.
தெருவில் ஒரே கூச்சலும், களேபரமுமாயிருந்தது. இரண்டு வீடுகள்
தள்ளியிருந்த வேப்ப மரத்தடியில் படுக்க வைக்க பட்டிருந்தான், அந்த
சிறுவன். பத்து, பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. வலி
யால் துடித்துக் கொண்டிருந்தான். வலது கை ஒரு மாதிரி கோணிக்
கொண்டு கிடந்தது. அவனை சுற்றி ஒரேக் கூட்டம். ஆளாளுக்கு ஏதோ
பேசிக் கொண்டிருந்தனர்.
பக்கத்து பள்ளிக்கூடத்து மரத்தில் ஏறி விளையாடியவன், கீழே விழுந்து
கையை ஒடித்துக் கொண்டிருக்கிறான். கூட்டத்திலிருந்த ஒருவர் `அவன்
பாட்டிய எங்கே காணும்’, என்றதும், `அது வேலைக்கு போயிருக்கு,
சாயங்காலம் தான் வரும்’ என்றார் இன்னோருவர். தாயில்லாத அவனை
பாட்டி தான் ஏதோ கூலிவேலை செய்து வளர்த்துக் கொண்டிருந்தார்.
`பண்டார வெளக்காரர் கிட்டே கூட்டிட்டு போங்கப்பா’ என்றார் இன்னொரு
வர். பண்டாரவிளைக்காரர் என்பவர் அந்த சுற்றுபட்டியிலிருக்கும் எல்லா
ஊர்காரர்களுக்கும் எலும்புமுறிவுக்கு கட்டு போட்டு வைத்தியம் செய்பவர்.
அதற்குள் வைத்தியருக்கு யாரோ போன் செய்ய, அவர் பக்கத்து ஊரிலி
ருப்பதாகவும், அங்கு வர இரண்டு்மணி நேரமாகும் என்றும், வலிகுறைய
மாத்திரை கொடுத்து படுக்க வைக்குமாறும் கூறியிருக்கிறார். பக்கத்துவீட்டு
பெண்மணி சோறு வடித்த கஞ்சி கொடுத்து், மாத்திரையும் கொடுத்தார்.
இதற்குள் அவன் பாட்டி தகவல் தெரிந்து வந்து விட்டார்கள். வந்த
வேகத்தில் பையனை நாலு சாத்து சாத்தியது. `அறிவிருக்கா.? கை
ஒடஞ்சி கடக்கவன போட்டு அடிக்கியே’ என எல்லோரும் பிடித்துக்
கொண்டனர்.
`நா என்ன செய்வேன், வைத்தியருக்கு எப்படி ருவா குடுப்பேன்,
ஒவ்வொரு தடவ கட்ட வரும்போதும் அம்பது, நூறுனு குடுக்கனுமே,
நா என்ன செய்வேன். இப்படி தெண்டம் இளுத்து வுட்டுட்டானே’ என
அழுது கொண்டிருந்தாள்.
பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை. பாவம், அவள் என்ன செய்வாள்...
.
.
33 comments:
//பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை//
உண்மை.
நல்ல பதிவு நண்பா
என்ன செய்வது... வறுமை கொடியதுதான்.//பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை//...;(
விரக்திதான்...
சரியான தலைப்பு....
//பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை//
சரியாச் சொன்னீங்க
வறுமை மிகவும் கொடிது
நறுக்கென்ற இடுகை; தலைப்பும்.
கண்கள் கலங்கியது.
உண்மைதான். வறுமை கொடிது தான். எல்லா தவறுக்கும் காரணமாக போவது இந்த கொடிது தான்.
சரியான தலைப்பு....
படிக்கும்போதே மனசு வலிக்கிறது...
அடிபட்டு விட்டதே என்று பாசத்தில் வருந்த நேரம் வைக்காமல் ஏழ்மை அந்த வருத்தத்தை சாப்பிட்டு விடும்
கண்டிப்பாக வறுமை கொடிது
நல்ல பதிவு
///பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை. பாவம், அவள் என்ன செய்வாள்..///
பாவம் அந்த சிறுவன்!!!
யாருக்கு தெரியும் அவனின் வலி ???
உண்மை..அம்பிகா...இயலாமையினால்வந்த வேதனையில் அடிக்கும் அடி..
பாசத்தை இந்த ஏழ்மை புறந்தள்ளியதாக தெரியவில்லை. இன்னும் இறுக்கிவிட்டதாகவே நினைக்கிறேன். அந்த பிடிப்பில் எழும் கோபம் கொஞ்சம் வறுமை கலந்து வந்திருக்கும்...
படிக்கிறப்பயே மனசு கனமாகுதுங்க.
நிஜம்தான்
யதார்த்தம்.
முகத்திலடிக்கும் உண்மை இது..!
வறுமை கொடியது.. அதனினும் கொடியது இளமையில் வறுமை..!
நெகிழவைத்த அருமையான கதை. ரொம்ப நல்லாருக்கு அம்பிகா.
இளமையில் வறுமையைப் போல கொடுமையான விஷயம் வேறு உண்டா?
ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா.
வறுமைப்பட்ட வீடுகளில் நடக்கும் இயல்பான நிலை இதுதான் அம்பிகா.
இது வெறுப்பல்ல இயலாமை.
இயலாமையில் வரும் வேதனை, எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது..
மிக அருமை
சில ரணங்கள் அவரவர்களால் மட்டுமே உணர முடிகிறது
நல்ல பதிவு
//பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை//
வறுமை மிகவும் கொடிது.
//பாசத்தை புறந்தள்ளியது ஏழ்மை//
வலிக்கும் வரிகள்
/பாவம், அவள் என்ன செய்வாள்... /
காந்தி ஒரு முறை கூட அவுங்கள பார்த்து சிரிக்கறதே இல்ல...
உண்மைதான் அம்பிகா ஏழ்மை கொடியது..
பாசத்தைக் கூட காட்ட விடாமல் செய்து விடுகிறது இல்லாமை.. யதார்த்தம் மின்னும் படைப்பு.
இந்த மாதிரி அடி வாங்கிய ஞாபகம் நிறைய இருக்கிறது.
பண்டாரவிளை? திருநெல்வேலி?
ஆமாங்க!
அரிது அரிது மானுடறாய்ப் பிறத்தல் அரிது. கொடிது கொடிது ஏழ்மை கொடிது. அதனினும் கொடிது ஏழ்மை கண்டு பிறர்குதவா எண்ணம்.
நல்ல கதை,சரளமான நடை
தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..
http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_28.html
Post a Comment