.
`மருமகளின் டைரிக்குறிப்புகள்’ என்ற தொடர்பதிவுக்கு தீபா அழைத்திருந்
தார். சந்தனமுல்லையால் தொடங்கப் பட்ட தொடர்பதிவு இது. `டீனேஜ்
டைரிக் குறிப்புகள்’ என்று முல்லையால் தொடங்க பட்ட தொடர்பதிவு,
`பதின்பருவத்து குறிப்புகள்’ என ராகவனால் அழகாக பெயரிடப் பெற்று
வலையுலகெங்கும் வலம் வந்தது. மறுபடியும் நினைவலைகளை மீட்ட
செய்யும் ஒரு அருமையான தொடர்பதிவு.
பிறந்த வீட்டில் இருந்து முற்றிலும் புதிய சூழலில் அடியெடுத்து வைக்கும்
புதுமருமகள், நிறையவே அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஆனால் நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமா மகன் என்பதால்
இவ்வாறான அனுபவங்கள் அதிகமில்லை. என் நட்பு வட்டம், கல்லூரியின்
கடைசி நாளில், `பசுமை நிறைந்த நினைவுகளே’ என்று ஆட்டோக்ராப்,
கொஞ்சநாள் உருகி உருகி கடிதங்கள், இவற்றோடு நின்று விட்டதால்,
எனக்கென அழைப்பிதழ்கள் தேவைப் படவில்லை. திருமணப் புடவை,
நகைகள் இவற்றில் அதிக ஆர்வமில்லையென்றாலும், எனக்கு கொண்டு
வரப்பட்ட சட்டைதான், எனக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லாமல், தொள
தொள வென்றிருந்தது. சட்டையை போட்டதும் மகா எரிச்சல் வந்த
தென்னவோ உண்மை. ஏனென்றால், கல்லூரி முடித்து, வீட்டிலிருந்த
போது `டெய்லரிங்’ கற்று கொண்டு எனக்கான ஜாக்கெட் எல்லாம் நானே
தான் தைப்பேன். `பெயிண்ட் அடித்த மாதிரி போட்டிருக்கியே’னு மற்றவர்
கள் கூறும் அளவுக்கு தைத்துப் போடுவேன். பிறகென்ன... என் பெரிய
அண்ணி தான் அங்கங்கே ஊக்குகள் குத்தி சரி செய்து விட்டார்கள். வாழ்க்
கையும் இப்படித்தான், முன்னபின்னே இருந்தாலும் நமக்கேற்றார் போலசரி
செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்வது போலிருந்தது.
பிறகு தான் தெரிந்தது, அளவுசட்டை மாறிபோய் என் மாமியாரின் அளவில்
தைக்கப் பட்டிருந்தது.
கிராமங்களில் புதுப்பெண்ணுக்கு நிறைய டெஸ்ட் வைப்பார்களாம். காலை
யில் வாசல் தெளிக்க சொல்வார்களாம். தெளிக்கும் முறையை வைத்தே
அவள் சோம்பேறியா, செலவாளியா என்றெல்லாம் தெரிந்து கொள்வார்
களாம். பெண்களுக்கு மட்டும் தானா, ஆண்களுக்கு இல்லையா என்றெல்
லாம் கேட்க கூடாது. இது பெண்களுக்கான (அ)நீதி மட்டுமே. பெண்கள்
தானே வீட்டை நிர்வகிக்கப் போகிறார்கள் என்பதால் இவை ஏற்படுத்தப்
பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் இப்போது வழக்கத்தில் இருப்
பதாக தெரிய வில்லை. நல்லவேளை, எனக்கு அப்படி எதுவும் தேர்வுகள்
வைக்க வில்லை. என் அம்மாவும், என் அண்ணிகளுக்கு இப்படியெதுவும்
டெஸ்ட் வைக்க வில்லை. ஆனால் என் நாத்தனாருக்கு, அவள் மாமியார்,
சில மஞ்சள் துண்டுகளை கொடுத்து, அம்மியில் வைத்து தட்ட சொன்னார்
களாம் (பெண்ணின் பொறுமையை தெரிந்து கொள்ள). இவள் தட்டிய
முதல் தட்டிலேயே, அத்தனை மஞ்சள்துண்டுகளும் மூலைக்கொன்றாய்
தெறித்து ஓட, அவள் மாமியார் காணாமல் போன மஞ்சள்துண்டுகளை
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார். 13 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும்
கிடைக்க வில்லை.
கணவர்க்கு உள்ளூரிலேயே ஒரு பாக்டரியில் வேலை கிடைத்து விட,
நாங்கள் ஆச்சி(அம்மாவின் அம்மா) வீட்டிலேயே இருந்தோம். நான்
வளர்ந்த, படித்த அதே ஊர் என்பதால் பெரியதாக ஒன்றும் வேறுபாடுகள்
இல்லை. `சாப்ட்ட தட்டை கூட எடுக்காம ஆம்புளப் புள்ள மாதிரிப் போறி
யே’ ன்னு அம்மா திட்டும் போது `நாலு பையனுக்கு எடுக்கீங்க, என் ஒரு
தட்ட மட்டும் எடுக்க முடியாதா?’ என்று அம்மாவிடம் திமிர்த்தனமாய்
பெண்ணியம் பேசிய மாதிரி இங்கே பேச முடியாது. ஆச்சி வயதானவர்கள்.
எல்லாமே நான் தான் கவனிக்க வேண்டும். சமையலில் இருந்து அத்தனை
யும் பழகி கொண்டேன். என் மாமா என்னிடம் `பேங்க் எக்ஸாம் எழுதேன்’
என்றார்கள். மாமியார் அதெல்லாம் வேண்டாம் என்று விட்டார்கள். என்
கணவர்க்கும் அதில் விருப்பமில்லாததால் விட்டு விட்டேன். ஆனால் சில
வருடங்கள் கழித்து, நான் `பியூட்டிஷியன் கோர்ஸ்’ படிக்கப் போகிறேன்,
என்ற போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டிலிருந்து
தான் படித்தேன்.
எனக்கு கொஞ்சம் கோபம் வரும் (செல்ல பெண்ணாதலால்). ஆனால் என்
கணவர்க்கு என்னை விட நிறைய கோபம் வரும் என்பதால் நான் பெரிய
கோடு பக்கத்தில் சின்ன கோடாகிப் போனேன். கொஞ்சம் வாக்குவாதம்,
நிறைய அனுசரித்தல்கள்.....! என் கணவரிடம், இப்படி ஒரு பதிவேழுதப்
போகிறேன். உங்களை பற்றி எழுதினால் என்ன செய்வீர்கள் என்றேன்.
`ஆபீஸ்ல போய் மைனஸ் வோட்டு போடுவேன்’ என்றார்.
வாழ்க்கை என்பது யாருக்கும் நினைத்தபடியே முழுமையானதாய்
அமைந்து விடுவதில்லை. அதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சரியாகஅமைகிறது
துரதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால்
பலருக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட சூழலில் தான் அமைகிறது. அவரவர்
திறமைக்கேற்ப சரிசெய்து கொள்கிறோம். அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.
` ஒன்றை அடைய முடிந்தால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது
ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.
என்கிறார் அமெரிக்க கவிஞர் எமர்சன். இதேதான் வாழ்க்கையும்.
தங்கள் அனுபவங்களை நம்முடன் பகிர நான் சுந்தரா, ஹூஸைனம்மா
இருவரையும் அழைக்கிறேன்.
.
31 comments:
அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.
அழகான பதிவு.
//வாழ்க்கை என்பது யாருக்கும் நினைத்தபடியே முழுமையானதாய்
அமைந்து விடுவதில்லை. அதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சரியாகஅமைகிறது
துரதிர்ஷ்டவசமாய் சிலருக்கு சகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால்
பலருக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட சூழலில் தான் அமைகிறது. அவரவர்
திறமைக்கேற்ப சரிசெய்து கொள்கிறோம். அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.
` ஒன்றை அடைய வேண்டுமானால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது
ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.
என்கிறார் அமெரிக்க கவிஞர் எமர்சன். இதேதான் வாழ்க்கையும்.//
வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். அருமையான பதிவு.
நல்ல பகிர்வு சகோதரி..
சில இடங்களில் இயல்பாய் வந்திருந்த நகைச்சுவையை மிக ரசித்தேன்.
\\மாமியார்,சில மஞ்சள் துண்டுகளை கொடுத்து,அம்மியில் வைத்து தட்ட சொன்னார்களாம் (பெண்ணின் பொறுமையை தெரிந்து கொள்ள). இவள் தட்டிய முதல் தட்டிலேயே, அத்தனை மஞ்சள்துண்டுகளும் மூலைக்கொன்றாய் தெறித்து ஓட, அவள் மாமியார் காணாமல் போன மஞ்சள்துண்டுகளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்.//
இரண்டாவது தட்டு தட்டி இருந்தால்
அம்மித் துண்டுகளை தேடவேண்டிய
நிலை ஏற்பட்டு இருக்குமோ...
\\அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.//
நல்ல வாழ்வியல் தத்துவம்.
//` ஒன்றை அடைய முடிந்தால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது
ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.
என்கிறார் அமெரிக்க கவிஞர் எமர்சன். இதேதான் வாழ்க்கையும்.//
சரியாக சொன்னீங்க.
அருமை சகோ!
இந்த தொடர் பதிவில், நான் வாசித்த வரையில் the best 1!
//`ஆபீஸ்ல போய் மைனஸ் வோட்டு போடுவேன்’ என்றார்.//
இந்த இடத்தில் வெடித்து சிரித்துவிட்டேன்.. :)
அருமையான பகிர்வு அம்பிகா மேடம்; ரொம்ப நல்லாருக்கு..
அம்பிகா பயப்படுத்துறீங்களா தைரியம் குடுக்கிறீங்களான்னு தெரில.பயமாத்தான் இருக்கு.
நல்ல பதிவு.
- உங்கள் விறுவிறுப்பான எழுத்து நடையிலேயும் - சுவாரசியமான செய்திகளிலேயும் - அருமையான கருத்துக்களிலும் - உங்கள் தனித்துவம் தெரிகிறது.... அருமை. பாராட்டுக்கள்!
மஞ்சள் துண்டு சிதறியதும் ,
‘இல்லம் முழுவதும் என் மருமகள் மங்கலம் நிறையவைத்து விட்டாள்” என்று என்றைக்கு ,மாமியார்கள் சொல்கிறார்களோ ,அன்றுதான் குடும்பம் குதூகலக் குடும்பமாகும்
அழைப்பை ஏற்று உடனே எழுதியமைக்கு நன்றி அக்கா.
பக்குவப்பட்ட உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட அழகான பகிர்வு.
//அளவுசட்டை மாறிபோய் என் மாமியாரின் அளவில்
தைக்கப் பட்டிருந்தது.// அடக்கொடுமையே!
//நான் பெரிய கோடு பக்கத்தில் சின்ன கோடாகிப் போனேன்.// நச்சென்ற உவமை!
மஞ்சள் துண்டுகள்.. :))))
///என் கணவரிடம், இப்படி ஒரு பதிவேழுதப் போகிறேன். உங்களை பற்றி எழுதினால் என்ன செய்வீர்கள் என்றேன்.
`ஆபீஸ்ல போய் மைனஸ் வோட்டு போடுவேன்’ என்றார்.///
அருமையான பதில்!!!
\\\` ஒன்றை அடைய முடிந்தால் மற்றொன்றை இழக்க நேரிடுகிறது
ஒன்றை இழக்க நேர்ந்தால் பிறிதொன்றை அடைய முடிகிறது’.///
அருமையான பதிவு!!
அழகா எழுதியிருக்கீங்க...சில இடங்களில் எள்ளலும் ரசிக்கமுடிகிறது. அனுசரித்துப்போகிறது வாழ்வில் கணவன் மனைவி கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்கள்...
எங்க பக்கத்துல வெற்றிலையில சுண்ணாம்ப தடவச்சொல்லி பொண்ணு செலவாலியா, சிக்கனவாதியான்னு பார்ப்பாங்களாம்... இப்ப அப்டியில்ல...
எமர்சனின் வரிகளைப் படிக்கின்றபோது "பாவம்.. நிறைய அனுபப்பட்டிருப்பாரோ?"ன்னு தோணுது..!
அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..!
அழகான பதிவு.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
சகோதரி.
அழகான நடையில் எழுதப்பட்டுள்ளது..
கூடவே ஆங்காங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவையும் ரசிக்க வைத்தது...
தொடர்ந்து கலக்குங்கள் அம்பிகா...
அர்த்தமுள்ள பிடிவாதங்கள் பிடிக்கலாம்தானே... :-)))))
சரளமான, நகைச்சுவை ததும்பும் நடை. ரசித்தேன் அம்பிகா!
அருமையான பதிவு அம்பிகா .
அழகான நினைவலைகள்!
//அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.//.....
என் பாலிசியும் இதுதான்.
ரொம்ப நல்ல பகிர்வு சகோதரி...
நிறைய புதுமையான விசயங்களும், படிக்கும் பொழுது நகைசுவையுமாய் மிக அருமையாக இருக்கிறது..
அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.
உண்மையினை அழகாக சொல்லி இருக்கீங்க அம்பிகா...
அம்பிகா அக்கா,
தங்களுக்கு விருது இங்கே http://sandanamullai.blogspot.com/2010/07/blog-post_06.html
இடுகையை வாசித்தேன். இடுகையை குறித்து பிறகு வந்து பின்னூட்டமிடுகிறேன்! நன்றி!
வாழ்க்கையும் இப்படித்தான், முன்னபின்னே இருந்தாலும் நமக்கேற்றார் போலசரி
செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்வது போலிருந்தது//
சரியான புரிதல் அம்பிகா..
சுவாரசியமாகவும் மென்சோகத்தோடும் இருந்தது..வாசிக்கும்போது! தொடர்ந்து எழுதியமைக்கு நன்றி அக்கா!
/கிராமங்களில் புதுப்பெண்ணுக்கு நிறைய டெஸ்ட் வைப்பார்களாம்./
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பையனுக்கு எனி டெஸ்ட்?? :-))
அனுசரித்தல்கள்....ஹ்ம்ம்..அதில்தான் குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது இல்லையா அக்கா?!
அழகா எழுதி இருக்கீங்க .. அம்பிகா..
நான் என் நாத்தனார் இருவரும் எங்க மாமியார் சேலையையே லீவுல கட்டிப்போம். அவங்க சட்டை லூசா இருந்தாலும் போட்டுக்குவோம்..அது ஒரு ஜாலி.. அதே மாமா சட்டைகளும் காணாப்போகும் பசங்க வந்துட்டா.. :)
//அர்த்தமற்ற பிடிவாதங்களினால் வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால் அழகாக்கிக் கொள்ளலாம்.//
அருமையான பதிவு....
ரசித்தேன், நீங்கள் இயல்பான நகைச்சுவையாளர் போலும்... அருமையாக பதிவிட்டு இருக்கின்றீர்.
அருமை....
//அவரவர்
திறமைக்கேற்ப சரிசெய்து கொள்கிறோம். அர்த்தமற்ற பிடிவாதங்களினால்
வாழ்வை தொலைத்துக் கொள்வதை விட, சில பல அனுசரித்தல்களினால்
அழகாக்கிக் கொள்ளலாம்.//
சரியாகச் சொன்னீர்கள்...
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
அம்பிகா, நான் ஊருக்குப் போயிருந்ததால் இந்தப் பதிவைப் படிக்கவில்லை; நீங்கள் பின்னூட்டிய பிறகுதான் தேடிப் படித்தேன்..
நல்லாருக்கு.. வாழ்க்கையை சட்டை அட்ஜஸ்ட் பண்றதிலருந்து ஆரம்பிச்சிருக்கீங்க..
என்னையும் அழைச்சதுக்கு நன்றி அம்பிகா!!
நாம ரெண்டு பேருமே ”ஒன்றை இழந்தால்தான் பிறிதொன்றை அடைய முடிகிறது”ன்னு எழுதிருக்கோம் பாருங்க!! :-))))
Post a Comment