Friday, April 30, 2010

பொருந்தா திருமணம்; பொறுமையான வாழ்வு

.
.
சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தாள், அவள்.

அதிக நெருக்கமில்லாவிடினும், என் விளையாட்டு தோழி அவள். ஆறு

பெண்கள், நான்கு பையன்கள் என பெரிய குடும்பம் அவர்களுடையது.

ஓரளவு வசதி படைத்தவர்கள் தான், இருந்தும் யாரையும் படிக்கவைக்க

வில்லை. அவளது மூன்று அக்காள்களுக்கு ஏற்கனவே திருமணமாகி

இருந்தது.



அவள் பின் வீட்டு தோழி அவளிடம், அவள் சித்தப்பா ஊரிலிருந்து வந்தி

ருப்பதாகவும், அவருக்கு பெண்பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறியபோது

உங்கசித்தப்பா ரொம்ப வயசானவரா தெரியுறாரே, அவருக்கு எப்படி பெண்

கிடைக்கும் என கேலி செய்திருக்கிறாள். பாவம். அவள் விதியை அவள்

அறிந்திருக்கவில்லை. அவளது வீட்டில், அந்த தோழியின் சித்தப்பாவுக்கே

திருமணம் பேசி முடிவு செய்து விட்டனர். சில சமயம் உண்மை,

கற்பனையை விட மோசமானதாக அமைந்து விடுகிறது. அவருக்கு 32

வயது. அவளுக்கு 17 வயது தான். அவர் சென்னையில் ஏதோ கடை

வைத்திருப்பதாக சொன்னார்கள். திருமணம் முடிந்து அவள் சென்னை

போய்விட்டாள்.



நான் சென்னையில் அண்ணன் வீட்டிலிருந்த போது, அம்மாவும் நானும்

அவளை மார்கெட்டில் சந்தித்தோம். வீட்டுக்கு வரும்படி அழைத்ததால்

வீட்டுக்கும் போயிருந்தோம். திரும்பி வரும் போது அம்மா,` பாவம்

அவள். ஏதோ பிரச்சனை போலிருக்கிறது. அவள் முகமே சரியில்லை’

என்றார்கள். சில வருடங்கள் கழித்து ஊரில் கோயிலில் அவளை பார்த்த

போது அதிர்ந்து விட்டேன். கழுத்து முகமெல்லாம் தழும்புகள், தீக்காயங்

கள். என்னவாயிற்று என்றபோது கண்கலங்க நின்றாள், பேச முடியாமல்.

பக்கத்துவீட்டு அக்கா என் கையை அழுத்தி பேசாமலிருக்கும் படி சைகை

செய்யவும் அமைதியாகி விட்டேன். பக்கத்தில், அவள் கையை பிடித்தபடி

சிறுபெண், ஏழெட்டு வயதிருக்கும், மாநிறமாக, நல்ல களையாக, சுருள்

சுருளான முடியுடன், அவள் பெண் தான், பாவமாக நின்றிருந்தது. உடன்

வந்த அக்கா கூறினார்கள், அவள் கணவன் மிகவும் சந்தேக பேர்வழியாம்.

கடைக்கு போகும் போது அவளை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு தான்

போவாராம். திடீர் திடீரென திரும்பி வருவாராம். கஷ்டம் தாங்க முடியா

மல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கிறாள். சில மாதங்கள்

சிகிச்சைக்கு பின் ஊர் வந்திருக்கிறாள். இப்பவும் வீட்டில், இவளுக்கு

`நல்லபுத்தி ...?’ சொல்லி கணவன் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்

போகிறார்களாம். சில நாட்கள் அவள் நினைவாகவே இருந்தது.



பல வருடங்கள் இடைவெளிக்கு பின், சமீபத்தில், அவளை ஒரு திருமண

வீட்டில் சந்தித்தேன். ஒரு சுற்று இல்லை பல சுற்று, அடையாளமே தெரி

யாமல் குண்டாகி இருந்தாள். கையில் ஒரு பெண்குழந்தை, அவளது

பேத்தியாம். நல்ல கலகலப்பாக பேசினாள். கழுத்தில், முகத்தில் அந்த

தீக்காய தழும்புகள் இன்னும் மாறாமலிருந்தன. வெளியே தெரியாமல்,

இதைப் போல் எத்தனை தழும்புகளோ, மாறாத வடுக்களாய் மனதில்...

அவள் மட்டுமே அறிவாள்.
.
.

18 comments:

AkashSankar said...

வாழ்கை மிக மிக குழப்பமானது... அதில் பல அப்பாவிகள் முகவரி தொலைத்துவிடுகின்றனர்.. ஆண்டவா...

sathishsangkavi.blogspot.com said...

//வெளியே தெரியாமல்,

இதைப் போல் எத்தனை தழும்புகளோ, மாறாத வடுக்களாய் மனதில்...

அவள் மட்டுமே அறிவாள்.//

நிச்சயம் அவள் மட்டுமே அறிவாள்....

உங்கள் தோழி போல் நிறைய பேர் இருக்கிறார்கள்... அவர்கள் சோகம் அவர்களுக்கு மட்டுமே.....

ponraj said...

உங்கள் பதிவை படித்து,மனசு மிகவும் கஷ்டமாக இருக்கு!!
இப்படியும் நடக்குமா?? வேதனைடா சாமி.... (ஆமாம் யார் அந்த சாமி)

கபிலன் said...

இப்படியெல்லாம் இன்னும் நடக்குதேன்னு நினைக்கும் போது வருத்தமாக இருக்கு.
எப்போ மாறுமோ..

ரிஷபன் said...

வெளியே தெரியாமல்,

இதைப் போல் எத்தனை தழும்புகளோ, மாறாத வடுக்களாய் மனதில்...

அவள் மட்டுமே அறிவாள்.
கற்பனையை விட நிஜம் ரொம்பவே கொடூரம் சில இடங்களில்..

சாந்தி மாரியப்பன் said...

நிறைய வாழ்க்கைகள் இப்படி, பொறுமையில்தான் ஓடிக்கிட்டிருக்கு.

அமைதி அப்பா said...

இன்னும் இது மாதிரி பல கிராமங்களில் நடந்து கொண்டுதான் உள்ளது. தலைப்பே முழு விஷயத்தையும் சொல்லிவிடுகிறது.

VijayaRaj J.P said...

பொருத்தமான தலைப்பு.

சில பெற்றோர் பெண்குழந்தைகளை
கரையேற்றிவிடுவதாக கருதி
கிணற்றில் தள்ளி விடுகிறார்கள்.

நீந்திக்கொண்டே இருக்கும் அவர்களை
காலம்தான் கரை சேர்க்கிறது.

ஹேமா said...

வாழ்க்கை அமைவது அதிஸ்டம் அம்பிகா.

பா.ராஜாராம் said...

எவ்வளவு விதமான வாழ்வுகள் சகோ.. :-(

பெண் குழந்தை வைத்திருக்கிற என்னை போன்ற தகப்பனுக்கு,எச்சரிக்கை மணி.

Chitra said...

இப்பவும் வீட்டில், இவளுக்கு

`நல்லபுத்தி ...?’ சொல்லி கணவன் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்

போகிறார்களாம். சில நாட்கள் அவள் நினைவாகவே இருந்தது.



....... வாசிக்கும் போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எத்தனை பெண்களின் ஊமை மனதில் சோக வெள்ளம் அடித்து கொண்டிருக்கிறதோ?

ரோகிணிசிவா said...

அழுத்தமான பதிவு ,
சில நேரங்களில் விவாகம் ரத்து ஆவது ஒரு வரம், அது பெண்ணை மீண்டும் பிறக்கச் செய்யும்

மாதவராஜ் said...

பெண் வாழ்வு என்பது இன்னும் எத்தனை எத்தனையோ வலிகளும், தழும்புகளும் நிறைந்தது. முன்னர் சுமந்த பெண்கள் இப்போது அங்கங்கு உதற முற்படுகின்றனர். காலம் எப்போதும் ஒன்று போலிராது.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால்
இது போன்று நடக்கும் வாய்ப்பு அதிகம். திருமணத்திற்கு முன்பே நன்கு
பெண்ணின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும்..

Thenammai Lakshmanan said...

உண்மை அம்பிகா இந்த மதிரி பலபேர் இருக்காங்க.. ந்ானும் வருந்தி இருக்கேன் அவங்களுக்காய் வேறென்ன செய்ய

Matangi Mawley said...

ithai naan verum vaarthaikalin korvai endru kooda enni vittirukkalaam! aanaal neengal ezhuthiya vitham, intha paazhum manathil, thangal ovvoru vaarthayayum kaatchiyaaka maarith thondrivittathu! ennaal ithai vaarthaikal endru vida mudiyavillai! avalam! ippadi oru vaarthai undallavaa thamizhil? ippothu vilangiyathu, atharku artham! ithai naan "nalla ezhuththu" endru sollikkondu vidappovathillai. ippadi neengal ezhuthi- en manathil ippadippadip patta vethaigalai alippatharku ungalukku entha urimayum kidayaathu! iruppinum, maniraai piranthuvittamayaal, thangalaith thaamey varuththikkollum vargaththai saarnthamayaal, ithai naan kandikkappovathillai. pizhaiththuppongal!

thodarnthu ezhuthavum!

ஹுஸைனம்மா said...

//நல்ல கலகலப்பாக பேசினாள்//

சோகங்களை உதறிவாழப் பழகிவிட்டாள் போல!!

சுந்தரா said...

நானும் இதுபோல நிறையபேரைப் பார்த்திருக்கிறேன் அம்பிகா.

சலிக்கச் சலிக்க சோகத்தைச் சுமந்துவிட்டு, விரக்தியாகப் பேசுகிற அவர்களின் பேச்சைக் கேட்கவே கஷ்டமாக இருக்கும்.