Sunday, June 27, 2010

பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?

.
நேற்று இணையத்தில் ஏதோ தேடிக் கொண்டிருந்த போது, கீழ்க்கண்ட

கட்டுரை என் கவனத்தை ஈர்த்தது. `பெண்கள் எதை விரும்புகிறார்கள்.?’

என்ற கேள்வியும் அதற்கான பதில்களும் தொகுக்கப் பட்டிருந்தன. பலதரப்

பட்ட பதில்கள்... நகைச்சுவையாய், எள்ளலாய், மனோதத்துவ ரீதியாய்.,

படிக்க மிக ரசனையாய் அமைந்திருந்தன. அதைப் படித்ததும், இதே கேள்வி

நம் பதிவுலக நண்பர்கள், நண்பிகள் முன் வைக்கப் பட்டால், அவர்கள் பதில்

என்னவாயிருக்கும் என்ற ஆர்வமும் எழுந்தது. இதோ கேள்வி உங்கள்

முன்.


பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?


யாரிடமிருந்து, எப்போது, என்பதெல்லாம் உங்கள் ஊகத்துக்கே விடப்

படுகிறது.

`பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழ்ந்தும்;

பெண்மனது என்னவென்று புரிய வில்லையோ.?’

எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

`ஆழம் எது அய்யா - அந்த பொம்பள மனசு தாய்யா’

என புலம்புவர்களும் இருக்கிறார்கள்.

காலம் காலமாய் பெண் ஒரு புரியாத புதிர், என்றே வர்ணிக்கப் பட்டு

வருகிறாள். அந்தப் புதிரைப் பற்றிய உங்கள் புரிதல் என்னவென்று

தெரியப் படுத்துங்களேன்.
.
.

25 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பெண்களின் பெருமைகளை சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை . சுருக்கமாக
பொறுமையின் இருப்பிடம் பெண்!
புயலின் பிறப்பிடம் பெண் !

மதுரை சரவணன் said...

பெண்கள் உண்மையின் இருப்பிடம் ..அவர்களுக்கு போலி பாசாங்கு பிடிக்காது ...இருந்தாலும் உமக்கு பதிவர்களை மாட்டிவிட்டு வேடிக்கைபார்க்க எவ்வளவு மகிழ்ச்சி...

Chitra said...

Thsts my next post ..... after a proper survey. :-)

Chitra said...

Our likes depend on the MOOD. :-)

ஹேமா said...

அம்பிகா...நான் ஓட்டு மட்டும் போட்டிட்டு வேடிக்கைதான் பார்க்கப்போறேன்.

சொல்லட்டும் ஆண்கள் !

ஷர்புதீன் said...

அம்பிகா...நான் ஓட்டு மட்டும் போட்டிட்டு வேடிக்கைதான் பார்க்கப்போறேன்.

சொல்லட்டும் ஆண்கள் !

Jey said...

//பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?///

எனங்க அது முடியிர காரியமா?..

Cool Boy கிருத்திகன். said...

அது தெரிஞசா ஏன் தலைப்ப பாத்துட்டு உள்ள வர்றோம...?

Sabarinathan Arthanari said...

நல்ல கேள்வி. :)

என் அனுபவத்தில் தன்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பு கொடுத்தலை விரும்புவார்கள் என உணர்கிறேன்.

pinkyrose said...

sathyamaha piriyaththai thaan
atharkahathaan varhal porumai kolhirarhal
atharkahathan avarhal sahikkirarhal
atharkahathaan ellamum
"ennada saptiya .../
intha oru kelvila viluntha penkal ethna pernu yaarukkachum therituma.?

அன்புடன் அருணா said...

That depends upon the climate of the heart of the lady!

VijayaRaj J.P said...

ஆண்கள் எந்த எந்த வயதில்
எதையெல்லாம் விரும்பினார்களோ,
அதை போலவே தான் பெண்களின்
விருப்பமும் இருக்கும் என்று
எண்ணுகிறேன்.

Jayadeva said...

கடல் ரொம்ப ஆழம்தான், யாரும் அதனோட அடியைத் தொட்டிருக்கக் கூட முடியாதுதான், ஒத்துக்கறேன், ஆனா ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பல் எல்லாம் அனாசயமா மிதந்துகிட்டு கண்டம் விட்டு வேறு கண்டத்துக்குப் போகும், அதிலிருந்து முத்து, பவளம் இன்னும் என்னென்னமோ எடுப்பாங்க, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெட்ரோல் எடுப்பாங்க, அதிலிருந்து என்னென்ன காரியம் ஆகணுமோ அதையெல்லாம் சுளுவா மனுஷன் சாதிச்சுக்கிறான் என்பதும் கண்கூடு. இந்த பொம்பிளைகளை புரிஞ்சுக்க முடியாது. அதே சமயம், அதிகம் படிக்காத ஒருத்தன், நன்றாகப் படித்த பெரிய பெரிய கம்பனிகளில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் முப்பத்துக்கும் மேற்பட்ட அழகான பெண்களை கல்யாணம் பண்ணி அனுபவித்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் நகைகளை எடுத்துக் கொண்டு, அவர்களின் முதலிரவை நீலப் படம் எடுத்து வித்திருக்கிறான். [அவனைப் பாத்தா படிச்சவன் மாதிரி கூட இல்ல, படிச்சவனும் இல்ல, கோழித் திருடன் மாதிரி இருக்கான்!] எவ்வளவு கேனைகள் இவளுங்கன்னு பாத்துக்கோங்க. ஆழம் இருந்து எதுக்குப் பிரயோஜனம்? உண்மையை பேசணும், வெட்டி பந்தா இருக்கக் கூடாது, கட்டினவளைத் தவிர வேற யாரையும் நினைச்சுப் பாக்கக் கூட கூடாது நேர்மையா இருக்கணும் என்றெல்லாம் சிந்திக்கிரவனுக்கு பெண்கள் ஆழம் தெரியாத கடல்தான், ஏமாத்தணும் என்று நினைக்கிறவன் அவளுங்ககிட்ட எல்லாம் சாதிச்சுக்குவான். இதுதான் பெண்களின் சிதம்பர ரகசியம்.

ஹுஸைனம்மா said...

இத ஒரு ஆராய்ச்சி பண்ற விஷயமா ஆக்குன புண்ணியவான் மட்டும் என் கையில் கிடைச்சா!!?? ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படி பேசிபேசியே பெருசாக்கிட்டாங்க!!:-(

:-)))))

Priya said...

//பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?//..... அவ்வளவு சுலபமா ஒருவரியில் சொல்லிட முடியுமா!!!!

எத்தனை பிற‌விக்கொண்டாலும் நான் பெண்ணாக பிறப்பதையே விரும்புகிறேன். இந்த விருப்பத்திலேயே எல்லாமே அடக்க‌ம் என்று எண்ணுகிறேன்!

ponraj said...

///`ஆழம் எது அய்யா - அந்த பொம்பள மனசு தாய்யா’
என புலம்புவர்களும் இருக்கிறார்கள்///

ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குள் கேட்டு அறிய வேண்டிய கேள்வியும்,பதிலும் அது !!!

///காலம் காலமாய் பெண் ஒரு புரியாத புதிர்///

ஏமாந்தவனும்,புரியாதவனும் சொல்லுவது!!!

ராமலக்ஷ்மி said...

தனி மனித விருப்பங்கள் என்பதே என் எண்ணம் அம்பிகா.

thenammailakshmanan said...

சரவணன் சொன்னது ரிப்பிட்டு.. அருமை சரவணன்.:)

ராசராசசோழன் said...

நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன்...முடியல...

சி. கருணாகரசு said...

அழகைவிட... நேர்மையை விருப்புவாங்க.

பா.ராஜாராம் said...

//பெண்கள் எதை விரும்புகிறார்கள்?//

as i am suffering from severe feaver and head ake please grand me leave for only one day.

thanking you teacher. :-)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஏதோ சொல்லணும்னு தான் இருக்கு,ஆனா நமக்கு எதுக்கு வம்பு!
ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு நான் சொல்லப் போக....


அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

R.Gopi said...

பெண்களின் பெருமையை பட்டியலிடும் போது, என்னுள் எழுந்த ஒரு கருத்து இதோ :

பெண் என்பவள் உண்மையின் இருப்பிடம்...

போலியான பாசாங்குகள் புறம் தள்ளுபவள்

பொறுமையின் சிகரம்

போற்றுதலுக்குரியவள்...

நேர்மையை விரும்புபவள்...

Meerapriyan said...

pengal virumbuvathu anbu- paasam- suyamariyathai-meerapriyan

r.v.saravanan said...

தூய்மையான அன்புக்கு மரியாதை தருபவள்