Monday, September 20, 2010

பூப்புனித நீராட்டு விழாக்கள்.., விளம்பரம் தேவையா..?

.

.அந்த வீதியின் முக்கிய இடங்களில் ப்ளக்ஸ் போர்டுகள். அரசியல் தலை

வருக்கோ அல்லது திருமண நிகழ்ச்சிக்கோ அல்ல. பூப்புனித நீராட்டு விழா

வுக்கான அறிவிப்பே அது. ஒரு சிறுமியின் `பெரிய’ படத்துடன்... பெருகி

வரும் புது கலாச்சாரம் இது. கிராமங்களில், சிறு நகரங்களில், மட்டு

மல்லாது, பெருநகரங்களிலும் பூப்புனித நீராட்டு விழாக்கள் இப்படி ஆடம்

பரமாக, பெரிய அளவில் கொண்டாடப்படுவது வியப்பையும் எரிச்சலை

யும் தருகின்றது.



பெண் பருவமடைந்து விட்டால் `சடங்கு’ வைப்பது சம்பிரதாயமான ஒரு

வழக்கம். முற்காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து

கொடுத்து விடுவது பழக்கமாயிருந்தது. பெண், வயதுக்கு வந்துவிட்டால்,

`எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு

வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள்

நடத்தப் பட்டனவாம். அக்காலத்தில் பெண்களை பெரியவர்களாகி விட்டால்

வெளியில் அனுப்ப மாட்டார்கள்.



ஆனால், இப்போது அப்படியில்லை. ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து

பள்ளியில் பயிலுகின்றனர். இந்நிலையில், பெண்களின் உடலில் ஏற்படும்

மிக இயல்பான, இயற்கையான நிகழ்வை, இப்படி பகிங்கரமாக அறிவிக்க

வேண்டுமா? படிப்பறிவும் நாகரீகமும் வளர வளர, இத்தகு பழம் சம்பிர

தாயங்கள் குறைய வேண்டாமா? மிகநெருங்கிய உறவினர்களுடன் வீட்டில்

வைத்து `தலைக்கு ஊற்றி ’ அடக்கமாக முடித்துக் கொள்ள முடியாதா?

அதிலும், இப்போதெல்லாம் பெண்கள், 9 லிருந்தி 11 வயதுக்குள் பருவ

மடைவது அதிகரித்து வருகிறது. குழந்தைத்தனம் மாறாத இந்த சிறுமி

களை மற்றவர் பார்வையில் ஏன் `பெரிய மனுஷி’ யாக்க வேண்டும்?

குழந்தைகளாக அவர்கள் இயல்புடன் வளர விடலாமே.!

.

41 comments:

தமிழ் உதயம் said...

இதே கேள்வி என் மனதிலும் எழுந்துள்ளது.

அன்பரசன் said...

மிகச்சரியா சொன்னீங்க.
தான் பெரிய மனுஷி ஆகிவிட்டது தெரியாமலே குழந்தைத்தனமாய் சுற்றித்திரியும் பெண் குழந்தைகளை இது போன்ற விளம்பரங்கள் கண்டிப்பாக பாதிக்கும்.

வினோ said...

எப்பொழுது மாறும் என்று தெரியல... நீங்கள் சொன்னது போல பல நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த போர்ட் கலாச்சாரமே ரொம்ப வேடிக்கையானது. அதுல இதுக்குமா.. :(

'பரிவை' சே.குமார் said...

மிகச்சரியா சொன்னீங்க.
என் மனதிலும் இதே கேள்விதான்..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரியாக சொன்னீர்கள் சகோதரி...

மிகவும் வேதனையான விஷயம்... இந்த மாதிரி விளம்பரம் செய்யும் பெற்றோர்கள் எவரும் அந்த சிறு பெண்களின் மனநிலையை நினைத்து கூட பார்ப்பதில்லை...

என்று வளருமோ இவர்களுக்கு ஆறறிவு...

Unknown said...

இந்த சடங்கே தேவையிலாத ஒன்று ...

துளசி கோபால் said...

நாம்தான் இது தேவையான்னு நெஞ்சில் குமுறுகிறோம். ஆனால் வெளிநாட்டுக்கு வந்துவிட்ட தமிழர்களில் கூட ஒரு பகுதியினர் இங்கேயும் அதை பெரிய கொண்டாட்டமாகச் செய்வதுதான் கொடுமை:(

வல்லிசிம்ஹன் said...

ஏற்கனவே குழம்பிப் போயிருக்கும் குழந்தைகள். நாளடைவில் அந்தக் குழந்தைகளே, பிறந்தநாள் கொண்டாட்டம் கேட்பது போல இதையும் கேட்க வைத்துவிடுவார்கள் .:(

ராமலக்ஷ்மி said...

நல்ல கேள்வி. நகரங்களில் இப்பழக்கம் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டது. சத்தமின்றி 2,3 தினங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர். விதிவிலக்குகள் வெகு சொற்பமே.

நிலாமதி said...

இதை ஒருவிளம்பரமாக் செய்வது தான் பாஷனாகி விட்டது புலம்பெயர் தமிழர்கள். வேதனையான விடயம்.

vijayan said...

இந்தியாவின் வறுமையான மாநிலங்களில் கூட இந்த கலாச்சார சீரழிவு இல்லை.தமிழன் என்று சொல்லிகொள்ளுவதற்கே வெட்கமாக இருக்கிறது.

முகுந்த்; Amma said...

நிறைய இந்த மாதிரி போர்டு பார்த்தப்போ ஏன் இப்படி எல்லாம் போட்டு சின்ன பொன்னுங்கள கேவலப்படுத்துறாங்கன்னு யோசிச்சு இருக்கேங்க.

சரியா சொல்லி இருக்கீங்க.

Anonymous said...

நியாயமான கேள்வி

க.பாலாசி said...

நல்லவேளை எங்க ஊர்ல இன்னும் இந்த கலாச்சாரம் (???) நுழையலைங்க.... நான் முதல்ல இதுமாதிரி பதாகைகளை பார்த்ததே ஈரோட்டிலத்தான்... என்ன சொல்றது...

நிகழ்காலத்தில்... said...

கண்டிப்பா தேவை இல்லை.

சிலர் திருமணத்தன்று முந்தய மாலை நிகழ்வாக சீர் எனப்படும் இவ்விழாவையும் வைத்து விடுகின்றனர்.

Chitra said...

குழந்தைத்தனம் மாறாத இந்த சிறுமி

களை மற்றவர் பார்வையில் ஏன் `பெரிய மனுஷி’ யாக்க வேண்டும்?

குழந்தைகளாக அவர்கள் இயல்புடன் வளர விடலாமே.!


....... சரியாக சொல்லி இருக்கீங்க.... இப்பொழுது மீண்டும் இந்த பழக்கத்தை கொண்டு வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்து இருக்கிறேன்.... கேட்டால், சரியான பதிலும் சொல்ல மாட்டேங்கறாங்க.....

பதி said...

சிறுகுழந்தைகளை அவர்களின் இயல்பில் விடாமல் சிதைக்கும் இந்த அவலம் வெளிநாடுகளிலும் கொடிகட்டி
பறக்கின்றது.

ஏன் இப்படி மடத்தனமாக நடந்து கொள்கின்றீகள் எனக் கேட்டால், வரும் பதில்,"தமிழ்கலாச்சாரத்தை எங்களால் முடிந்த அளவு காப்பாற்றுகின்றோம்" :(

bogan said...

ஒரு மாற்றுப் பார்வை வைக்கலாமா..பூப்படைதல் ஒன்றும் சோகமான நிகழ்வு இல்லை அல்லவா..அதுவும் வாழ்வின் கொண்டாடப்படவேண்டிய ஒரு பகுதியே.சாவுவீட்டில் கூட தாரைதப்பட்டையுடன் ஆடும் கலாச்சாரம் நமது..இதை ஒரு வெட்கப் படவேண்டிய ரகசிய நிகழ்வாக வைப்பது சரியா..

R.Gopi said...

சபாஷ் என்று உரக்க பாராட்ட சொல்லிய பதிவு...

நானும் ஊரில் இருக்கும் போது, இது போன்ற நிகழ்வுகளின் போஸ்டர் பார்க்கும் போது நினைப்பதுண்டு...

அந்த பிஞ்சு வயதில் பருவமடையும் பெண் குழந்தையை போஸ்டர் ஒட்டி, காட்சிப்பொருளாக்கி.....

எனக்கும் இதில் உடன்பாடில்லை...

Ahamed irshad said...

கண்டிப்பா தேவையில்லைதான்.

என்னது நானு யாரா? said...

நன்றாக சூடு கொடுத்து பதிவு எழுதி இருக்கீங்க

சரியாக சொல்லி இருக்கீங்க தோழி! .

இந்த மாதிரி விளம்பரம் செய்யும் பெற்றோர்கள் அந்த சிறு பெண்களின் மனநிலையை பற்றி கொஞ்சமும் நினைத்து கூட பார்ப்பதில்லை...

வருத்தம் அளிக்கிறது. அடுத்த தலைமுறையாகிலும் இதை தெரிந்து நடந்துக்கொள்ள வேண்டும். பாராட்டுக்கள்!

நேரம் கிடைக்கும்போது நம்ப கடைக்கு வாங்க தோழி!

ஹுஸைனம்மா said...

தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் அச்சிறுமி பயந்துபோகாதிருக்க ஏற்படுத்தப்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் பெற்றோரின் பெருமைபேசப்பட மட்டுமே உதவுகிறது இவ்விழாக்கள்!! (மொய் திருப்பவும், உறவுகளிடம் சீர் வசூலிக்கவும் கூட!!)

சுந்தரா said...

இன்னார் ஆசியுடன் நடக்கும் இந்த விழாவில் குழந்தையை வாழ்த்திப்பேச இன்னார் இன்னாரெல்லாம் வர இருக்கிறார்கள் என்று, வட்டம், மாவட்டம் என்று எல்லாருடைய பேரையும்போட்டு, எட்டுப்பக்கத்தில் ஒரு கட்சிக்காரர் வீட்டு(பூப்புனித நீராட்டு)விழா அழைப்பிதழை இந்தத்தடவை ஊருக்குவந்தப்ப பார்த்தேன் :)

jothi said...

இன்றைக்கு இருக்கிற தொழில் நுட்பத்திற்கு, சமூக சீரழீவிற்கு குழந்தைகளை குழந்தைகளாகவே நாம் வைத்திருப்பது/நினைப்பது மிக கடினம். முக்கியமாக அது ஆபத்தும் கூட,..இது உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அணுக வேண்டிய பிரச்சனை,..(ஆனால் போஸ்டர் என்னவோ தேவையில்லாதுதான்,..).

நல்ல பதிவு

Thenammai Lakshmanan said...

உண்மை நல்ல பகிர்வு அம்பிகா.. யோசிக்க வேண்டும் அனைவரும் இது குறித்து..

GSV said...

//(ஆனால் போஸ்டர் என்னவோ தேவையில்லாதுதான்,..).// repetuu..

என்னக்கு தெரிந்து இந்த மாதிரி "function" எல்லாம் "Mama" வீட்டு சொத்த காலி பண்ணுறதுக்கு தான் நடக்குது. ஒண்ணுமே இல்லைனாலும் கடன் வாங்கியாவது வரிசை பண்ண வேண்டி இருக்கு . உங்கள் போலவே எல்லா தங்கச்சியும் or அக்கா நினைச்சிட்டா எல்லா மாமாவுக்கு சந்தோசமே.

Anonymous said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

ஹேமா said...

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் அம்பிகா.

எனக்கும் இது பிடிக்காத விஷயம்.ஆனால் சில வீடுகளில் அந்தக் குழந்தைகளே விரும்புகிறார்கள் தங்களுக்க்கு பூப்புனிதம் செய்யவேண்டுமென்று !

Anonymous said...

நீங்கள் சொன்னது சரி அம்பிகா !!! தேவையே இல்ல

Sriakila said...

இது ஒரு நல்ல சிந்தனை!

எனக்கும் விவரம் தெரியாத வயதில் இப்படியெல்லாம் சடங்கு செய்திருக்கிறார்கள். நான் அப்போது 8‍வது படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அப்போது இதெல்லாம் என்ன என்றே தெரியாது. ஆனால் அந்த சடங்கை செய்த பிறகு முன்பு போல் என்னை விளையாட விடவில்லை. கட்டுப்பாடுகளைத் திணிக்க ஆரம்பித்தார்கள்.

நன்றாக விவரம் தெரிந்தபின் தான் இதெல்லாம் மடத்தனமான செயல் என்று புரிந்தது. இன்னும் பல வீடுகளில் இது தொடரத்தான் செய்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னத் தெரியுமா? தாங்கள் செய்த மொய்ப்பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத்தான் என்று சொன்னார்கள். இது அதைவிட மட்டமாகத் தெரிந்தது.

என்னக் காரணம் சொன்னாலும் சரி! இதில் பாதிக்கப்படுவது அந்தக் குழந்தையின் சந்தோஷம்தான். இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் நான்.

நல்ல பதிவு மட்டுமல்ல, ரொம்பவும் அவசியமானப் பதிவும் கூட.

உண்மைத்தமிழன் said...

எங்கள் அம்மா பிறந்த ஊரில் வேறொரு கொடுமை நடக்கிறது..!

இரவில், ஊரின் நடுவே ஓரிடத்தில் சுற்றிலும் பெண்கள் இருக்க.. அங்கேயே அந்தப் பெண், தாய் மாமன் கொடுத்த உடைகளை அணிய வேண்டும்..!

முன்னாடி எப்படியோ..? இப்போது அந்த ஊரிலேயே இருப்பவர்கள் மட்டும் இதைப் பின்பற்றுகிறார்கள். நகரத்திற்கு வந்தவர்கள் இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த விசேஷத்தை ஊரில் வைப்பதற்கு மறுக்கிறார்களாம்..

நல்ல விஷயந்தான்.. கொஞ்சம், கொஞ்சமாத்தான் மக்களை மாத்த முடியும்னு நினைக்கிறேன்..!

காமராஜ் said...

இதற்கு ப்ளக்ஸ் போர்டும்.அந்தந்த ஜாதித் திருவுருவின் சின்னமும் வைக்கிற கொடுமையை என்னன்னு சொல்ல.

நறுக்குன்னு இருக்கு கேள்வி

Deepa said...

மிக மிக அவசியமான பதிவு. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

மதன்செந்தில் said...

உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.. ஆனால் எனக்கு எங்க வீட்ல விஷேசமே செய்யலன்னு கஷ்டப்படுவதை நான் என் காதுபட கேட்டிருக்கிறேன்..

www.narumugai.com

thiyaa said...

நல்ல பதிவு

அமைதி அப்பா said...

என்னை எரிச்சலடைய செய்யும் சடங்குகளில் முதன்மையானது இதுதான். நல்ல பதிவு .
பாராட்டுக்கள்.

கபிலன் said...

விழா வைப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து ! இவ்விழாவிற்கு நீங்கள் சொன்ன காரணமும் சரி தான் !

tamilanbalum said...

இது ஒரு சரியான ஜோக் சமாசாரம்.பெண்களுக்கு இது கொஞ்சம் ஓவராக இருக்கலாம். விடலைப்பயல்களுக்கு இந்த விளம்பரம் கனவுலகில் இன்னோரு புது ஜோடியினைச் சேர்க்கலாம். பெரியவளானதைச் சொல்வது தப்பென்றால் அப்புறம் கல்யாணத்தை கொண்டாடுவதை பெரிய தப்பாகத்தான் சொல்ல வேண்டும். இயற்கையில் நடப்பதை விழா எடுத்துக்கொண்டாடி அதை பிஸினெஸாகச் செய்து கொண்டிருக்கும் ஒரே இனம் மனித இனம்தான். ஆகவே இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு கோபமோ.. அவமானமோ அடையத் தேவையில்லை. சிறு புன்னகையோடு விலகிச் சென்றால் போதும்.

Adriean said...

மிகச்சரியா சொன்னீர்கள். இப்படி ஒரு விழா தேவையே இல்லை.
=இயற்கையில் நடப்பதை விழா எடுத்துக்கொண்டாடி அதை பிஸினெஸாகச் செய்து கொண்டிருக்கும் ஒரே இனம் மனித இனம்தான்.=
இல்லை.தமிழ் மற்றும் சில இனங்கள் மட்டுமே இப்படி செய்து கொண்டிருக்கின்றன.

Anonymous said...

எனது கருத்தும் இதுவே..

நல்ல பதிவு.