Wednesday, January 13, 2010

`பொங்கலோ பொங்கல்’

` பொங்கலும் பொங்குது, பாலும் பொங்குது’

மகாநதி படத்தின் இனிய பாடல் காதுகளை நிறைக்கிறது.

அம்மா இருக்கும்போது,

` தை பொறந்தா வழி பொறக்கும்; தங்கமே தங்கம்,

தங்கசம்பா நெல் வெளையும்; தங்கமே தங்கம்.’

என்ற இந்த பழையபாடலை மிக இனிமையாகப் பாடுவாங்க.

வீடெங்கும் மஞ்சள் குலை, காய்கறிகள், வாழைத்தார்,
பொங்கல்பூ, கரும்பு வாசனை, ஒரு மங்களகரமான வாசனை.
பொங்கல வந்தால் வீடு மட்டுமல்ல, ஊரே களை கட்டி
விடுகிறது. வெள்ளையடித்து சுத்தமாக்கப் பட்ட வீடுகள்,
முற்றத்தை நிறைக்கும், மாக்கோலங்கள், ரங்கோலிகள்...
பொங்கல்விழா கிராமங்களில் தான் உற்சாகமாய்க் கொண்டாடப்
படுகிறது.

வெளிமுற்றத்தில் வைத்து பொங்குவதுதான் இங்கே
வழக்கம். பொங்கல் பொங்கும் போது பெண்கள் இடும் மங்கல
குரவையொலி அதிகாலையில் இருந்து இனிமையாக ஒலித்துக்
கொண்டேயிருக்கிறது.


எங்கள் வீட்டுவாசலில் இருக்கும் பிள்ளையார்.







அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

18 comments:

சந்தனமுல்லை said...

பொங்கல் வாழ்த்துகள்!

சந்தனமுல்லை said...

கோலமும் கூடையும் என்னை கவர்கின்றன. :-)

மாதவராஜ் said...

பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. எங்கள் வீட்டுலயும் அப்பா பழைய படங்களில் வரும் பொங்கல்பாட்டையெல்லாம் இசைக்கவிடுவாங்க.. உங்கள் வீட்டு பொங்கல் மிகக் களையாக இருக்கிறது..

சுந்தரா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் அம்பிகா!

இங்கே, துபாயிலும் காலையிலேயே பால் பொங்கிடுச்சு :)

பா.ராஜாராம் said...

பொங்கள் வாழ்த்துக்கள் அம்பிகா!

கொஞ்சம் வேலைகளில் தாமதமாயிருச்சு.வீட்டில் எல்லோருக்கும் என் வாழ்த்தை சொல்லுங்க.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

goma said...

வீட்டு விளக்கைப் பார்த்ததும் அட இது நம்ம ஊர் ஜாடையா இருக்கேன்னு பார்த்தேன் ...எங்க நெல்லை பக்கம் ஆறுமுகநேரி...வாஹ்..
பொங்கல் வாழ்த்துக்கள்

அம்பிகா said...

நன்றி, முல்லை.

மாதண்ணா, நன்றி.

முத்துலெட்சுமி, நன்றி.
டெல்லியில் பொங்கல் எல்லாம் எப்படி?

நன்றி, சுந்தரா.

தாமதமாக சொன்னாலும், வாழ்த்தும்,
வாழ்த்தும் மனசும் தானே முக்கியம்.
நன்றி. பா.ரா.

நன்றி, அண்ணாமலையான்,
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும்
அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

வாங்க goma,
நீங்களும் திருநெல்வேலியா?
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Deepa said...

அக்கா!

ரொம்ப அழகா பொங்கல் வெச்சிருக்கீங்க.
கோலமும் சூப்பர்.
நான் வருஷா வருஷம் கலர் கோலமாவது போடுவேன். இந்த வாட்டி அதுவும் மிஸ். :(

Paleo God said...

அருமை..படங்களும்..::))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பொங்கல் வாழ்த்துக்கள்

கோலமும், விளக்கு அலங்காரமும் மிக அருமை.

காமராஜ் said...

தைத்திருநாள் வாழ்த்துக்கள் அம்பிகா.

துபாய் ராஜா said...

பொங்கலோ பொங்கல்...

தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

பொஙலுக்கு நாங்கள் அங்கு வரவில்லை!!!
உங்கள் பதிவை படித்தபின்,அங்கு வந்து பொங்கலை கொண்டாடினது போல் இருந்த்து!!!!

பொங்கல் வாழ்த்துகள்!

PONRAJ-TUTICORIN

கமலேஷ் said...

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மாதேவி said...

பிள்ளையார்,கோலம்,கரும்பு யாவும் கிராமத்தை நினைவூட்டின.

தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.