Thursday, April 8, 2010

சுயநலமென்னும் குறுகிய வட்டத்தினுள்...

சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளியோ....

ஊய்ய்ய்ங்கென ஊளையிடும் ஊழிப்பெருங் காற்றோ...

திடீரென ஆடும் கோரத் தாண்டவம்;

வாயுதேவனுக்கு யார்மீது என்ன கோபமோ...

மண்ணை வாரி தூற்றுகிறான்; அனைவரையும் சபித்தபடி...

கண்ணுக்கு புலப்படாவிடினும்

புலன்கள் உணர்ந்தன புழுதியின் வாசத்தை.



பட்டென தடைபட்டது மின்சாரம்.

நிச்சயமாய் தெரிந்தது, திரும்ப வராதென;

இரவு எப்படி தூங்க போகிறோம்...

காயப்போட்ட துணிகள் என்னாயிற்றோ...

அடுக்கடுக்காய் முளைத்தன கவலைகள்.



வீட்டின் முன் போடப்பட்ட ப்ளாஸ்டிக் கூரைகள்

படபடத்தன பயங்கர சத்தத்துடன்...

பிய்த்து கொண்டு பறந்து விடும் போலிருந்தது.

ஓட்டுவீட்டிலும், கூரைவீட்டிலும் இருப்பவர்கள்

என்ன செய்வார்கள்... பாவம்.

சுயநலமென்னும் குறுகிய வட்டத்துக்குள் இருந்ததை

அவமானமாய் உணர முடிந்தது,



ஒருநொடிதான்;

வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது

ஊறவைத்த உளுந்தும், அரிசியும்...


* * * * * * * * * * * * * * * * * * * *


நான் எழுதிய `நட்சத்திரங்களும், நாமும்.' என்ற சொற்சித்திரம், சென்ற

ஞாயிறு வண்ணகதிரில் வெளியாகியுள்ளது. இந்த சந்தோஷத்தை

உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

.

22 comments:

Chitra said...

நான் எழுதிய `நட்சத்திரங்களும், நாமும்.' என்ற சொற்சித்திரம், சென்ற

ஞாயிறு வண்ணகதிரில் வெளியாகியுள்ளது. இந்த சந்தோஷத்தை

உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


....Congratulations! Nice one!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒருநொடிதான்;

வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது

ஊறவைத்த உளுந்தும், அரிசியும்...//

உண்மைதாங்க.. நினைக்காம இருக்கமுடியுமா.. ? :)

Deepa said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
//ஞாயிறு வண்ணகதிரில் வெளியாகியுள்ளது. இந்த சந்தோஷத்தை
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். //
ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம் அக்கா!
வாழ்த்துக்க‌ள்! :-)

VijayaRaj J.P said...

வாழ்த்துக்கள் அம்பிகா.

மிக்க மகிழ்ச்சி

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துகள், பார்லிமெண்ட் படங்கள் அனைத்தும் அருமை.

ஹுஸைனம்மா said...

/வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமா - வட்டம் அல்லது கோடு.

சந்தனமுல்லை said...

ஆகா..வாழ்த்துகள் அம்பிகா அக்கா!

மிக அருமையாக இருக்கிறது - சொற்சித்திரம்

க.பாலாசி said...

//ஒருநொடிதான்;
வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது
ஊறவைத்த உளுந்தும், அரிசியும்...//

க்ளாஸ்... வார்த்தைகளில்லை.....

அருமை... அருமை....

ராமலக்ஷ்மி said...

//ஒருநொடிதான்;

வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது//

ஆமாங்க, ஏதாவது ஒன்று இழுத்துதான் விடுகிறது.

வண்ணக்கதிருக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமை ! வாழ்த்துக்கள் ..
சென்னைல ஏப்ரல் மாசத்துல இப்படி ஒரு கவிதை படிக்கறதே ஜில்லுனு இருக்குங்க :)

Anonymous said...

அருமை ! வாழ்த்துக்கள் ..
சென்னைல ஏப்ரல் மாசத்துல இப்படி ஒரு கவிதை படிக்கறதே ஜில்லுனு இருக்குங்க :)

காமராஜ் said...

வாழ்த்துக்கள் அம்பிகா.
நல்லா இருக்கு.

ponraj said...

உஙகள் கவிதை போல்,எஙகள் ஊரில் நேற்று இரவு (07.04.10-தூத்துக்குடியில்) நடந்தது!!!

அது எப்படி???

சாந்தி மாரியப்பன் said...

//வட்டத்தினின்று வெளிவர முடியாதபடி உள்ளிழுத்தது//

உண்மைதான்.. ஏதாவதொன்று இழுக்கிறது,சில சமயம் போர்த்திப்படுக்கும் சுயநலமும்.

வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு அம்பிகா!

வாழ்த்துக்கள்!

அமைதி அப்பா said...

அருமையான கவிதை.
நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
அழகிய வரிகள்...
வாழ்த்துக்கள்...

தொடரட்டும் கவிமழை..!

சுந்தரா said...

குறுகிய வட்டத்தை வெளிவரமுடியாமல் இப்படித்தான் ஆகிவிடுகிறது வாழ்க்கை

கவிதை ரொம்ப நல்லாஇருக்கு.

வண்ணக்கதிரில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

நான் எழுதிய `நட்சத்திரங்களும், நாமும்.' என்ற சொற்சித்திரம், சென்ற

ஞாயிறு வண்ணகதிரில் வெளியாகியுள்ளது. இந்த சந்தோஷத்தை

உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
//

Congrats!!

Thenammai Lakshmanan said...

ஊறவைத்த அரிசியும் உளுந்தும் உலைய வைத்துவிட்டது உண்மை அம்பிகா...

நட்சத்திரங்களும் நாமும் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்

சாமக்கோடங்கி said...

//வீட்டின் முன் போடப்பட்ட ப்ளாஸ்டிக் கூரைகள்

படபடத்தன பயங்கர சத்தத்துடன்...

பிய்த்து கொண்டு பறந்து விடும் போலிருந்தது.

ஓட்டுவீட்டிலும், கூரைவீட்டிலும் இருப்பவர்கள்

என்ன செய்வார்கள்... பாவம்.

சுயநலமென்னும் குறுகிய வட்டத்துக்குள் இருந்ததை

அவமானமாய் உணர முடிந்தது,//

ஆஹா துன்பம் வரும் வேளையிலும் மற்றவர்களுக்காக வருந்தும் உள்ளம்.. அனைவருக்கும் கிடைத்திராத அரிய வரம்..

வாழ்க...

நன்றி..

அம்பிகா said...

வாழ்த்துக்களும், பாராட்டும் தெரிவித்த அனைவர்க்கும் என் அன்பும், நன்றியும்.