Wednesday, May 19, 2010

விரும்பியதும்.., கிடைத்ததும்...

.
.
ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய

வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும்.+2 முடிவுகள், மதிப்பெண்கள் வெளிவந்துள்ளன. எதிர்பார்த்த மதிப்பெண்,

கூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உற்சாக மிகுதியிலும், எதிர்பார்ப்பில்

குறைந்தவர்கள் சற்று வருத்தத்திலும் இருக்கின்றனர். எதிர்காலத்தில் நாம்

என்னவாகப் போகிறோம் என்பதை முடிவு செய்வதில் பெரும்பங்கு +2

படிப்புக்கு இருப்பதால் அனைவரும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ஆனால் +2 மட்டுமே நம் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை. இன்னும் எத்

தனையோ வாய்ப்புகள் உள்ளன. நம் குழந்தைகள் துவண்டு விடாமல்

அவர்களை சரியான திசையில் வழிநடத்தி செல்வது நமது கடமை.நானும் மாணவியாய் இருந்து இத்தகைய ஒரு சூழலை எதிர்கொண்டது

இன்னும் நினைவில் பசுமையாய் படிந்துள்ளது. நான் பள்ளியில் படிக்

கும் காலத்தில் கொஞ்சம் (கொஞ்சம் தான்; நிறைய இல்லை ) நல்லா

படித்ததால், என் வீட்டில் எல்லோருக்கும் என்னை டாக்டராக்கி பார்க்க

வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆசை அவர்களுக்கு இருந்தாலும்,

படிக்க வேண்டியது நான்தானே. நானும், ஓரளவு நன்றாகத்தான் படித்

தேன். ஆனாலும் இறுதிதேர்வு மதிப்பெண்கள் காலைவாரி விட்டன.

மாடல் தேர்வில் கூட கெமிஸ்டிரியில் 180 வாங்கிய நான் இறுதிதேர்வில்

வெறும் 126 மட்டுமே வாங்கினேன். இந்த லட்சணத்தில் கெமிஸ்டிரி

மிஸ்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால் கெமிஸ்டிரியை விழுந்துவிழுந்து

படிப்பேன். மார்க்கை பார்த்து விட்டு 2 நாள் அழுகை, உண்ணாவிரதம்,

ரீ வேல்யூஷன், என வழக்கமான எல்லா சம்பிரதாயங்களும் தொடர்ந்தன.

அத்தோடு டாக்டர் கனவை மறந்து, `நாடு ஒரு நல்ல டாக்டரை இழந்து

விட்டது’ என்று நாட்டுக்கு என் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்து விட்டு

B.Com.,ல் சேர்ந்தேன், பெரிய அண்ணனை போல் `சார்ட்டர்டு அக்கவுண்

டெண்ட்’ ஆகும் ஆசையோடு. அதுவும் கனவாகவே போய், டிகிரிமுடித்து

திருமணம் செய்துகொண்டு, கரண்டியை கையில் பிடித்தேன். அவ்வளவு

தான். பின்என்ன... குழந்தைகள், அவர்கள் கல்வி.. என காலம் உருண்

டோடியது. குழந்தைகள் இருவரும் பள்ளிசெல்ல தொடங்கியதும், ஏதாவது

கோர்ஸ் படிக்கும் ஆசையில், சென்னை வந்து, கணவரின் பெற்றோர்

வீட்டில் இருந்து, பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். ஊரில், வீட்டிலேயே

ஒரு அறையை ஒதுக்கி பார்லர் ஆரம்பித்தேன். சென்ற வருடம், என்

இளைய மகனும் இஞ்சினியரிங் படிக்க சென்னை சென்ற பின், வெளியே

ஒரு சிறியபார்லரை தொடங்கி நடத்தி வருகிறேன். குழந்தைகள் இருவரும்

வெளியே படிக்க போன பின், அந்த வெறுமையில் இருந்து என்னை காப்

பாற்றிக் கொள்ள முடிகிறது. அம்மா இருக்கும் போது சில சமயங்களில்,

`நீ டாக்டராக வேணும் னு விதி இருந்திருக்கிறது. அதனால் தான் அதைப்

போன்ற ஒரு தொழிலுக்கு வந்து விட்டாய், என்று தன்னைத்தானே ஆறுதல்

படுத்திக் கொள்வார்கள்.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், கேட்பதெல்லாம் கிடைத்து விட்டால்

வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. கிடைக்காத ஒன்றுக்கான போராட்டமும்,

அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது.நம்மில் பலர், சிறுவயதில் நிறைய கனவுகளோடும், லட்சியங்களோடும்

இருந்திருப்போம். நாம் விரும்பியது கிடைத்ததா.., அல்லது கிடைத்ததை

விரும்பினோமா, என்பது நமக்குத் தான் தெரியும். நீங்கள் விரும்பியது

உங்களுக்கு கிடைத்ததா., என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தீபா,

முத்துலெட்சுமி,

ராமலக்ஷ்மி,

தேனம்மை லக்ஷ்மணன்.

விருப்பமும், நேரமும் அனுமதித்தால் தொடருங்களேன்.
.
.

25 comments:

Chitra said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், கேட்பதெல்லாம் கிடைத்து விட்டால்

வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. கிடைக்காத ஒன்றுக்கான போரட்டமும்,

அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது..... ரொம்ப நல்ல இடுகைங்க..... சுவாரசியமாக இருக்குதுங்க.

ஹேமா said...

நினைப்பதை முடிக்க முயற்சி மட்டுமே எங்கள் கையில்.
மிகுதிக்கு அதிஸ்டம்தான் அம்பிகா !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல அழுவாச்சிய கிளறிவிட்டுட்டீங்களே.. :((

malar said...

maths&bio எடுத்து படிச்சிட்டு எப்படிB.Com சேர்ந்தேங்க .

அம்பிகா said...

மலர்
\\maths&bio எடுத்து படிச்சிட்டு எப்படிB.Com சேர்ந்தேங்க \\

மலர்,
உங்கள் கமெண்ட் ஏனோ பப்ளிஷ் ஆக மாட்டேன்கிறது.
நான் படிக்கும் போது படிப்பவர்கள் குறைவு என்பதாலோ,
இந்த அளவு கடுமையான விதிமுறைகள் இல்லாததாலோ
எனக்கு B.Com கிடைத்தது
நன்றி மலர்.

அன்புடன் அருணா said...

எது செய்தாலும் விரும்பிச் செய்!என் கொள்கை இது!

VijayaRaj J.P said...

\\கிடைக்காத ஒன்றுக்கான போரட்டமும்,
அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது.//

தெளிவான வாழ்வியல் கண்ணோட்டம்.

சரியான நேரத்தில்
தேவையானப் பதிவு.

க.பாலாசி said...

//அத்தோடு டாக்டர் கனவை மறந்து, `நாடு ஒரு நல்ல டாக்டரை இழந்து
விட்டது’//

இப்டித்தான் நாடு 2003 ல ஒரு கணித மேதைய இழந்துச்சு... வேற யாரு நானுதான்...

ஆனாலும் பாத்திங்களா... எதுகிடைக்குதோ அதை ரசிச்சி பழகியே காலம் ஓடிடுச்சு.... ம்ம்...நல்ல இடுகை....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..!

ஹுஸைனம்மா said...

கிடைப்பதைக் கொண்டு நிறைவடையும் மனம் உள்ளவர்களுக்கே, இறைவன், கேட்டதை விடுத்து, வேறு தருகிறான் என்று கொள்ளலாம் இல்லையா?

அமுதா said...

/*நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், கேட்பதெல்லாம் கிடைத்து விட்டால்

வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. கிடைக்காத ஒன்றுக்கான போரட்டமும்,

அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது*/
உண்மை. நல்ல இடுகை. நினைத்தது நடக்க வேண்டும் திட்டமிட்டு வெற்றி பெறுபவர்கள் ஒரு வகை. வருவதை இயல்பாக எடுத்து வாழ்க்கையை இரசிப்பவர் ஒருவகை. எந்த பாதை என அவரவர் எடுத்து வாழ்வது சுவாரசியம். அதை இன்னொருவர் முடிவு செய்தால் மனப் போராட்டம் தான்

சந்தனமுல்லை said...

அருமையான இடுகை அம்பிகா, அக்கா!
இந்த இடுகை உங்களை நெருக்கமா ஃபீல் பண்ண வைக்குது! தங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்! :-)

soundar said...

வாங்க வாங்க வந்து என்னடைய ப்ளாக் படிங்க

LK said...

nalla pathivu madam

ராமலக்ஷ்மி said...

அருமையான பதிவு அம்பிகா. உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

அமுதா சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன்:)! விரும்பியதையே படித்தேன். விரும்பிய துறையில் ஒருவருடம் வேலையும் செய்தேன். பிறகு நானாகவே விட்டு விட்டேன். அதனால் வருத்தமென்று ஏதுமில்லை என்பதும் உண்மை:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் போஸ்ட் போட்டிருக்கேன்ப்பா அம்பிகா..

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு.

இந்த மாதிரி சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கும். படிப்பு,வேலை,திருமணம்,குழந்தைகள்& வீடு போன்றவைகளில், எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் நூறு சதவிகிதம் கிடைப்பதில்லை.
கிடைப்பதை ஏற்று வாழ்வதே,
வாழ்க்கையில் சுவாரசியம் கொடுக்கும் என்பதே என் கருத்து.

ponraj said...

அருமையான பதிவு!!

Deepa said...

சுவாரசியமான இடுகை அக்கா. நீங்கள் பார்லர் கோர்ஸ் முடித்து அதை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அம்மு பெருமையாகப் பேசுவாள்.

நானும் எழுதிட்டேன்க்கா. படிச்சிட்டுச் சொல்லுங்க.

ரிஷபன் said...

கிடைக்காத ஒன்றுக்கான போராட்டமும்,

அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது.
நூற்றுக்கு நூறு உண்மை.. சலிப்பில்லாத வாழ்க்கை அப்போதுதான் அமைகிறது..

padma said...

கிடச்சத பிடிச்சுக்க வேண்டியது தான் இல்லையா அம்பிகா?

Mahi_Granny said...

அநேகமாக எல்லோரும் கிடைத்ததை மட்டுமே 100 % விரும்பி வாழ பழகிவிட்டோம் .நல்ல மாற்கும் நல்ல பதவியும் எப்போதும் தொடர்பு உடையதாக இருப்பதில்லை.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நான் நினைப்பது எல்லாம் எனக்கு கிடைக்கிறது . காரணம் நான் எப்பொழுதும் கிடைப்பதை மட்டுமே விரும்புபவன் .பகிர்வுக்கு நன்றி

Sethu said...

Every profession, whether it is skilled or unskilled, should get its due recognition. There are hundreds of jobs being carried out by the individuals, other than highly popular and skilled profession like Doctors, Engineers, etc., that are very essential for the functioning of day-today life of every individual. So if we give importance to humanity rather than materialistic benefits, then the expectation (virumbiyathum, kidaithathum) like just becoming a doctor or engineer thru our education system would become silly. Instead of thinking bad about our weakness, if we try to improve our skills or start thinking in positive way, then every job is a golden retriever. Every individual has weakness in one or another form. Let us not belittle anyone’s job or profession.

ராஜவம்சம் said...

இது பெண்கள் பக்கம்னு சொல்லவே இல்லை!!!!