Sunday, January 17, 2010

ஏன் மிதித்தான்...?

கழுவி, சுத்தப்படுத்தி,

மாலைகள் போட்டு,

மலர்கள் தூவி,

அலங்கரித்தனர் கல்லறையை...



ஆச்சி இங்கேதான்

தூங்குறாங்க,

கடைக்குட்டி பேரனிடம்,

அவன் அன்னை...


எட்டி மிதிக்கிறான்

கல்லறையை,

எனக்கு கதை சொல்லாம,

இங்க தூங்குறது

புடிக்கல...


கல்லடியும், சொல்லடியும்,

பரமனே தாங்கும்போது

அன்பு பேரனின்

கால் அடி

ஆச்சி தாங்கமாட்டாங்களா...???.

ஆச்சியின் ஆன்மா

அன்று சந்தோஷப் பட்டிருக்கும்...

17 comments:

மாதவராஜ் said...

முதல் மூன்று பத்தியோடு சொல்ல வந்ததை சொல்லிவிட்டாய். கடைசிப்பத்தி விளக்கம் தேவையில்லை தங்கையே...

நன்று.

ஹுஸைனம்மா said...

//அன்பு பேரனின்

கால் அடி

ஆச்சி தாங்கமாட்டாங்கள்...???.//

நிச்சயமா!! அதானே அவங்க உறவின் அழகே!!

காமராஜ் said...

அம்பிகா கவிதை மிகவும் அழகாக வந்திருக்கு வாழ்த்துக்கள்.

Deepa said...

//எனக்கு கதை சொல்லாம,

இங்க தூங்குறது

புடிக்கல...//
:-)

//ஆச்சியின் ஆன்மா

அன்று சந்தோஷப் பட்டிருக்கும்...
//
அழகு.

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான வரிகள்....

தோழர் சொன்னதைப் போல் முதல் மூன்று பத்திகளே மொத்தத்தையும் சொல்லிவிட்டது...

வாழ்த்துக்கள்

VijayaRaj J.P said...

நிகில் கால் பட்டதுமே...
என் மனதில் பட்டது.
நீ வார்த்தைகளில் வடித்து இருக்கிறாய்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//எனக்கு கதை சொல்லாம,

இங்க தூங்குறது

புடிக்கல...//

இந்த வரிகளைப்படிக்கும் போது வருத்தமும் சந்தோஷமும் ஒரு சேர தோன்றுகிறது.

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்...
/அன்பு பேரனின்

கால் அடி

ஆச்சி தாங்கமாட்டாங்களா...???./

கண்டிப்பாக...

தங்களின் சொற்சித்திரம் சீக்கிரம் வெளிவர வாழ்த்துகள் அம்பிகா அக்கா! :-)

சுந்தரா said...

சின்னப் பேரனின் சோகத்தையும் கோபத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க அம்பிகா...

பாராட்டுக்கள்!

ஹேமா said...

ஒரு சிறு குழந்தையின் மன அழற்சியை அப்படியே வார்த்தைகளாக்கியிருக்கிறீர்கள்.
அருமை.

அம்பிகா said...

அண்ணாமலையான்,

மாது அண்ணா,

ஹுசைனம்மா,

காமராஜ் அண்ணா,

தீபா,

ஆருரான் விசுவநாதன்,

விஜியண்ணா,

அமித்தம்மா,

முல்லை,

சுந்தரா,

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

வாங்க ஹேமா,

விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.

முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

வாங்க ஹேமா,

விருது பெற்றமைக்கு, பாராட்டுக்கள்.

முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

பா.ராஜாராம் said...

மாது சொல்வதுதான் அம்பிகா.

இப்போ எழுத்தாளர் இல்லையா?விமர்சனம் தாங்கனும் என் தங்கையே...

:-)

அம்பிகா said...

வாழ்த்துக்கள் மட்டுமல்ல,
விம்ர்சனங்களும் சந்தோஷமே.

நன்றி அண்ணா.

priyamudanprabu said...

நச்சுனு இருக்கு

அம்பிகா said...

வாங்க பிரியமுடன் பிரபு,

முதல் வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றிகள்.