.
1. நம் கண்கள் பிறந்ததிலிருந்து ஒரேஅளவில் தான் இருக்கின்றன. ஆனால்,
நம் காதுகள், மூக்கு, இவைகள் வளர்வதை நிறுத்துவதே இல்லை.
2. வெங்காயம் உரிக்கும் போது கண்களில் நீர் வழிவது இயற்கை. ஆனால்,
சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் நீர்
வழியாதாம். அழுமூஞ்சி பெண்கள் முயற்சித்து பார்க்கலாம்.
3. உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம்
பெயரைத்தான்.
4. பூனை, ஒட்டகம், ஒட்டகசிவிங்கி ஆகியவை நடக்குமபோது வலதுபாதம்
வலதுபாதம், இடது பாதம், இடது பாதம் என்றே நடக்கும். லெஃப்ட்,
ரைட் என்ற `மார்ச்பாஸ்ட்’ கிடையாது.
5. ஹெட்ஃபோன் உபயோகிப்பவர் கவனத்துக்கு;- ஒருமணி நேரத்துக்கு
மேலாக ஹெட்ஃபோன் அணிந்து கொண்டிருந்தால் காதுகளில்
உண்டாகும் பாக்டீரீயா 700 மடங்கு அதிகரிக்குமாம்.
6. சூயிங்கம்மை விழுங்கினால் குடலுக்குள் ஒட்டிக் கொண்டுவிடும் என்பது
பொதுவான நம்பிக்கை. ஆனால் உண்மையில் அது கழிவு மூலம் வெளி
யேறிவிடும்.
7. லியர்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதிக் கொண்டே, மற்றொரு
கையால் வரையும் வல்லமை படைத்தவர்.
8. கிளி, முயல் ஆகியவை தலையை திருப்பாமலே பின்புறம் பார்க்கும்
வல்லமை படைத்தவை.
9. month, silver, purple இந்த மூன்று வார்த்தைகளுக்கும் rhyming ஆன
அங்கில வார்த்தைகள் கிடையாது.
10. சஹாரா பாலைவனத்தில் 1979 ல் பனிப்பொழிவு ஏற்பட்டதாம்.
.
.
24 comments:
நல்ல தொகுப்பும் பகிர்வும்
நல்ல தகவல்கள்!!!
//ஆனால்,
சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் நீர்
வழியாதாம்.//
நல்ல ஐடியாவா இருக்குங்க..(கல்யாணத்துக்கப்பறம் யூஸ் ஆகும்ல..அதனால்தான்)
நல்ல பகிர்வு..
/பூனை, ஒட்டகம், ஒட்டகசிவிங்கி ஆகியவை நடக்குமபோது ... `மார்ச்பாஸ்ட்’ கிடையாது//
புதுத் தகவல்!! பூனை, ஒட்டகம் நடக்கும்போது கவனிக்கணும் இனி!!
//month, silver, purple இந்த மூன்று வார்த்தைகளுக்கும் rhyming ஆன அங்கில வார்த்தைகள் கிடையாது//
உடனே கூகுளிச்சதுல கிடைச்சுது!! தோராயமா ரைமிங் வார்த்தைகள் செட் பண்ணிருக்காங்க இங்க!!
http://en.wikipedia.org/wiki/List_of_English_words_without_rhymes
:-)))))))
சுவாரஸ்யமான விந்தைகளும். பகிர்வுக்கு நன்றி அம்பிகா.
உபோயகமான பதிவுங்க.. வாழ்துக்கள்!
//க.பாலாசி said...
நல்ல ஐடியாவா இருக்குங்க..(கல்யாணத்துக்கப்பறம் யூஸ் ஆகும்ல..அதனால்தான்) //
பாலாசி... உனக்குத்தானே!!!
இப்பவே யூஸ் ஆகுமே ராசா!!!
// ஹெட்ஃபோன் உபயோகிப்பவர் கவனத்துக்கு;- ஒருமணி நேரத்துக்கு
மேலாக ஹெட்ஃபோன் அணிந்து கொண்டிருந்தால் காதுகளில்
உண்டாகும் பாக்டீரீயா 700 மடங்கு அதிகரிக்குமாம்.//
True ..true
3. உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம்பெயரைத்தான்.
உண்மைதான். காதலிக்காத வரை.
Good ones!
3. உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம்
பெயரைத்தான்.
..... aaha..... me the 3% ha,ha,ha,ha....
அப்படியா.. :0
\\தமிழ் உதயம் said...
3. உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம்பெயரைத்தான்.
உண்மைதான். காதலிக்காத வரை//
இது லாஜிக்..
நம் உடல் வளர்ச்சி நின்ற பிறகும்
காது,மூக்கு வளருமா?
அம்பிகா...அத்தனை
விஷயங்களும் புதுமை.
//உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான்.//
காதலன் அல்லது காதலி பெயர்ன்னுதானே சொல்றாங்க !
சுவாரசியம்!
பகிர்வுக்கு நன்றி அம்பிகா.
பயனுள்ள குறிப்புகள்..
உண்மையிலே
வியப்பூட்டும் விந்தைகள்...! தாம்.
எங்க புடிச்சீங்க....நல்ல தகவல்....
நல்ல தொகுப்பு, நல்ல தகவல்கள்...
க.பாலாசி said...
//ஆனால்,
சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் நீர்
வழியாதாம்.//
நல்ல ஐடியாவா இருக்குங்க..(கல்யாணத்துக்கப்பறம் யூஸ் ஆகும்ல..அதனால்தான்)//
என்னைப்போல் நீங்களும் நேர்மையா இருக்கிங்க பாலாசி.
//ஆனால்,
சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் நீர்
வழியாதாம்.//
அடடா....இத்தனை நாள் தெரியாமப்போச்சே????
ஆச்ஸ்ரீயமான பல தகவல்கள்...நன்றி.அம்பிகா..
இது அறியாத விஷயங்களை[விழி வளர்ச்சி தவிர]
அனைத்துமே எனக்கு புதிய செய்திகள்.
நான் பேனா வாங்கியவுடன் என் காதலியின் பெயரைத்தான் எழுதிப்பார்ப்பேன்..
Post a Comment