Thursday, July 29, 2010

எங்கே செல்கிறது இளைய தலைமுறை...?

.
.
பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,

துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்

காயம். இன்று காலை நாளிதழில் வெளிவந்த செய்தி இது. சம்பவம்

நடந்தது, தெற்கு டெல்லியில், `வீர்சந்திரா கார்வெல் பப்ளிக் ஸ்கூல்’

எனும் தனியார் பள்ளியில். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும்

போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில், சக மாணவனை துப்பாக்கியால்

சுட்டிருக்கிறான்.




கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை என பெருகிவரும்

வன்முறைகள் பள்ளி மாணவர்களிடையேயும் பரவியிருப்பது அதிர்ச்சி

யளிக்கிறது. இளைய தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்

கிறது? இத்தனை தீவிர விரோதமும், குரோதமும் வளர யார் காரணம்?

குறை எங்கிருக்கிறது?

பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்

முறையா?



எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,

எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண

மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர். ஆறு

மாதமாக அந்த குழந்தைகள் பேசுவது கூட கிடையாது. இது ஒரு சின்ன

உதாரணம் அவ்வளவே. இப்படி குழந்தைகளிடையே துவேஷத்தை

வளர்த்தால், அவர்கள் பெரியவர்களாகும் போது எப்படியிருப்பார்கள்?

ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,

சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்து

கின்றன.


என்ன செய்யப் போகிறோம் நாம்..?
.
.

21 comments:

அமைதி அப்பா said...

எனக்கு தெரிந்த இரு குழந்தைகள், ஒரே வகுப்பில் படிப்பவர்கள்,
எப்போதும் ஒன்றாக விளையாடுபவர்கள், பெற்றோர் சண்டை காரண
மாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு போகின்றனர்.//

இது தான் கூடாது. பெரியவர்கள் சண்டையில், குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என்பதற்கு இதுதான் உதாரணம்.

நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

//இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம், சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்துகின்றன.//

ithuvey unmai Sister.

தமிழ் உதயம் said...

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,///

பெரியோர்களிடமும் குறுக்கி விட்டன. அதன் விளைவே, இளைய தலைமுறை கற்று கொள்ளாமல் போனது.

Anonymous said...

அமெரிக்காவில்தான் நடந்து கொண்டிருந்தது. இப்போ இங்கேயுமா

சாந்தி மாரியப்பன் said...

//பெரியோர்களிடமும் குறுக்கி விட்டன. அதன் விளைவே, இளைய தலைமுறை கற்று கொள்ளாமல் போனது//

கத்துக்கொடுக்க வேண்டியவங்களே கத்துக்கிற நிலையில் இருப்பதால்தான் இந்த நிலை.

க.பாலாசி said...

என்னத்த சொல்றது... வருத்தமாத்தான் இருக்கு....

Deepa said...

//ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,

சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்துகின்றன.
//

:-((

ponraj said...

//பள்ளிகூடத்தில் நடந்த கோஷ்டிமோதலில், 9ம் வகுப்பு மாணவன்,

துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து 8ம் வகுப்பு மாணவன்///

//கல்லூரிமாணவர்கள் மோதல், அடிதடி, கொலை//

யோசித்துப் பார்த்தால்,வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்க போகிறது??
பயமாகத்தான் இருக்கிறது!!!
நல்ல பதிவு!!
ஒரு வேண்டுகோள் அடிக்கடி பதிவு எழுதுங்கள்!!!(நீண்ட இடைவெளி இல்லாமல்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெற்றோர் வளர்ப்பிலா? திரைப்படங்களில் வெளிப்படும் அதீத வன்

முறையா?

//
இரண்டுமே தான்.. பலருக்கு நேரமில்லாமல் பணத்தின் பின் ஓடுவதால் கவனிப்பு குறைந்த குழந்தைகள் இப்படியாகின்றது. நேர்வழிப்படுத்தவேண்டிய பெற்றோர் அல்ரெடி அதிரடியானவங்களா இருந்தா என்னத்த செய்யறது...அவங்கதானே துப்பாக்கிய வீட்டுல வச்சிருக்கிறாங்க

Starjan (ஸ்டார்ஜன்) said...

இது வருத்தமான விசயந்தான். பெற்றோர்கள் செய்யும் தவறுகளால் பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

நீங்கள் சொல்வதுபோல பிள்ளைகளுக்கும் சின்னவயசிலே நஞ்சை விதைத்ததை போல..குரோதத்தை வளர்க்கிறார்கள். ஏதும் அறியா குழந்தைகள் பெரியவர்களானதும் பகைக்குள்ளே வாழக்கூடிய சூழல்.

நல்ல பகிர்வு அம்பிகா. வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

இது பற்றி நிறைய சொல்லலாம் அம்பிகா.

santhanakrishnan said...

நாம் அனைவரும் விழித்துக் கொள்ள
வேண்டிய நேரம் வந்துவிட்டது.

sathishsangkavi.blogspot.com said...

//ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை
குறுக்கி விட்டன//

உண்மை....

குழந்தைகளை தொலைகாட்சியில் இருந்து மீட்கும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் உண்டு... குழந்தைகளுக்கு அதிகமாக தொலைகாட்சி பார்க்க விடாமல் சின்ன சின்ன விளையாட்டை சொல்லிக்கொடுக்கலாம்....

ஹேமா said...

இப்போ உள்ள தலைமுறையினர் எதற்கும் துணிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
கவலையான விஷயம் அம்பிகா.

வினோ said...

அம்பிகா, நல்ல பகிர்வு.. வேதனையான உண்மை... இந்த கேள்விக்கு பதிலே இல்லை...

அ.முத்து பிரகாஷ் said...

சிந்திக்க வேண்டிய கேள்விகள் ...

Chitra said...

ஏற்கெனவே டிவியும், கம்ப்யூட்டரும் நம் குழந்தைகளின் நட்புவட்டத்தை

குறுக்கி விட்டன. இளைய தலைமுறையினரிடம் அன்னியோன்னியம்,

சகிப்புதன்மை குறைந்து விட்டதையே இந்த வன்முறைகள் உணர்த்துகின்றன.


...... இதுதான் வேதனையான உண்மை.... இதை குறித்து பல பெற்றோர்கள் கவலை பட்டதாகவே தெரியவில்லை.... ம்ம்ம்ம்..... மிகவும் அருமையான பதிவுங்க.....

பவள சங்கரி said...

உண்மை. மனம் வலிக்கத்தான் செய்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு..

சிந்திக்க வேண்டிய கேள்விகள் ..

ஜெயந்தி said...

காலத்தோட மாற்றம். பெற்றோர்களைவிட வெளி உலகம் அவர்களை அதிகம் ஈர்க்கிறது. இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது கடினமான காரியம்தான். அதை உணர்ந்து பெற்றோர்களும் சரியான முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

vasan said...

மேலைக் க‌லாச்சார‌ம் வேண்டுமென்றுதானே,நாம் குழ‌ந்தைக‌ளுக்கு
பூட்ஸ் போட்டு, குழாய் மாட்டி, க‌ழுத்தில‌ டையை க‌ட்டி,
ம‌ம்மி டாடி அங்கிள் கேட்டு, கோட்டு சூட்டு, யுஎஸ் போக‌ த‌யார் ப‌ண்றோம்.
குழ‌ந்தைக‌ளும், அத‌ற்கு த‌யாராகிறார்க‌ள். மண்ணின் பூர்வீக‌க்குடிக‌ளைக்
கொன்ற‌ழித்து, குடியேறிய‌ ம‌க்க‌ள் அல்ல‌வா இந்த‌ அமெரிக்க‌ர்க‌ள்.