Saturday, September 11, 2010

எங்கள் பிள்ளையார்.

.

தாத்தா விடு, அந்த காலத்து வீடு. முன்வாசலில் பெரிய திண்ணை,

அதைத் தொடர்ந்து பெரியக்கூடம், உள்முற்றம், சின்னக்கூடம், சின்ன

சின்ன அறைகள், அறைவீடு, அடுப்பாங்கரை, பின்னால் தோட்டம்,

மாட்டுத்தொழுவம், பின்வாசல் என அடுத்தத்தெரு வரை நீண்டிருக்கும்.

வீட்டின் முன் பக்கத்தை இடித்து `ரீமாடல் , செய்யும் போது, வீட்டின்

முன்னால் பிள்ளையார் கோயில் வைக்க வேண்டுமென அத்தை

(மாமியார்) சொன்னதால், திண்ணை இருந்த இடத்தில் பிள்ளையார்

கோயில் கட்டப் பட்டு பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு குடிவந்தார். அன்றி

லிருந்து அவரும் எங்கள் வீட்டின் நிரந்தர அங்கத்தினர் ஆகிப் போனார்.



அவரை எங்களில் ஒருவராக நினைத்து உரையாடிக் கொள்வோம். வேண்டு

கோள்களைக் கூட செல்லமாகவோ, மிரட்டலாகவோ அவர்முன் வைப்போம்.

தொலைந்து போன மோதிரத்தையோ, பையன்களின் பேனாவையோ, தேடித்

தருவதில் தொடங்கி, குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் போனால்,

விரைவில் குணமாக்குவதென, நிறைய வேலைகள் தருவோம். வேண்டு

தல்கள் நிறைவேறும் போது மாலை வாங்கி போடுவதாக வேண்டிக் கொள்

வோம். வேண்டியது நடந்துவிட்டால் சந்தோஷத்துடனும், நடக்காவிட்டால்

`அடுத்த தடவையாவது ஒழுங்காக நிறைவேற்றி வை’ என மிரட்டலுடனும்

மாலை வாங்கி போட்டு விடுவோம். இப்படி நிறைய மாலைகள் வாங்கி

விடுவார் எங்களிடமிருந்து.



பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு வந்த புதிதில்தான், `பிள்ளையார் பால் குடிக்

கிறார்’ என்ற வதந்தி நாடு முழுவதும் பரவியது. தெருவிலிருந்த சிலபெண்

களும், கிண்ணத்தில் பாலுடனும், ஸ்பூனுடனும் எங்கள் பிள்ளையாரை

முற்றுகையிட்டு பால் குடிக்கவைக்க முயற்சித்தனர். `பிள்ளையார் பால்

குடிக்கலியே’ என்று எங்கள் பிள்ளையாரின் சக்தியை சந்தேகிக்கவும், எரிச்

சலாகிப் போன நான், `எங்கள் பிள்ளையார் சின்னக் குழந்தை, ஸ்பூனில்

குடிக்கத் தெரியாது, வேணும்னா ஃபீடிங் பாட்டிலில் குடுத்துப் பாருங்க’

என்றதும் என்னை வினோதமாக பார்த்தவாறே நகர்ந்தனர்.







எங்கள் பிள்ளையார் மிகவும் சாது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை

செய்து, அவருக்கு படைக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை

போன்றவற்றை , பக்கத்து வீட்டு குழந்தைகள், நாங்கள் சாப்பிடுவதை

சந்தோஷமாக ரசிப்பாரேத் தவிர, எந்த வன்முறைகளையும் தூண்ட

மாட்டார்.

ஊர்வலம் நடத்தச் சொல்லி எங்களை தொந்தரவு செய்ய மாட்டார்.

ஊர்வலத்துக்காக கட்டாய வசூல் செய்ய மாட்டார்.

ஊர்வலம் செல்லும் போது எதிர்படும் டிவி கேபிள்களை அராஜகமாக

அறுத்தெறிய சொல்ல மாட்டார்.

இரசாயனங்களால் சிலைசெய்து சுற்றுசூழலை மாசு படுத்த சொல்ல

மாட்டார்.

மொத்தத்தில் எங்கள் பிள்ளையார் மிகவும் சாதுவானவர். எங்களுக்கு

அவரிடம், பயத்தைவிட, பக்தியைவிட பாசம் அதிகம்.

.

25 comments:

Vijiskitchencreations said...

நல்ல பதிவு.

www.vijisvegkitchen.blogspot.com

வினோ said...

நல்லா விசயத்துல கருத்தும்.. நல்ல இருக்குங்க சகோ..

இங்க (Belfast) எல்லாம் ஒன்னும் இல்லாம நாட்களை பார்க்க வேண்டியிருக்கு...

பவள சங்கரி said...

விநாயகர் சதுர்த்தியதுவுமா அருமையா உங்க வீட்டு பிள்ளையார் வரலாறு பத்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு சகோதரி..

தமிழ் உதயம் said...

பிள்ளையார் சதுர்த்தி தின பகிர்வு, அழகிய வண்ணப்படத்துடன் சிறப்பாக இருந்தது.

ராமலக்ஷ்மி said...

// `எங்கள் பிள்ளையார் சின்னக் குழந்தை, ஸ்பூனில்

குடிக்கத் தெரியாது, வேணும்னா ஃபீடிங் பாட்டிலில் குடுத்துப் பாருங்க’//

:)!

//பயத்தைவிட, பக்தியைவிட பாசம் அதிகம்.//

அழகு. சதுர்த்தி தின வாழ்த்துக்கள்!!

VELU.G said...

நல்ல பிள்ளையாரைப் பற்றி நல்ல பதிவு

venkat said...

you had truly understood the concept of god in hinduism and well criticised those who disturb public in the name of god as you said at the end . by the way can anyone help me to comment in tamil as i had failed to do so

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பிள்ளை வீட்டு பிள்ளையார், அதான்
நல்லபிள்ளையா இருக்கார் போல அம்பிகா ...:)

மண் பிள்ளையார் கிடைக்கலன்னா நாங்களூம் மஞ்சப்பிள்ளையர் பிடிச்சி கும்பிட்டுவிடுவோம்..
இந்த முறை காலியாகறதுக்கு முன்னயே மண் பிள்ளையார் கிடைச்சிட்டார்.. அதனால் நாங்களும் பூஜை முடிந்து கரைகக்வசதி..

Mahi_Granny said...

சதுர்த்தி தின வாழ்த்துக்கள்

ஹேமா said...

அம்பிகா உங்க பக்தியையும் பாசத்தையும் உணர்த்துகிறது பதிவு.அப்பிடியே இலங்கைத் தமிழர்களுக்காகவும் வேண்டிக்கோங்க பாசமான பிள்ளையார்கிட்ட !

பத்மா said...

எங்க பிள்ளையாரும் அப்படித்தான் ..
நாங்க சாப்பிட்டா கோவிச்சுக்கவே மாட்டார்..

அழகா இருக்கார் உங்க வீட்டு விநாயகர்

மாதவராஜ் said...

நகைச்சுவை ததும்பும் வரிகள் கொண்ட பதிவு. ரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

புள்ளையார் அழகா இருக்கார்..

'பரிவை' சே.குமார் said...

விநாயகர் சதுர்த்தியதுவுமா அருமையா உங்க வீட்டு பிள்ளையார் வரலாறு பத்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.....வாழ்த்துக்கள்.

Gokul Rajesh said...

Excellent!!!

சுந்தரா said...

செல்லப்பிள்ளையார் ரொம்ப அழகு...

கடைசியில் வைத்திருக்கிற குட்டு, அருமை.

pichaikaaran said...

good post. thank u

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.

Anonymous said...

12.09.2010


Hello
You have wisely condemned the latest Pillaiyar procession and chemical pillaiyars. This is nice. In this also ur brothers impression reflects. Also ask my friend Mohan to write like this just for timepass. This is nice.
I dont have Tamil fonts, So in English.


Best wishes


K.subramanian

ponraj said...

உங்கள் பிள்ளையார் மிகவும் சாதுவானவர்!!!

அவருடைய birth day எப்போ?

ஜெயந்தி said...

உங்க சாமியும் உங்கள மாதிரியே போல.

Unknown said...

Those who can't type in tamil. please visit

http://www.google.com/transliterate/

1. choose Tamil in the left drop down if not selected
2, Enter the tamil words like Amma and press SPACEBAR. Backspace would help you to choose a right word from a popup list.

Please enjoy typing in tamil.

Thenammai Lakshmanan said...

பாசக்கார பய பிள்ளையாரா இருப்பார் போல இருக்கே அம்பிகா...

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


5 important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு

http://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html

add subscribe via email gadget

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html