Sunday, August 1, 2010

என்னை, நானே...! [ தொடர்பதிவு ]

.
.
அமைதிச்சாரல் அழைத்திருந்த தொடர்பதிவு இது. பதிவுலகில் நாம்

எப்படி பட்டவர் ?. நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதன்

மூலம் நம்மிடம் உள்ள குறை, நிறைகளை உணர, களைய ஒரு

வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அம்பிகா.


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


உண்மையான பெயரே தான். [ நல்லா தானே இருக்கு.]



3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அண்ணன் மாதவராஜ் ஒரு பதிவில் என்னை பற்றி இப்படி எழுதி இருந்தார்.

”என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை,

இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத்

துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு

"இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக்

கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.”


உண்மையும் அதுதான். அதை படித்தபின் ஏற்பட்ட ஆர்வத்தில், வலை

பக்கங்களை படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள்... போன

டிசம்பரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதலானேன்.



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன

வெல்லாம் செய்தீர்கள்?


வலைப் பதிவு தொடங்கிய புதிதில், என் பெரிய மகன்,` மாமாவிடம்

சொல்லி `தினத்தந்தியில்’ விளம்பரம் செய்யுங்க’ என்று கேலி செய்வ

துண்டு. `ஹூம் ’ என அவனை முறைத்து விட்டு மிகுந்த `தன்னம்பிக்

கையுடன்?’ எழுதிக் கொண்டிருக்கிறேன். [ ஒரு நாள் பிரபலம் ஆவோம்

என்ற நம்பிக்கையுடன் ]



5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து

கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை

என்றால் ஏன்?


ஓரளவு. பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.



6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது

பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


நம் உணர்வுகளை பதிய, வெளிப்படுத்த, நம் போன்றோரை அறிந்து

கொள்ளும் களமாக வலைத்தளம் உதவுகிறது. [ சம்பாதிக்கிறதா?

ஹா..ஹா..]



7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?

அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


இந்த ஒன்று மட்டுமே!



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது

பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்


பொறாமையெல்லாம் இல்லை. ஆனால் பலரது எழுத்துக்களால் ஈர்க்கப்

பட்டிருக்கிறேன். அவர்களை போல எழுத வேண்டும் எனும் ஆசை உண்டு.



9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு

பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,

திரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,

சகோதரிகள் முல்லை, தீபா... இப்போது ... நீங்கள் எல்லோருமே!

பாராட்டுக்கள் உற்சாகப் படுத்துகின்றன. நன்றாக எழுத வேண்டும் எனும்

உத்வேகம் தருகின்றன.



10கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு

தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்


என்னை பற்றி நிறைய எழுதி விட்டேன். இங்கு வந்து நிறைய நட்புகள்,

சொந்தங்கள் கிடைத்திருக்கின்றன. நெகிழ்வாக உணர்கின்றேன். இன்னும்

எழுத்துக்களை செம்மை செய்ய வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.


பதிவை தொடர நான் அழைப்பது,

மாதவராஜ்

காமராஜ்

நேரம் அனுமதித்தால் தொடருங்கள்.
.
.

22 comments:

வினோ said...

நம்பிக்கை தான் தோழி..... இன்னும் பல பதிவுகள் எழுதி என்னை போல சின்ன பசங்கள மகிழ்விங்க...

அது போகட்டும்.... பதிவு....
சுயசரிதையா இல்ல சுயவிளம்பரமா? ;)

அமைதிச்சாரல் said...

தொடர்ந்ததுக்கு நன்றிங்க.. சுய அலசல் நல்லாருக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பதில்கள்.. நல்ல பகிர்வு அம்பிகா மேடம்.

செ.சரவணக்குமார் said...

பதில்கள் அனைத்தும் மிக அருமை.

பா.ராஜாராம் said...

transparent அம்பிகா!

அதென்ன, ரெண்டு அண்ணன்களை மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க? டூ அம்பிகா. :-)

உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு

பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

//முதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,

திரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,//

ஹி..ஹி.. காமு,

சகோதரனில் உமக்கு முந்திட்டேன்.

ஆனா, அண்ணனில் பின் தங்கிட்டேன் ஓய். (என்னையும் அண்ணன்னு கூப்பிடேன் அம்பிகா.)

ஆனா, மாது அண்ணன் முதல் என்பது ஓவர்.

காமு, என்ன நெனைக்கிற?

வெறும்பய said...

அருமையான பதில்கள்.

Chitra said...

எளிமையான பதில்களில், உங்கள் முத்திரை பதித்து இருக்கிறீர்கள்.... அருமை.

Mahi_Granny said...

சில மாதங்களிலே நல்ல இடமும் பெயரும்.. இன்னும் உயர வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

பிரபல பதிவர் அம்பிகாவுக்கு வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.//
:)
அது என்னங்க தலைப்பு இப்படி.. புதுசா வேற தொடரோன்னு நினைச்சிட்டேன்.:)

ரவிச்சந்திரன் said...

நல்ல பகிர்வு....

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

LK said...

nalla irukunga suya vimarsanam

அம்பிகா said...

\\ஆனா, அண்ணனில் பின் தங்கிட்டேன் ஓய். (என்னையும் அண்ணன்னு கூப்பிடேன் அம்பிகா.\\
ஸாரி. பாரா அண்ணா.

\\ஆனா, மாது அண்ணன் முதல் என்பது ஓவர்.\\
பதிவு சரியில்லையென்றாலும், முதல் குட்டு அண்ணனுடையதாகத் தான் இருக்கும்.


\\அதென்ன, ரெண்டு அண்ணன்களை மட்டும் கூப்பிட்டு இருக்கீங்க? டூ அம்பிகா. :-)\\


நிறைய பேர் எழுதி விட்டார்கள். இவங்க ரெண்டு பேரும் எழுதலைனு நிச்சயமா தெரிஞ்சதால கூப்பிட்டேன்.

ஜெயந்தி said...

உங்களை நீங்களே நல்லாயிருக்கு. பதில்கள் எதார்த்தமாக வந்துள்ளது.

அக்பர் said...

பதில்கள் அழகாகவும் நேர்மையாகவும் உள்ளது. உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
பிரபல பதிவர் அம்பிகாவுக்கு வாழ்த்துக்கள்..//

:)) ரிப்பீட்டு!

ஹேமா said...

என்னை நானே....உங்களுக்குள் நீங்கள்.உண்மை அம்பிகா ஒளிவற்ற மனம் திறந்த பதில்கள்.

சே.குமார் said...

சுய அலசல் நல்லாருக்கு.

ponraj said...

நன்றாக இருந்தது உங்கள் பதிவு!!!

Sethu said...

வெளிப்படையான பதில்கள். உடன் பிறந்தவர்களின் அரவணைப்பு எப்பொழுதும் இருக்கும் போது மனிதர்களின் பக்க பலம் மேன்மேலும் கூடுகிறது. வாழ்த்துக்கள்.

Jey said...

மழுப்பல் இல்லாத நேரடியான பதில்கள்.

R.Gopi said...

தொடர் பதிவு எழுதி பிரபல பதிவர் லிஸ்டில் சேர்ந்த அம்பிகாவிற்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓ, மற்றொரு பெரிய ஜே....