Thursday, January 7, 2010

``ப்ளாக் படும் பாடு’’

குழம்பில் உப்பில்லை,

எல்லாம் இந்த

`ப்ளாக்’ ஆல் வந்தவினை

`நெட் கனெக்‌ஷன கட்’ பண்ணிரலாமா?

கோபத்தில் கணவர்....


இல்லப்பா,

`ப்ளாக டெலீட்’ பண்ணிரலாம்,

ஒத்து ஊதும் மகன்....


ஆழ்ந்த சிந்தனையில்

நான்........

அடுத்து

என்ன பதிவு போடலாம்?????.

39 comments:

கண்ணகி said...

எங்கூட்டில்யும் இதே சண்டைதான்.....இதே கதைதான்...

அண்ணாமலையான் said...

எதாவது நல்ல பதிவா போட்ட சரி..(அப்படியே கொஞ்சம் நல்ல சாப்பாடும் போடுங்க.. பாவம்)

மாதவராஜ் said...

பிளாக் படும் பாடா.... பிளாக் படுத்தும் பாடா...!

sathishsangkavi.blogspot.com said...

இது தாங்க என் வீட்லியும் நடக்குது....

உண்மைத்தமிழன் said...

அடுத்தக் கூத்தையும் இதே மாதிரி எழுதணும்னு நினைச்சுக்குங்க..

அவ்ளோதான்..!

Anonymous said...

பாவம் எஙக அண்ணன்!!!!!

சும்மாவே......???

PONRAJ-TUTICORIN

ராமலக்ஷ்மி said...

நான் கேட்க நினைத்ததை மாதவராஜ் கேட்டு விட்டார். உண்மைத் தமிழன் நல்ல சொல்யூஷன் கொடுத்து விட்டார். பிறகென்ன, தொடரு(வோம்)ங்கள் :)!

VijayaRaj J.P said...

எங்கிருந்தோ புகை வருகிறது...

சமையலறையில் கருகுவதாலா?
அல்லது
மோகன் காதுகளில் இருந்தா?

சுந்தரா said...

விடுங்க,போகப்போகப்பழகிவிடும்...

உப்பில்லாத சாப்பாடும், அப்பா பிள்ளைகளின் கோபமும் :) :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா என்ன பதிவு போடுவோம் அப்படிங்கறதே ஒரு பதிவா போயிடுச்சே ;)

முனைவர் இரா.குணசீலன் said...

வலைப்பதிவு அழகாகவுள்ளது..

சந்தனமுல்லை said...

:-))) கலக்கறீங்க மேடம்!

குடந்தை அன்புமணி said...

எதுக்கும் ஒரு லிமிட் வைச்சிக்குங்க... இல்லேன்னா உங்க வீட்டுக்காரர் பத்தியும், மகனைப் பத்தியும் நாலுவரி நல்லா எழுதிடுங்க...

நிஜமா நல்லவன் said...

:)

க.பாலாசி said...

ரொம்ம்ம்ம்ப கஷ்டம்தான். ஆனா இதையே ஒரு பதிவா போட்டுட்டீங்க பாத்தீங்களா? அங்கதான் நிக்கிறீங்க...

அம்பிகா said...

இந்த பதிவுக்கு வந்த பதில்களை பார்க்கும்போதே தெரிகிறது,
ப்ளாக் பாடாய் படுவது, அல்லது
பாடாய் படுத்துவது....
அனைவரின் பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

வாங்க குடந்தைமணி,

நான் எழுதியதை முதலில் என் கணவரிடம் தான் காட்டினேன்.
என் கணவரும், மகனும் கோபப்
படுகிறவர்களாய் இருந்தால் நான்
இவ்வளவு ஜாலியா எழுதமுடியாது.

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

கலையரசன் said...

என்ன பின்னூட்டம் போடுறதுன்னு நான் இங்க யோசிச்சிகிட்டு இருக்கேன்!!

பா.ராஜாராம் said...

//வாங்க குடந்தைமணி,

நான் எழுதியதை முதலில் என் கணவரிடம் தான் காட்டினேன்.
என் கணவரும், மகனும் கோபப்
படுகிறவர்களாய் இருந்தால் நான்
இவ்வளவு ஜாலியா எழுதமுடியாது.//

அம்பிகா வீட்டில் இந்த மாதம் நெட் கட் இல்லை!

:-))

கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு அம்பிகா!

நேசமித்ரன் said...

புரிதலுள்ள கணவர் ம்ற்றும் குழந்தைகளுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா!

ராகவன் said...

அன்பு அம்பிகா,

பிளாக்கில் இருக்கும் சுதந்திரம் அதைப் பற்றி பேசுவதில் இல்லை... உன்னப்பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன் ஸாண்டி... வேற வேல இல்ல உங்களுக்கு... கரண்ட் பில் கட்டினங்களா, பின்னாடி கதவ கறையான் அரிச்சு தின்னு தொங்கிகிட்டு இருக்கே அது சரி பண்ணனும்னு தோனுதா... கார கழுவுறது கிடையாது... சோம்பேறியா பொறுப்பில்லாம இருக்கிறதுக்கு பேசறதுக்கு உங்கள மாதிரியே ஒரு கோஷ்டி...
ஆபீஸ் விட்டு வந்தோமே... பாவம் தனியா இருந்திருக்காளே வந்து பேசுவோம்னு இருக்கா... தேடி தேடி பிடிச்சேனே நானும்...

எல்லோர் வீட்டிலும் இது தான்னு என்னால சொல்ல முடியாது, ஆனா எங்க வீட்ல இப்படி தான்...

அன்புடன்
ராகவன்...

Paleo God said...

எங்கூட்டில்யும் இதே சண்டைதான்.....இதே கதைதான்..//

எங்கூட்டில்யும் இதே கதைதான்.
:)))))

கமலேஷ் said...

அப்ப bloggar - வட்சிருக்காத பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணனும்...இல்ல்லேன்னா நிச்சயம் உப்பில்லாத சோருதான்னு நினைக்கிறேன்...நல்லா பதிவா போடணும்னு யோசிகிரதுல தப்பில்ல ஆனால்...பாவம் கொஞ்சம் சாபாட்லயும் அப்படியே உப்பை போடுங்க அக்கா...நல்லா ரசிக்கும் படி இருக்கிறது உங்களின் எழுத்துக்கள்...வாழ்த்துக்கள்...

VijayaRaj J.P said...

இன்றைக்கு குழம்பில் உப்பு இல்லை என்று
கோபப்பட்டால்...அடுத்த நாள் அந்த உப்பை
கூடுதலாகப் போட்டு சமன் செய்யலாமே...

Deepa said...

:-))) கலக்கிட்டீங்க அக்கா!

அம்பிகா said...

விஜியண்ணா,
என் `ப்ளாக்’ ஐ ஒரேயடியா க்ளோஸ்
பண்ண வழி சொல்ற மாதிரி தெரியுது.

அம்பிகா said...

வாங்க உண்மைத்தமிழன்,
முனைவர் இரா.குணசீலன்,
குடந்தை.மணி,
நிஜமா நல்லவன்,
நான் ஆதவன்,
அன்புடன் அருணா,
பலாபட்டறை,
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட
அனைவர்க்கும் அன்பும், நன்றியும்

சாந்தி மாரியப்பன் said...

என்னாச்சுங்கிறதையே பதிவா போட்டுடுங்க.அப்பிடியே குழம்புல கொஞ்சம் உப்பையும் போட்டுடுங்க.:-)).

தமிழ் உதயம் said...

கணினி முன் உட்கார நேரம் ஒதுக்கி வைங்க. அதிகப்பட்சம் இரண்டு மணி நேரம் ஒரு நாளைக்கு. இடுகை எழுத தனியா கொஞ்ச நேரம். நா அப்படித்தான் பண்றேன்.

அம்பிகா said...

அமைதிச்சாரல்,

தமிழுதயம்,

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி

காமராஜ் said...

அடுத்தது கவிதையா, புறப்படு தங்கச்சீ, கொழுத்து.
அழகாயிருக்கு அம்பிகா.

வால்பையன் said...

கொழம்பு வச்சதே பெரிய விசயம், அதுல உப்பு வேற வேணுமாமாம்!

Priya said...

வாவ், சிம்பிலி சூப்பர்ப்!

அம்பிகா said...

நன்றி, காமராஜ் அண்ணா.

வாங்க வால்பையன்,
நீங்க சொன்னமாதிரி பதில் சொன்னா
உண்மையிலேயே `ப்ளாக் டெலீட்’
ஆயிரும்.
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

ப்ரியா உங்கள்
முதல் வருகைக்கும், பகிர்வுக்கும்
நன்றி.

priyamudanprabu said...

mmm அவங்களுக்கு அவங்க கஸ்டம்

முகுந்த்; Amma said...

blog bug கடி என்னாலயும் தாங்க முடியலீங்க. எங்க வீட்டில இப்போ தான் ஆரம்பிச்சிருக்கார். :)

அமைதி அப்பா said...

எல்லோர் வீட்டிலும் இதுதான் நடக்குதா?
எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதுன்னு வருத்தப்பட்டேன்...!