Monday, September 27, 2010

மாறிவரும் கிராமங்கள்....

.

.நகரத்து நாகரீகத்தின் கைகள், கிராமங்களை நோக்கி நீண்டு கொண்டிருக்

கின்றன. கண்கூடாக பார்க்க முடிகிறது மாற்றங்களை.



பெண்கள், பாவாடை தாவாணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.

ஜீன்ஸ் அணியும் பெண்களைக் கூட பார்க்க முடிகிறது. நைட்டிக்கு மேலே

துண்டு போட்டுக் கொண்டு, குழாயடிக்கும், பக்கத்து கடைகளுக்கும் வரும்

பெண்களை காணமுடிகிறது. பெண்கள் சுதந்திரமாக ஷாப்பிங், லைப்ரரி

எல்லாம் சென்று வருகின்றனர்.


பசும்பால் வாங்க மாடு இருக்கும் வீடுகளை தேடிய காலங்கள் போய்,

பால்பாக்கெட்டுகளும், தயிர்பாக்கெட்டுகளும் கடைகளை ஆக்ரமித்துக்

கொண்டுவிட்டன. பசும்பால் கிடைப்பது இங்கும் அரிதாகி வருகின்றது.

விருந்தினர் வந்தால், யார் வீட்டில் நாட்டுக்கோழி கிடைக்கும் என்று

அலைந்த காலங்கள் மாறி, 24 மணி நேரமும் `பிராய்லர் சிக்கன்’

கிடைக்கிறது. அனைத்து மாவு வகைகளும் ரெடிமேடாக பாக்கட்டுகளில்

கிடைக்கின்றன.


அவ்வப்போது கேட்கும் பஸ்ஹாரன்கள் நிரந்தரமாக ஒலிக்கின்றது.

டிஜிட்டல் ஸ்டுடியோக்கள், கம்ப்யூட்டர் சென்ட்டர்கள், ஏடிஎம் வங்கிகள்,

என அத்தனை வசதிகளும் வந்துவிட்டன.


தெருக்கள் ஏழுமணிக்கே அரவமற்று அடங்க ஆரம்பித்து விட்டன.

முன்பெல்லாம் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால், உடனே

தெரு முழுக்கதெரிந்து விடும். இப்போது, அனைவரையும் டிவி

சீரியல்கள் இழுத்து பிடித்துக் கொண்டு விட்டன.


போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக

இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த இரண்

டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இத்தனைக்

கும் நல்ல ஜனநடமாட்டம் மிகுந்த தெருவுக்குள் தான் வீடு. இரவு ஏழு

மணியளவில், அந்த பாட்டியின் உறவினர் வந்த பின் தான் கொலை

நடந்ததே தெரிந்துள்ளது.


ஆம்.... கிராமங்கள் மாறித்தான் விட்டன.

.

26 comments:

எஸ்.கே said...

இதற்கு நகரத்தின் பாதிப்பும் நாகரீக மோகமும்தான் காரணம். உடை, பழக்கவழக்கம், பேச்சு வழக்கு என பல விஷயங்கள் கிராமங்களில் மாறி விட்டன.

சாந்தி மாரியப்பன் said...

கிராமங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நகரங்களாக ஆரம்பித்துவிட்டன..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வசதி வாய்ப்புகள் வருவது நல்லது ஆனால் நகரங்களின் துயரங்களையும் அவர்கள் அறியாமலே
சைடு எபக்டாக பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்..

ராமலக்ஷ்மி said...

கிராமங்கள் மாறித்தான் விட்டன. நகரங்களிலும் சிலாக்கியமாக சொல்ல எதுவுமில்லை. காலத்தின் மாற்றத்துக்கு ஈடு கொடுப்பதாக எண்ணி எதையெதையோ இழந்து கொண்டிருக்கிறோம்.

வினோ said...

இப்படிப்பட்ட மாற்றங்களால் சில நன்மைகளும் பல தீமைகளும் இருக்கத் தானே செய்கிறது...

என்னது நானு யாரா? said...

காலம் அவ்வாறு அவர்களை தள்ளும் போது மாற்றத்தை எவ்வாறு தடுக்க முடியும்? எல்லாமுமே மாற்றத்திற்குட்பது தானே?

தமிழ் உதயம் said...

எல்லாமே மாற்றங்களை காணும்போது, கிராமங்களும் மாறி தானே ஆக வேண்டும்.

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க அம்பிகா அக்கா.
யோசிக்க வேண்டிய விஷயம்.

மாறியது கிராமங்கள் மட்டுமல்ல...

மாதேவி said...

முன்னேற்றம் மகிழ்ச்சியுடன் சில துன்பங்களையும் தருகிறது.

பவள சங்கரி said...

உண்மை, அடுத்த வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன, நம் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது......என்கிற போக்குதான் அதிக்ரித்துக் கொண்டிருக்கிறது. இது நல்ல மாற்றமே அல்லவே.

க.பாலாசி said...

இப்பல்லாம் யாரும் வாசக்கதவை திறக்கறதே இல்லைங்க... பின்ன எப்டி அடுத்தவீட்ல என்ன நடக்குதுன்னு தெரியப்போவுது. கொலையே நடந்தாலும் தெரியாது..

கிராமம் மாறிவருகிறதுன்னு சொல்றதவிட எல்லாத்தையும் இழந்துவருகிறதுன்னு சொல்லலாம்... நல்ல இடுகை.

Thenammai Lakshmanan said...

கிராமங்களும் இப்படி ஆகிக்கிட்டு வருதா அம்பிகா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா எழுதியிருக்கீங்க

jothi said...

நகரத்தவர் அனுபவிக்கிற அத்தனை சந்தோசங்களும், கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும். 2ரூபாய்க்கு கிராமத்துல விக்கிற தேங்காய் சென்னையிலே 12 ரூபாய். இப்போதெல்லாம் கிராமத்தில் ஆட்களே இல்லை,..

நல்ல பதிவு

ஹேமா said...

கிராமங்கள் மாறிவருவதால்தான் இயற்கையும் அழிந்துகொண்டு போகிறது.இன்று ஒரு பதிவில்கூடப் பார்த்தேன் சிட்டுக்குருவிகள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதாம்!

அன்பரசன் said...

மிகச்சரியா சொன்னீங்க.

Sriakila said...

//போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த இரண்டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்//

பட்டப்பகலில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பது நகரத்தில் மட்டும்தான் என்று பார்த்தால் கிராமங்களிலுமா? என்னக் கொடுமை இது?

'பரிவை' சே.குமார் said...

கிராமம் மாறிவருகிறதுன்னு சொல்றதவிட எல்லாத்தையும் இழந்துவருகிறதுன்னு சொல்லலாம்... நல்ல இடுகை.

Repeat Balaji.

Its True.

priyamudanprabu said...

பெண்கள், பாவாடை தாவாணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.
///
வருத்த படவேண்டிய விஷயம்

ஜெயந்தி said...

முன்பு உள்ள கிராமங்களை இனி சினிமாவில்தான் பார்க்கவேண்டும் போல.

saravanakumar sps said...

இதற்கு நகரத்தின் பாதிப்பும் நாகரீக மோகமும்தான் காரணம். உடை, பழக்கவழக்கம், பேச்சு வழக்கு என பல விஷயங்கள் ந்கரத்தில்ப்ணிபுரிந்துவிட்டு கிராம்த்திற்கு வருகைத்ரும் அழ்குராணி அழ்குராசாக்கள் செய்யுமஅல்ப்பறைகளால் தான்

ஹுஸைனம்மா said...

ஆமா, கிராமங்களும் இப்ப மினி நகரமாத்தான் இருக்குது - அதான் லேட்டஸ்ட் நாகரீகஙக்ளையும், டெக்னாலஜிகளையும் கொண்டு சேர்க்க டி.வி.யும், இண்டர்நெட்டும் இருக்கின்றனவே!!

கள்ளமில்லா கிராமம்/கிராமத்தினர்னு யாராவது எழுதும்போது இதெல்லாம் எழுத்துல மட்டுந்தான் பாத்துக்கணும்னு நெனச்சுப்பேன்!!

Vijiskitchencreations said...

க்ராம வாழ்க்கை ,க்ராமம்,என்பது கனவில் தான் நினைத்து பார்க்கனும்.
ஹூசைன்ம்மா சொல்வது போல் செல் போன், டிவி, இண்டெர்நெட் எல்லாம் வந்ததினால் எவ்வளவு மாற்றங்க. ம் எங்கோ போயி கொண்டிருக்கோம்.

ராகவன் said...

அன்பு அம்பிகா.

எப்படி இருக்கீங்க!

ரொம்ப நாளாச்சு நிறைய படிச்சு...

நல்ல பதிவு...

கிராமம்ங்கிறது நினைப்பு தான அம்பிகா... மாறவே மாறாதுன்னு என்னோட எண்ணம்...

அன்புடன்
ராகவன்

vayapparaj said...

i am sorry to express my view through english.

i am fom rural village,what evr u said that blog all are true.whole reason was T.V.because everyone give important to T.V serials.but we can't says all people are same attitute.Village so many people are love their Agri work.

பவள சங்கரி said...

மனித மனம் நிறைய மாறியுள்ளது.....கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல்....