.
கர்ப்பப் பை `வீக்காயிருக்கு’
`பெட்ரெஸ்ட்’ எடுக்கணும்.
அறிவுரையேற்று,
பத்துமாதமும் படுக்கையிலே
தவமிருந்தும்,
பலஹீனமாய் பிறந்த குழந்தை
பாவமாய் தூங்குவது
`இன்க்குபேட்டரில்’.
சும்மாடு தலையில் கட்டி
செங்கல் சுமக்கும்
சித்தாள் அஞ்சலைக்கு
அழகாய் பிறந்த குழந்தை
அழுக்கு துணியில், அம்மா மடியில்
சிரிக்குது தூக்கத்தில்.
.
28 comments:
கவிதை அருமை
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
நல்ல கவிதை... உண்மை...
இதுதாங்க நிதர்சனம்
மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
ஏழைகளிடத்தில் அப்பப்போ இறைவனும் இரக்கம் காட்டுகிறான்.அருமை அம்பிகா.
உழைப்புக்குத்தகுந்த கூலி
நிஜத்தை சொல்லும் கவிதை.
நல்ல கவிதை...!
இதுதான் வாழ்க்கை.
அருமை!!
வாழ்வியல் உண்மை சொல்லும் நல்ல பதிவு.
சின்ன அம்மிணி said...
உழைப்புக்குத்தகுந்த கூலி
அதே, வழிமொழிகிறேன்.
கவிதை ரொம்பப் பிடிச்சிருக்கு!
//சின்ன அம்மிணி said...
உழைப்புக்குத்தகுந்த கூலி
//
என்னா ஒரு சிந்தனை? :)
ரொம்ப நல்லாயிருக்குங்க
உழைப்புக்கு என்றுமே பலன் உண்டுங்க
ம்ம்ம்....... வித்தியாசமாக யோசித்து சொல்லி இருக்கீங்க.....
:) நல்ல முரண் தான்.. உண்மை.
அழகான் வாழ்வியல் உண்மையை ............கவிதையாக் தந்தமைக்கு நன்றி ...
கவிதை நல்லாருக்கு அம்பிகா
உண்மையில் முரண் தான் அம்பிகா அக்கா! :-(
அம்பிகா...
இதுதான் நிதர்சனம்...
கவிதை நல்லாருக்கு...
மனதார்ந்த வாழ்த்துக்கள்..!
உண்மையிலேயே முரண்தான்.
உண்மை,கவிதையானது !! அருமை!!
நல்ல பார்வை.
ஹேமா சொன்னதும் சின்ன அம்மிணி சொன்னதும்.
நல்ல கவிதை அம்பிகா.
அருமை
arumai!
கவிதை நல்லாருக்கு அம்பிகா
உலவு.காம்
க.பாலாசி
விஜய்
சின்ன அம்மிணி
சொர்ணா
அமைதி அப்பா
முனைவர்.இரா.குணசீலன்
அமிர்தவர்ஷினி அம்மா
தீபா.
வேலு.ஜி
சித்ரா
முத்துலெட்சுமி
நிலாமதி
காமராஜ் அண்ணா
முல்லை
சே.குமார்
அமைதிச்சாரல்
பொன்ராஜ்
மாதண்ணா
ராமலெக்ஷ்மி
ஈரோடு.கதிர்
Matangi Mawley
அனைவர்க்கும், என் அன்பும், நன்றியும்.
நல்லாருக்குங்க :-)
சும்மாடு தலையில் கட்டி
செங்கல் சுமக்கும்
சித்தாள் அஞ்சலைக்கு
அழகாய் பிறந்த குழந்தை
அழுக்கு துணியில், அம்மா மடியில்
சிரிக்குது தூக்கத்தில்.
நெஞ்சைத் தொட்டது உண்மையின்
பொறிகள் கவிதை வரிகளாய்!......
வாழ்த்துக்கள்....
உண்மையின் தரிசனம் அழகிய கவிதை உருவில் .வாழ்த்துக்கள் சகோ .வாருங்கள் என் தளத்திற்கும் ..
Post a Comment