Thursday, December 24, 2009

நானே...! நானா...!


சிறு வயதில்

கோலங்கள் போடும்போது,

மணிகளால் பர்ஸ் செய்யும்போது,

துணிகளில் எம்ப்ராய்டரி செய்யும்போது

அம்மா சொல்வாங்க பெருமையாக

``எம்பொண்ணு ரொம்ப புத்திசாலி’’

சந்தோஷமாக இருந்தது.

* * * * * *


கம்ப்யூட்டரில் சந்தேகம்,

மகனிடம் கேட்டேன்.

வேகமாய் விளக்கினான்.

விளங்காமல் விழித்தேன்.

மகன் சொன்னான், கேலியாக,

``நீங்க ரொம்ப மண்டூவா இருக்கீங்கம்மா’’

இதுவும் சந்தோஷமாகத் தானிருக்கிறது.

* * * * * * *

31 comments:

அண்ணாமலையான் said...

அன்புத்தாய்க்கு என் பனிவான வாழ்த்துக்கள்..
(வேறென்ன பெருமை வேனும்?)

கமலேஷ் said...

தாய் அன்பை போலவே கவிதையும் அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க...!

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

அகநாழிகை said...

வாழ்த்துகள்.

VijayaRaj J.P said...

என் அம்மா கூட கண்டுபிடிக்காததை
என்மகன் கண்டுபிடித்து விட்டானே...
என்ற பெருமைதானே அம்பிகா'

ச்சும்மா...சொன்னேன்.

தாயின் மனம் பற்றிய நல்லபதிவு.

மாதவராஜ் said...

ஆஹா....!

அம்பிகா said...

வாங்க, அண்ணாமலையான்,
\\
வேறென்ன பெருமை வேணு்ம்//
உண்மைதான். நன்றி, பேராசிரியரே..!

கமலேஷ், உங்கள் முதல்வருகைக்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றி.

பிரியமுடன்...வசந்த்... ரொம்ப நன்றிங்க.

அம்பிகா said...

வாங்க நேசமித்ரன்,

உங்களைப் போன்ற கவிஞர்களின் பாராட்டு உற்சாகப் படுத்துகிறது.

வாங்க அகநாழிகை,

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்,
நன்றி.

அம்பிகா said...

விஜியண்ணா,

``உங்கள எப்பவும் சந்தோஷமா வச்சிக்கிறோம்மா’’னு ரெண்டுபேரும் சொல்லிட்டு இருக்காங்க.

மாதுஅண்ணா,

இந்த `ஆஹா’ வுக்கு அர்த்தம் நல்லாயிருக்கு என்பது தானே..!

பா.ராஜாராம் said...

கவிதையுமா!

கலக்குங்க அம்பிகா..ரொம்ப பிடிச்சிருக்கு.ஒரே கவிதைதானே,..ஒவ்வொரு பாராவிற்கும் நடுவில் ஒரு கோடு வேண்டியதில்லை.இரு வேறு கவிதையோ என்கிற உணர்வை தருகிறது.தமிழ்மணத்தில் இணைத்து விட்டீர்களா?

அம்பிகா said...

இப்போதுதான் எழுதி பழகுகிறேன்.
நன்றிகள். ( கவிதை என்று ஒத்துக் கொண்டதற்கும், அறிவுரைக்கும்.)
தமிழ் மணத்தில், இணைப்பு `வெய்ட்டிங் லிஸ்ட்டில்’ இருக்கிறது.

தேவன் மாயம் said...

ரெண்டும் சரிதான்!!

க.பாலாசி said...

நல்ல கவிதை...சந்தோஷமா இருக்குங்க...

அம்பிகா said...

வாங்க, தேவன்மாயம்,
க. பாலாசி.

உங்கள் முதல் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றிகள்.

Thiagu said...

கவிதை நன்றாக இருக்கிறது.
நிறைய எதிர்பார்க்கிறேன்.

த்யாகு

ராகவன் said...

anbu ambika avarkalukku,

ungal annanin ungalai patriya arimugam azhagai irundhadhu... solla thaan ninaikkiraan...

vaazhththukkal... aarambamey.. iththanai per thodarvadhu.... iththanai pinnoottangal.. ungalin ezhuththil ulla suvarasyaththai solkiradhu...

thodarkirenn.

anbudan
raagavan

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதை நல்லாயிருக்குங்க. நிறைய எழுதுங்க!

Anonymous said...

கவிதை நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள்.

PONRAJ-TUTICORIN

Deepa said...

அசத்தல் அம்பிகா அக்கா! ரொம்ப ரசித்தேன்! :)

ரொம்பநாளாக பதிவுகள் பக்கம் வரவே முடியவில்லை அக்கா. இப்போது தான் பார்த்தேன். அக்கா, YOU R ROCKING!

அம்பிகா said...

த்யாகு அண்ணா,
உண்மைலேயே நல்லா இருக்கா?
ரொம்ப சந்தோஷம்.

அம்பிகா said...

வாங்க ராகவன்,

பல்வேறு தளங்களில் உங்கள் பின்னூட்டங்களை படித்து ரசித்திருக்கிறேன்.
உங்கள் பதிவுகளையும் படித்திருக்கிறேன்.
உங்கள் பாராட்டுக்கள் சந்தோஷப் படுத்துகிறது. நன்றி. ராகவன்.

அம்பிகா said...

வாங்க ஜ்யோவரம்சுந்தர்,
பாராட்டுக்கு நன்றி.

இத்தனை பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் நானே எதிர்பாராதது.
சந்தோஷமாக இருக்கிறது.தொடர்ந்து நன்றாக எழுத வேண்டுமே என்று பயமாகவும் இருக்கிறது.

அம்பிகா said...

பொன்ராஜ், நன்றி.

அம்பிகா said...

அன்பு தீபா,

அக்காவிடம் உன்னை பற்றி விசாரித்தேன். வேலை அதிகம் என்று கூறினாள்.

உன் உற்சாகமன பாராட்டுக்கு நன்றி தீபா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா, எப்பவும் என் மகன் என்னை இதான் சொல்றான் .. “ அம்மா உனக்கு ஒன்னும் தெரியாது” .. :)

அம்பிகா said...

வாங்க, முத்துலெட்சுமி,
அநேக வீடுகளில் இதையேதான் சொல்கிறார்கள்.
முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

நினைவுகளுடன் -நிகே- said...

தாயின் அன்பை கவியில்
காட்டிய விதம் அழகு

உண்மைத்தமிழன் said...

இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான்..! முன்னது நிஜமான பெருமை. பின்னது கள்ளமில்லா ஆதங்கம்..!

பூரிப்பு உண்டாகத்தானே செய்யும்..!

அம்பிகா said...

வாங்க, நினைவுகளுடன் நிகே,
உண்மை தமிழன்,
உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும்
நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு