Tuesday, April 27, 2010

சொத்து விற்றலும், சிரட்டை மிட்டாயும்...

.
`பத்திரமா உள்ள வை’

மனைவியிடம் நீட்டினான், மஞ்சள் பையை,

பத்திர ஆபீஸ் போய் வந்த கணவன்.


இந்தாடா..., இனிப்பு உனக்கு,

வாங்கியவர், வாங்கி தந்தது மகனுக்கு.


`போப்பா, இப்பவும் சிரட்டை மிட்டாயா?

அடுத்த தடவையாவது ஜாங்கிரி வாங்கியா..

சலித்து கொள்கிறான் மகன்.


ஆமா... இனும என்ன இருக்கு குடுக்க...

உனக்கு ஜாங்கிரி கொண்டார;

அழுது புலம்புகிறாள் அம்மாக்காரி.
.
.

22 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு...

அமைதி அப்பா said...

//அடுத்த தடவையாவது ஜாங்கிரி வாங்கியா..

சலித்து கொள்கிறான் மகன்.//

//அழுது புலம்புகிறாள் அம்மாக்காரி.//

அம்மா மற்றும் பிள்ளையின் எண்ணங்களை சிறப்பாக படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள்.

ஹேமா said...

குடும்ப நிகழ்வு.அவரவர் மனதின் உணர்வுகள்.கவிதையும்
உணர்வோடு அம்பிகா.

ஈரோடு கதிர் said...

//வாங்கியவர், வாங்கி தந்தது மகனுக்கு.//

இதை கையில் வாங்கும்போது எவ்வளவு கனமாய் இருந்திருக்கும்

சொர்ணா said...

வலியை சொல்கிறது கவிதை.

ஹுஸைனம்மா said...

//இனும என்ன இருக்கு குடுக்க...//

யதார்த்தம்!! அருமை அம்பிகா!!

ராமலக்ஷ்மி said...

உணர்வுகளின் வெளிப்பாடு அருமை அம்பிகா.

க.பாலாசி said...

யதார்த்தமான வாழ்வின் வெளிச்சம்.... அருமை...

அன்புடன் அருணா said...

யதார்த்தம்.

sathishsangkavi.blogspot.com said...

கவிதை நல்லாருக்கு...

ரிஷபன் said...

பாவம் குழந்தை அறியுமா பெரியவர் வலிகள்.. ’வலி’மையாய் வந்திருக்கு

காமராஜ் said...

யதார்த்தம்.

தக்குடு said...

யதார்த்தமான மனதின் ஒரு பிரதிபலிப்பு! அருமை!

VijayaRaj J.P said...

நானும் சிரட்டை மிட்டாய் சாப்பிட்டு
இருக்கிறேன்.

விற்பவர்களின் வலியை உணர்த்தும் பதிவு

Chitra said...

அருமையான கவிதை.

சுந்தரா said...

விற்கிறவர்களின் வலியை வார்த்தைகள் புரியவைக்கிறது.

கவிதை அருமை அம்பிகா.

Thenammai Lakshmanan said...

ரொம்ப வலித்தது அம்பிகா அம்மவின் வலி

Deepa said...

ந‌றுக்கென்ற‌ வ‌ரிக‌ள்.
அந்தத் தாயின் வலியை உண‌ர‌ முடிந்த‌து.

சந்தனமுல்லை said...

:-( ஒரு கதையை கவிதையாக்கிட்டீங்க அம்பிகா அக்கா!

மாதவராஜ் said...

நல்ல சொற்சித்திரம்.

அப்புறம் விருதுகளை எல்லாம் வாங்கி ஷோ-கேஸ்ல அடுக்கியாச்சு போலுக்கு!
வாழ்த்துக்கள். சந்தோஷமாயிருக்கு.

ராகவன் said...

Hi Ambika,

Vittha kaasu sirattai muttaaikke paththalaiyo... kodumaiyaa irukku ambika...

soththai idhu pola izhappadhu... kodumai...

aasaan sonnadhu pola azhaagaana sorchithram... idhu.

anbudan
ragavan

'பரிவை' சே.குமார் said...

அம்பிகா,
நடுத்தர குடும்பத்து வலிகளை அழகாய் கவிதை ஆக்கியிருக்கிறீர்கள். நல்லாயிருக்கு,

கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் ultra surf உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.



வாழ்த்துக்கள்.