Sunday, March 28, 2010

கதைகள்... கேட்டதும், வாசித்ததும்.

கதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து

கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு

வாரம் சென்னை சென்று விட்டதால், நேற்றுதான் வலைப்பக்கம்

வரவும், அழைப்பினை அறியவும் முடிந்தது.கதைகள் கேட்ட அனுபவம் பற்றி சொல்வதானால், மாதுஅண்ணன்

முன்பு எழுதியிருந்ததைப் போல் அப்பாவின் அம்மா, செங்குழிஆச்சி

பற்றிதான் முதலில் சொல்ல வேண்டும். மிக நேர்த்தியான விவரணை

யுடன், அவர்கள் கதை சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம்.

மகாபாரத கதையை அதன் கிளை கதைகளோடு அருமையாக சொல்

வார்கள். நாங்கள் ஐந்துபேர் என்பதால் எங்களையே பஞ்சபாண்டவர்

களாய் கற்பனை செய்துகொண்டு உரையாடுவோம். அடுத்து அவர்கள்

வரும் வரை முந்தின கதையே எங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

பின்னாட்களில், டிவியில் மகாபாரதம் பார்த்திருந்தாலும், `வியாசர்

விருந்து’ படித்திருந்தாலும், அத்தனையிலும் இனியதாய் இருந்தவை

ஆச்சியின் கதைகளே!ஆச்சிக்கு அடுத்தபடி, அம்மாவை சொல்லலாம். எங்களுக்கு அவர்கள்

அதிகம் கதை சொன்னதில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நிறைய கதை

சொல்வார்கள். தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள்,

இன்னும் நிறைய கற்பனை கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய

`பணியாரமழை’ கதை, பேரன் பேத்திகள் இடையே பிரபலம். கதை

சொல்வதை விட கேட்பது சுகமானது. கதை சொல்வதற்கு நிறைய

கற்பனை திறனும், பொறுமையும், அதுவும் சிறு குழந்தைகள் கேட்கும்

கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறையவே பொறுமை அவசியம். நானும்

குழந்தைகளோடு அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் கடைகுட்டி எங்கள் தம்பி. செல்லமாய் குட்டி. அவனைப்

போல, கதாபாதிரத்துக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி, அத்தனை பாவத்

துடன், வேறு யாராலாவது கதை சொல்ல முடியுமா, என்பது தெரியாது.

அந்த ஏழுநாட்கள், பார்த்து விட்டு வந்து, பாலக்காட்டு மாதவனாக, பாக்ய

ராஜ் குரலில் அதன் ஜோக்ஸை வரிவரியாய் விவரித்தது, `மணல்கயிறு’

கிஷ்மூ குரலில், `பொண்டாட்டியோட சினிமாக்கு போக 1\2 நாள் லீவு

வேணும்’ என்றது, எஸ். வி. சேகர் குரலில் ,` பொய்யை மூட்டை

மூட்டையா கட்டி வச்சிருக்காங்க’ என்றது, என எல்லாமே நினைவில்

இருக்கிறது; அவன் மட்டும் இல்லை.
வாசிப்பானுபவத்தை பொறுத்தமட்டில், சிறு வயதில் நிறைய படிப்பேன்,

பைத்தியமாக, அம்மாவிடம் திட்டு வாங்கும் அளவுக்கு. இது தான் என்ற

இலக்கின்றி, எது கிடைத்தாலும், படித்திருக்கிறேன். முத்து காமிக்ஸில்

தொடங்கி, தமிழ்வாணன், லக்ஷ்மி, அனுராதாரமணன், சிவசங்கரி,

இந்துமதி, வாசந்தி, சாவி, அதன்பின் சாண்டில்யன், கல்கி, சுஜாதா,

தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என எல்லோருடைய கதைகளையும்

படிப்பேன். தேர்ந்தெடுத்தெல்லாம் படிக்க அப்போது தெரியாது. கல்கி,

சுஜாதா, தி.ஜா. இந்துமதி இவர்களின் எழுத்துக்கள், பின்னாட்களில்

என்னை கவர்ந்தன. மோகமுள் என்னை பாதித்திருக்கிறது. `பொன்னியின்

செல்வனை’ வியந்திருக்கிறேன்; `சிவகாமியின் சபதத்தில்’ உருகி

யிருக்கிறேன். கல்லூரி நாட்களில் தோழி தந்த எண்டமூரிவீரேந்திரநாத்

எழுதிய `துளசிதளத்தை’ எங்களுக்குள் விவாதித்திருக்கிறோம். ருஷ்ய

மொழி பெயர்ப்பு நாவல்கள், அலெக்ஸாந்தர் பூஷ்கின் எழுதிய `காப்டன்

மகள்’ `போர்முனையில் ஒரு பத்திரிக்கை நிருபரின் அனுபவங்கள்’

என கிடைத்ததை எல்லாம் படித்திருக்கிறேன். திருமணமாகி முதல்

குழந்தை பிறக்கும் வரை இந்த வாசிப்பானுபவம் தொடர்ந்தது. அதன்

பின் சுத்தமாக நின்றே போயிற்று எனலாம். அவ்வப்போது கிடைக்கும்

வாராந்தரிகள் தவிர்த்து எதுவுமே வாசிக்கவில்லை. இப்போது, வலை

யுலகில் நுழைந்தபின் வாசிப்பில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இப்போதைய தலைமுறையினரிடம் வாசிக்கும் ஆர்வம் மிக

குறைந்த அளவே உள்ளது. ஹாரிபாட்டரில் லயிக்கும் அவர்களை, தமிழ்

எழுத்துக்கள் கவர்ந்ததாக தெரியவில்லை. தீபா எழுதியிருப்பதைப் போல்

அவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் உண்டாக்க வேண்டும்.என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. நான் அழைக்க

விரும்புவது,

சுந்தரா,

அமைதிச்சாரல்,

முகுந்த் அம்மா.

விரும்பினால் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து

கொள்ளுங்களேன்

21 comments:

Chitra said...

ஹாரிபாட்டரில் லயிக்கும் அவர்களை, தமிழ்

எழுத்துக்கள் கவர்ந்ததாக தெரியவில்லை. தீபா எழுதியிருப்பதைப் போல்

அவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் உண்டாக்க வேண்டும்.


....குழந்தைகளுக்கு டிவியில் இருக்கும் ஆர்வம், புத்தகத்தில் இல்லை. பாட புத்தகங்கள் ஆதிக்கத்தில், மற்ற புத்தகங்கள் மறைந்து போகின்றன. ///அவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் உண்டாக்க வேண்டும்./// very true.

க.பாலாசி said...

//ஆனால் இப்போதைய தலைமுறையினரிடம் வாசிக்கும் ஆர்வம் மிக
குறைந்த அளவே உள்ளது//

உண்மைதான்.. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமையே காரணமாகவும் இருக்கிறது.

நல்ல அனுபவ இடுகை.....

LK said...

//உண்மைதான்.. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமையே காரணமாகவும் இருக்கிறது.

most of the parents wants them to concentrate on studies only. This is because society respect only those who score above 95% not the others

Deepa said...

அழைப்பை ஏற்றுச் சிற‌ப்பாக‌ எழுதிய‌மைக்கு நன்றி அம்பிகா அக்கா!
//கதை சொல்வதற்கு நிறைய
கற்பனை திறனும், பொறுமையும், அதுவும் சிறு குழந்தைகள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறையவே பொறுமை அவசியம். //
ஆமாம், ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம் இது.
உங்கள் வாசிப்பு அனுபவம் பிரமிப்பைத் தருகிறது. இடையில் நின்று போனது வருத்தம் தான் என்றாலும்...
//இப்போது, வலை யுலகில் நுழைந்தபின் வாசிப்பில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.//
நிச்சயம் விட்ட இடத்திலிருந்து தொடர்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது எனக்கு.

சுந்தரா said...

அனுபவங்களை அருமையாகத் தொகுத்திருக்கீங்க அம்பிகா.

அழைப்புக்கு நன்றி.

விரைவில் எழுதுகிறேன்.

VijayaRaj J.P said...

ஆச்சியின் மகாபாரதம் இன்னமும்
மனதில் நிறைந்திருக்கிறது.

நல்லப்பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த ஏழுநாட்கள், பார்த்து விட்டு வந்து, பாலக்காட்டு மாதவனாக, பாக்ய

ராஜ் குரலில் அதன் ஜோக்ஸை வரிவரியாய் விவரித்தது, `மணல்கயிறு’

கிஷ்மூ குரலில், `பொண்டாட்டியோட சினிமாக்கு போக 1\2 நாள் லீவு

வேணும்’ என்றது, எஸ். வி. சேகர் குரலில் ,` பொய்யை மூட்டை

மூட்டையா கட்டி வச்சிருக்காங்க’ என்றது, என எல்லாமே நினைவில்

இருக்கிறது; அவன் மட்டும் இல்லை.
//

:(

முகுந்த் அம்மா said...

ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க அம்பிகா. இந்தியாவில இருக்கும் வரை தமிழ் புத்தகங்கள் கிடைப்பது பெரிய பிரச்சனை ஆக இருக்கவில்லை. ஆனா இங்க என்ன பண்ணுறது? என் பையனுக்காக ஆத்திச்சுடி, கொன்றைவேந்தன் எல்லாம் ப்ராஜெக்ட் மதுரை தளத்தில போய் டவுன்லோட் செய்து இருக்கேன். ஆனா, மத்த புத்தகங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல.

என்னையும் அழைத்ததற்கு நன்றிங்க.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

{{{பின்னாட்களில், டிவியில் மகாபாரதம் பார்த்திருந்தாலும், `வியாசர்
விருந்து’ படித்திருந்தாலும், அத்தனையிலும் இனியதாய் இருந்தவை
ஆச்சியின் கதைகளே!}}}}}

உண்மைதான் !!ஆயிரம் கதைகளை படித்திருந்தாலும் பாட்டி சொல்லும் கதைக்கு ஈடாகாது சகோதரி!! பகிர்வுக்கு நன்றி!!

மாதவராஜ் said...

அம்பிகா,

அற்புதமான காலங்களை நிழலாடச் செய்தது.

சே.குமார் said...

vaasikkum thiran ippa ella idathilayum kurainthachunnga... kuzhanthaingalukku vaasikka naama kandippaga katruththaranum. nalla iduka.

ஐந்திணை said...

ஓ!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனுபவங்களை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள்.

ஹுஸைனம்மா said...

நாம் வாசிப்பதைப் பார்த்தால், தானே பிள்ளைகளும் வாசிப்பார்கள்தான். இருந்தாலும் டிவி அவர்களை இன்னும் அதிகம் ஈர்க்கிறது. எங்கள் வீட்டில் சுவாரசியமான சேனல்கள் இல்லாததால், வேறு வழியின்றி சில சமயம் புத்தகங்களுக்குத் திரும்புகிறார்கள்.

அனுபவம் பகிர்ந்தது சிறப்பாக இருக்கிறது. தம்பி இப்ப இல்லை என்பது வருத்தமாக இருக்கீறது.

Uma said...

//கதை சொல்வதற்கு நிறைய
கற்பனை திறனும், பொறுமையும், அதுவும் சிறு குழந்தைகள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறையவே பொறுமை அவசியம்.// ஆமாம்! :)

காமராஜ் said...

குட்டியிடம் நான் அதிகமான கதைகள் கேட்டிருக்கிறேன்.
குறிப்பாக குஜாராத் கதைகள்.(சண்டையில்லாத)கஜல்,மற்றும்
ஹிந்திப்பாடல்கள் அதன் அர்த்தம்.குட்டி சிரிக்கிறான் அந்த தெற்றுப்பல் தெரிய

thenammailakshmanan said...

உண்மைதான் அம்பிகா குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதுவே சரி

அம்பிகா said...

உண்மைதான் சித்ரா.
நாமே பாடங்களத்தானே திணிக்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி.


நன்றி பாலாசி.


நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி LK.


நன்றி தீபா.

நன்றி சுந்தரா.

நன்றி விஜியண்ணா.

பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம் முகுந்த் அம்மா.

அம்பிகா said...

பகிர்வுக்கு நன்றி பனித்துளி ஷங்கர்.

நன்றி மாதண்ணா.

நன்றி குமார்.

நன்றி ஐந்திணை.

நன்றி அமித்தம்மா.

பகிர்வுக்கு நன்றி ஹுசைனம்மா.

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி உமா.

நன்றி காமராஜ் அண்ணா.

நன்றி தேனம்மை.

ராமலக்ஷ்மி said...

அருமையாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அம்பிகா.

ராமலக்ஷ்மி said...

//குழந்தை பிறக்கும் வரை இந்த வாசிப்பானுபவம் தொடர்ந்தது. அதன்
பின் சுத்தமாக நின்றே போயிற்று எனலாம். அவ்வப்போது கிடைக்கும்
வாராந்தரிகள் தவிர்த்து எதுவுமே வாசிக்கவில்லை. இப்போது, வலை
யுலகில் நுழைந்தபின் வாசிப்பில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.//

இதே அனுபவம்தான் எனக்கும்:)! என் வாசிப்பனுபவம் பற்றி ஆதிமூலக்கிருஷ்ணன் பதிவில் வந்த பேட்டியிலும் சொல்லியிருந்தேன். ஆமாங்க இனி மறுபடி வாசிக்க ஆரம்பிப்போம்.