Monday, January 25, 2010

முதல், முதலாக...

வலைப் பக்கங்களில் நான் எழுதிய`அழகம்மா’என்ற சொற்சித்திரம்,
24.01.10அன்றுவெளியான தீக்கதிர் இதழின் ஞாயிறு இணைப்பான
வண்ணக்கதிர் இதழில் வெளியாகியுள்ளது. என் எழுத்துக்கள் முதன்
முறையாக அச்சேறி உள்ளது. இச்சிறு வெற்றியை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இதற்கு உறுதுணையாக
இருந்த திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்கும், தீக்கதிர்
அசிரியருக்கும் என் நன்றியும், வந்தனமும்.


விடுமுறை...


அப்பாடா,

நாளை விடுமுறை.

நிம்மதியா ஓய்வு எடுக்கலாம்;

உனக்கென்ன

தினமும் விடுமுறைதான்,

கேலியாக கணவன்;

வருடமுழுவதும்

ஆன் ட்யூட்டி தான்,

விடுமுறை நாட்கள்,

ஓவர் டைம் தான்;

மெளனமாய் புன்னகைக்கும்

மனைவி...

19 comments:

சந்தனமுல்லை said...

மிகுந்த மகிழ்ச்சி அம்பிகா அக்கா! தொடர்ந்து எழுதுங்கள்! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. அம்பிகா


விடுமுறை :))

ராமலக்ஷ்மி said...

மிக்க மகிழ்ச்சி அம்பிகா. இன்னும் பல படைப்புகள் தொடர்ந்து அச்சிலேற என் வாழ்த்துக்கள்!

கவிதை நல்லாயிருக்கு:)!

Anonymous said...

மிகுந்த மகிழ்ச்சி!!! வாழ்த்துக்கள்..!!!

கவிதை SUPER!!!

PONRAJ-TUTICORIN

Deepa said...

நிதர்சனம்!
நல்லா இருக்கு அக்கா.
வண்ணக்கதிருக்கு வாழ்த்துக்கள்!! :)

மாதவராஜ் said...

சந்தோஷமாயிருக்கிறது அம்பிகா. உன்னால் இன்னும் நிறைய, அற்புதமாக எழுத முடியும். அதற்கான உத்வேகத்தை, அச்சில் வந்த படைப்பு அளிக்கட்டும்.

கவிதையும் நன்று.

அமிர்தவர்ஷினி அம்மா said...

விடுமுறை = ஓவர்டைம் ;)))))))

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்

VijayaRaj J.P said...

முதன்முதலாக அச்சேரிய
நமது எழுத்துக்கள்
தரும் மகிழ்ச்சி அலாதியானது.

மகிழ்ச்சி நீடிக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

சுந்தரா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்பிகா!

வெற்றிகள் தொடரட்டும்.

கவிதை அருமையாக இருக்கிறது.

பா.ராஜாராம் said...

ஆகா!

வாழ்த்துக்கள் அம்பிகா!

நல்லாருக்கு கவிதையும்.

:-)

காமராஜ் said...

வாழ்த்துக்கள் அம்பிகா.

க.பாலாசி said...

நல்ல கவிதை... எனது வாழ்த்துக்களும்..

sathishsangkavi.blogspot.com said...

நல்லா இருக்கு....

தாராபுரத்தான் said...

மெளனமாய் புன்னகைக்கும்

பயமின்றி பதிவு செய்துள்ளீர்கள்.வணக்கம். வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//விடுமுறை நாட்கள் ஓவர் டைம் //

:-)

வாழ்த்துக்களும்!!

அம்பிகா said...

நன்றி முல்லை.

நன்றி முத்துலெட்சுமி.

வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி பொன்ராஜ்.

நன்றி தீபா.

முயற்சிக்கிறேன் மாதண்ணா.

நன்றி அமித்தம்மா.

அம்பிகா said...

விஜியண்ணா. நன்றி.

நன்றி சுந்தரா.

நன்றி காமராஜ் அண்ணா.

நன்றி. பாலாசி.

சங்கவி நன்றி.

வாங்க, தாராபுரத்தான்,
உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நன்றி ஹுஸைனம்மா.

அம்பிகா said...

நேசமித்திரன்,

உங்கள் கமெண்ட்டை ஏனோ பப்ளிஷ்
பண்ண மூடியவில்லை.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

அமுதா said...

வாழ்த்துக்கள்.. கவிதை சொல்வது யதார்த்தம்