.
.
கடைகளுக்கான பெயர்பலகைகள் தமிழில் எழுத பட்டிருக்க வேண்டும்
என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு அறிவித்தி
ருக்கிறது. நானறிந்த வரையில் நிறைய அழகுநிலையங்கள்
ஆங்கில பெயர்களில் தான் இருக்கின்றன. அதனால் ஆங்கிலம்
அல்லாத, அழகான பெயராக வைக்கலாமே என்று நினைத்தேன்.
என் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது இந்த ஞானோ
தயம் ஏற்படவில்லையே என்பதை அடிக்கடி வருத்தத்துடன் நினைப்பேன்.
`சாமுத்ரிகா பெண்கள் அழகுநிலையம்’ என அழகானபெயர்
(காரண பெயர்..?) வைத்தேன். பார்லருக்கு வருபவர்கள் என்னிடம் கேட்ட
கேள்வி, `உங்க பேரு சாமுத்ரிகா வா க்கா.?’. ` இல்ல அது எங்க அக்கா’
நுனிநாக்கு வரை வந்த பதிலை அடக்கி விட்டு, சாமுத்ரிகாலட்சணம் பற்றி
விளக்கினேன். சிலர், `சாமுத்ரிகா னா உங்க மகளா.?’ என்று இல்லாத
பெண்ணுக்கு பெயர் சூட்டினார்கள். மீண்டும் கோனார் விளக்கவுரை, பெயர்
காரணம். ஒரு பெண், `எதுக்கு போத்தீஸின் சாமுத்ரிகா பட்டு பெயரை
கடைக்கு வச்சிருக்கீங்க.?’ என்றாள் மகா புத்திசாலியாய். `அதுவா.. ப்ளீச்
பேஷியல் பண்ணிக் கொண்டால், ஒரு சாமுத்ரிகா பட்டு ஃப்ரீ தருவேன்’
என்றேன். அவள் சிறு ஐயத்துடன், என் முகம் பார்த்து , புரிந்தவளாய்.
`போங்கக்கா’ என்றாள். ஒரே ஒரு பெண் மட்டும், ` அழகான பெயர் வச்
சிருக்கீங்க மேடம்’ என்ற போது நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது.
அவளே தொடர்ந்து,` அம்மா தான் விளக்கம் சொன்னாங்க’ என்றாள்.
இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டதல்ல. உண்மை
யிலேயே நம், இளைய தலைமுறையினரிடம் தமிழறிவு எந்த அளவில்
இருக்கிறது என்பதை வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
ஆனால், இப்போதெல்லாம் ஏதாவது கேட்க போன் செய்வோர், `இது
சாமுத்ரிகா அழகு நிலையம் தானே’ என்று அழகாக கேட்கிறார்கள்.
ஒரு சின்ன சந்தோஷம், மனதில் பூ பூத்தாற்போல்...
.
.
25 comments:
நிறைந்த மனதோடு வாழ்த்துகிறேன்.... நிச்சயமாய் போற்றத்தக்க விடயம் தான்..
மன்னிக்கணும் மேடம், சாமுத்திரிகா என்பது தமிழ்ப் பெயர் இல்லை.
அது வடமொழிச் சொல்.
/*உண்மையிலேயே நம், இளைய தலைமுறையினரிடம் தமிழறிவு எந்த அளவில் இருக்கிறது என்பதை வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது*/
இது அவர்களுக்கு தெரிவிக்கப்படும் விஷயங்களைப் பொறுத்துள்ளது.
சாமுத்ரிகா வடமொழி சொல் என்றே எண்ணி இருந்தேன்... இல்லையா?
சாமுத்ரிகா என்பது வடமொழி சொல்லாகவே இருந்தாலும், தமிழிலும் அழகுக்கான இலக்கணம் பற்றி கூறும் போது சாமுத்ரிகா லட்சணம் என்று தானே பொதுவாக கூறுகிறோம். அந்தவகையில் ஓரளவு எல்லோரும் அறிந்த வார்த்தை தானே!வடமொழி கலப்பில்லாத தூய தமிழ் என்றில்லை, தமிழே தெரியவில்லை என்பது தான் உண்மை.
அழகு.
சாமுத்ரிகா தமிழ் பெயரில்லை என்று சுட்டி காட்டியதால் பதிவிலிருந்து தமிழ் பெயர் என்ற வார்த்தையை நீக்கி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
பொருத்தமான பெயர் தான்.. பெண்கள் படித்தவுடனே மகிழ்ச்சியாக வருவாங்க :)
ஆனால் நிறைய வடமொழி பெயர்களை தமிழ் பெயர்கள் என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவு ஒன்னோடு ஒண்னாக கலந்து விட்டது..
உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.
http://maunarakankal.blogspot.com/2010/04/blog-post_22.html
முதல் சொல் வடமொழியாக இருந்தாலும், தமிழில் வைக்கவேண்டும் என்று உங்கள் எண்ணத்துக்கு பாராட்டுக்கள்.
சாமுத்திரிகா.....
படிக்கும் போதே அழகா இருக்குதுங்க...
நல்ல பகிர்வு, அம்பிகா அக்கா! :-)
நல்ல முயற்சி.
நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்
அழகு நிலையைத்துக்கு ஏற்ற பெயர்.
நன்றி தோழி.
அழகு பெயர் கொண்டு வந்த கருத்துக்களை, அழகாக சொல்லி இருக்கீங்க. :-)
நல்ல பெயர்தான் தோழி.
நம்மூர்ல திருவிழா ஆரம்பிச்சாச்சா!!! இங்கே ஆங்கில பெயர்ப்பலகைகளை அடிச்சு உடைச்சு சேனைப்படை நடத்தி முடித்து விட்டது.
சாமுத்ரிகா என்றால் இறப்பின்முன் இன்பத்தை தரக்கூடிய கலை என்பது வடமொழிப் பொருள், வாழும்போதே இறப்பை வைத்துத்தான் இன்பத்தை பற்றி எண்ணவேண்டுமா..?
பாராட்டுக்கள்!
நீங்க சொன்ன மாதிரி ஒரு கோனார் நோட்ஸ் தேவைதான். நானும் என் பொண்ணுக்கு பெயர் வைத்துவிட்டு இப்போது கோனார் உரையுடனே அலைகிறேன்.
சாமுத்ரிகா = அழகு நிலையத்துக்கு பொருத்தமான பெயர், அது வடமொழி சொல்லாகவே இருந்தாலும்.
முதல் சொல் வடமொழியாக இருந்தாலும், தமிழில் வைக்கவேண்டும் என்று உங்கள் எண்ணத்துக்கு பாராட்டுக்கள்.
தமிழ் தமிழ் என்று சொல்லும் அரசு மிக பெரிய பிழை செய்து கொண்டுதான் உள்ளது ..அதாவது,
தமிழ் செம்மொழி மாநாடு சூன் 23 முதல் 27 வரை
ஏன் சூன் என்று சொல்லணும் தமிழ் மாதம் என்று ஓன்று உள்ளதே
நினைவு இல்லையா ஆனிமாதம் 9 முதல் 13 வரை என்று சொல்ல வேண்டாமா ..........
நல்ல எண்ணம், நல்ல ஆக்கம்....
வாழ்த்துக்கள் கேட்கவே அருமையாக இருக்கின்றது. உங்களை மாதிரி மற்றவர்களும் இப்படியே தைரியமாக செயல் பட வேண்டும்.
Post a Comment