம் என்றால், பூனைக்கொரு காலம் என்பதாக தளர்ந்த காலத்தில் குத்திக்காட்டிக் கொண்டே கடமையைக் கழிக்கும் (அப்போதும் விட்டுவிடாமல்) மனைவிகளும் உண்டு!!

r.v.saravanan said...

ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

முதுமையில் முழுமை பெறுகிறது காதல்

நானும் ஆமோதிக்கிறேன்