தண்ணீர்தினத்தையொட்டி, முத்துலெட்சுமி, முல்லை, தீபா, என பலரும்
அவரவர் பாணியில் அருமையாக நிறைய கருத்துக்களை தொகுத்து பதி
விட்டுள்ளனர். என்னையும் இந்த தொடர்பதிவுக்கு `அமைதிசாரல் ’
அழைத்து இருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். நானும் என் பங்குக்கு
நான் அறிந்தவற்றை இங்கே பதிவிடுகிறேன்.
உலகின் இரண்டாவது, மக்கள் தொகை அதிகமான நாடு. ஆனால் இங்கே
200 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இது அமெரிக்க
மக்கள்தொகையை விட 2 1/2 மடங்கு அதிகம். இந்தியாவில் பரவும்
தொற்றுநோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவுபவை. ஆண்டுதோறும்
டயோரியா நோயால் மட்டும் 7,00,000. இந்தியர்கள் இறக்கின்றனர்.
அய்வுகள் கூறும் உண்மைகள் இவை.
நம் நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபட்டு கொண்டிருக்கும்அவலங்கள்
நமக்கே தெரியும். இந்த50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள்,
இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல் , நேரிடையாக
கலப்பதால், நீர்நிலைகளும்,
வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால்
நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.
இந்தியா... அழகான பல நதிகள் நிறைந்த நாடு. நதிகளை தாயாய்,
புனிதமாய், தெய்வமாய் போற்றுவோம். ஆனால் பாதுகாக்க மட்டும்
மாட்டோம். இந்தியாவின் அதிமுக்கிய நதியான கங்கையின் இன்றைய
நிலை என்ன? உலகின் மிக அழுக்கானநதிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
`கங்காஜலம் ’ என்றாலே புனிதம் என்பது போய், குளித்தால் தோல்
நோய்கள் வரும், குடிநீராக பயன்படுத்த தகுதியற்றது என்றெல்லாம் கூற
படுகின்றன. இரசாயன கழிவுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், அதிக அளவு
சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இற்ந்தவர்
களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள், இவை
அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான நதியை அழுக்காக்கி விட்டது.
யமுனை உள்ளிட்ட பல நதிகளுக்கும் இதே கதிதான். இங்கே ,
தமிழ்நாட்டில் பவானியாறு, திருப்பூர் சாயபட்டறை கழிவுகளால் மாசு
படுத்த படுகிறது.
அடுத்து நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம்,
நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம். அதிக
பயன்பாடு, போதிய மழையின்மை, இவற்றோடு` கோகோ கோலா ’
கம்பெனிகளும் நிலத்தடி நீர்வறட்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக
கருத படுகிறது. இக்கம்பெனிக்கு இந்தியா முழுமையும், 52 பாட்டிலிங்
மையங்கள் உள்ளன. கேரளாவில் இதன் காரணமாகவே,`பிளாச்சிமேடு’
என்னும் கிராமம் நிலத்தடி நீரையிழந்து விட்டதும், அங்கு டிரக்குகள்
மூலம் குடிநீர் விநியோகிக்க படும் அவலமும் தெரிய வந்துள்ளது.
`கோக் குடிப்பது ஒரு இந்திய விவசாயியின் இரத்தத்தை குடிப்பதற்கு
ஒப்பானது’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், விற்பனை அமோகமாக
தான் உள்ளது.
இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் அறிவியல் மையம், கோக், பெப்சி
முதலான மென் பானங்களை பரிசோதித்த பின் வெளியிட்ட தகவல்,
`இவை மூன்று அல்லது ஐந்து வகை பூச்சிகொல்லிகள் கலந்த
காக்டெய்ல்’’ என்பது தான்.
அவ்வப்போது கரப்பான், பல்லி இவற்றின் உடல்களை பாதுகாக்கும்
ஃபார்மலின் திரவமாகவும் செயல் படுகிறது. பத்து நாட்கள் சர்ச்சைகள்,
அடங்கியபின், மறுபடி விற்பனை முன்னைப் போலவே...
கேடு பயக்கும் என தெரிந்தும், இதன் கவர்ச்சி விளம்பரங்களில் மயங்கி
நாமும் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு இணையான,
இதை விடவும் சுவை மிகுந்த `பொவண்ட்டோ’ காளிமார்க் தயாரிப்புகள்
பிற இந்திய தயாரிப்புகளை உபயோகிக்க நம் குழந்தைகளை நாம்
பழக்கலாமே.!
என் உறவினர் ஒருவர் தெரிவித்த தகவல் இது. அவர் வேலை செய்யும்
அலுவலகத்தில், அவரது நண்பரொருவர், கோகோ கோலா’ வை நன்றாக
வாஷ்பேசின் முழுவதும் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்ய
வாஷ்பேசின் பளீச்சோ பளீச் என மின்னியதாம். நீங்களும் உபயோகித்து
பார்க்கலாமே.!
நீர்நிலைகள் மாசுபடுதல் குறித்து நிறைய , நிறைய பேசுகிறோம்; நிறைய
எழுதுகிறோம். ஆனால் தீர்வு....?
21 comments:
//நீர்நிலைகள் மாசுபடுதல் குறித்து நிறைய , நிறைய பேசுகிறோம்; நிறைய
எழுதுகிறோம். ஆனால் தீர்வு....?//
சரியாச் சொன்னீங்க....
இதற்குத் தீர்வு இன்றைய அரசியல்வாதிகள் கையில்தான் இருக்கு...
நல்ல பதிவு அம்பிகா..
வாஷ்பேசின் கழுவக்கூட அத வாங்கக்கூடாதுங்கறேன் நான்..அப்படிஎன்னத்துக்கு காசைக் கொண்டு போய் அவங்களுக்கு குடுப்பானேன்.. :)
பவண்டோ மாதிரி உள்ளூர்கலர்கள் மதுரையில் சின்னப்பிள்ளையில் நிறைய குடிச்சிருக்கோ ம். இப்ப உள்ளூர்லகூட பெப்சி கோலா ப்ரிட்ஜ் தராங்கன்னு அதைத்தான் கடைக்கார அண்ணாச்சிங்க விக்கிறாங்க.. :(
நல்லா எழுதி இருக்கீங்க அம்பிகா!
ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் செயல்களையும் செயல்படுத்தவேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது... விழிப்புணர்வை நம்மிலிருந்தும் வளர்ப்போம்...
நல்ல இடுகை... அவசியமானதும்கூட....
நல்லா சொல்லியிருக்கீங்க அம்பிகா அக்கா - அங்கங்கே உஙக டச்...ரசித்தேன்! :-)
பல விசயங்கள் புள்ளிவிபரங்களுடன்...அருமை
கங்காஜலம் ’ என்றாலே புனிதம் (மூட நம்பிக்கை????)---காரணம்
அதிக அளவு சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இற்ந்தவர்
களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள்-----காரியம்?
முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தொடங்குங்கள்!
உங்கள் வீட்டில் எது குளிர் பானம்?
தகுந்த சமயத்தில் தேவையன அவசியமான பதிவு அம்பிகா
பதிவிட்டதற்கு நன்றி. நாட்டின் நிலைமையை நன்கு அலசியுள்ளீர்கள்
தண்ணீர் தினத்துக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கு அன்னிக்குத்தான் நான் பிறந்தனாம்
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அம்பிகா. காளிமார்க் பொவெண்ட்டோ..நினைவு படுத்திவிட்டீர்கள், ம்ம்:(!
நல்லா எழுதியிருக்கீங்க.. எல்லா ஊர்லயும் நதி மாசுபடுதல் தொடருது.. யார் மனசு வச்சு தண்ணீரைக் காப்பாத்த போறோம்?
சகோதரி உங்கள் கருத்து அருமை
நல்லாச் சொல்லியிருக்கீங்க அம்பிகா.
ஆனா, நம்ம மக்களுக்கு இதெல்லாம் புரியவே மாடேங்குது :(
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம்
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!
நல்ல பதிவு அம்பிகா.
உங்கள் வருத்ததிற்கு தீர்வு அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது.
Dear Ambika,
Good one. Each and every one us should keep a record of the initiatives taken by us on our daily life. Also, we should share the ideas to preserve the water, water table, water bodies etc.,
Regards,
Ragavan
Dear Ambika,
I've read the comments given by various bloggers, friends.
Nobody did admit that the initiatives should begin from us.(except one)
Charity begins at home...We should look our daily routine, what are hazardous things, we dump on the environment on a daily basis. Could we atleast try to avoid plastic covers and polythene bags usage? Recycle, reuse and reduce shall we do?
your cosmetic things have somany hazardous chemicals in it, what are we goind to do on this?
I suppose, we should take the blame on us to repair it. this is my humble opinion.
Sorry if i hurt somebody.
Regards,
Ragavan
அந்த வாஷ்பேசின் மேட்டர் :)))
http://deepaneha.blogspot.com/2010/03/blog-post_24.html
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். இயன்ற போது எழுதவும்!
அன்புடன்,
தீபா
நல்ல கருத்துக்கள்.
அம்பிகா, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
Post a Comment