Friday, October 8, 2010

`கொடரிப்பேர்’

.
.`கொடரிப்பேர்...., கொடரிப்பேர்...., குடைரிப்பேர் செய்பவனின் குரல்

உரக்க ஒலிக்கிறது. `ஏ கொடரிப்பேர்... இங்க வா...’ ஒரு குரல் அழைக்

கவும் நிற்கிறான். `இந்த பட்டனைக் கொஞ்சம் சரி பண்ணிக்குடு’. சாலை

யின் ஓர்ஓரத்தில் அமர்ந்து கொள்கிறான். பையிலிருக்கும் உபகரணங்களை

எடுத்து பட்டனை சரி செய்ய ஆரம்பிக்கிறான். அதற்குள் `இந்த கம்பியக்

கொஞ்சம் சரிபண்ணித் தா..., இதோ நடுவுல கொஞ்சம் கிழிஞ்சிருக்குப்

பாரு’ அடுத்தடுத்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.



ஒவ்வொன்றாய் சரிசெய்து கொண்டே, இருட்டிக் கொண்டுவரும் வானத்தை

யும் அவ்வப்போது பார்த்துக் கொள்கிறான். கையிலிருக்கும் வேலை முடிவ

தற்கும், மழை பெருந்தூறலாய் விழுவதற்கும் சரியாயிருந்தது. உடமை

களை அவசரவசரமாய் பொறுக்கி கிழிந்ததுணிப் பையினுள்ப் போட்டு,

இடதுதோளில் தொங்க விட்டுக் கொண்டான். நான்கைந்து உடைந்துபோன

குடைகளை வலதுகக்கத்தில் இடுக்கிக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்

பித்தான். `கொடரிப்பேர்... என்ற குரல் மழையில் கரைந்து போகிறது.

.

22 comments:

எஸ்.கே said...

அருமை! மிக நன்றாக உள்ளது!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொடை கூட ஆடம்பரம் போல..அம்பிகா..

எங்க வீட்டு வேலைக்காரங்களும் குடை வச்சிக்கிற்தே இல்லை.. மழை வந்தா என்கிட்ட வாங்கிட்டு போய்ட்டு குடுப்பாங்க..

வினோ said...

நல்லா இருக்குங்க...

ராமலக்ஷ்மி said...

// `கொடரிப்பேர்... என்ற குரல் மழையில் கரைந்து போகிறது.//

வாசிப்பவர் மனதும். நல்ல இடுகை அம்பிகா.

முகுந்த்; Amma said...

மனதை எதோ செய்கிறது “கொட ரிப்பேர்”

பவள சங்கரி said...

உண்மைதாங்க..........ஊர் குடையெல்லாம் சரி செய்யற ரிப்பேர்காரர் தான் மழையில நனையிறது கூட தெரியாம இருக்கிறத என்ன சொல்ல........காலத்தின் கோலம்....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் கொடரிப்பேர்..

Unknown said...

நல்லா இருக்குங்க. பாவம் தனக்குன்னு ஒரு குடை தேவைங்கறத உணராம செய்யும் தொழிலே தெய்வம்னு இருக்கிற உழைப்பாளிகள் நிறைய இருக்காங்க. நல்லா வெளிகொனர்ந்திருக்கீங்க.

Unknown said...

கவிதையாய் இருக்கிறது ...

எம் அப்துல் காதர் said...

பெரும்பாலான உழைப்பாளிகள் இப்படி தான் இருக்கிறார்கள்

ஜெயந்தி said...

சூப்பர். நச்சுன்னு இருக்கு.

http://rkguru.blogspot.com/ said...

ரொம்ப நல்லா இருக்கு..... வாழ்த்துகள்

மாதேவி said...

நன்றாய் சொன்னீர்கள்.

இங்கு மழை வந்தால் குடைகளும் தெருவோரம் ரிப்பேருக்கு குவிந்துகிடக்கும்.

ஹேமா said...

இதுதான் வறுமையின் இயல்நிலை அம்பிகா !

காமராஜ் said...

குடையல்ல வாழ்க்கை ரிப்பேர். ஒரு சின்ன நாட்பெரிய்ய சமச்சரம். சூப்பர்.

க.பாலாசி said...

நிதர்சனம்... இந்த கொடரிப்பேர் வார்த்தைகள் தெருவில் ஒலிக்கக்கேட்டே ரொம்ப நாளாச்சுங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நெகிழ வைத்த கதை. நிறைய பேர், பிறர் நலனுக்காக கஷ்டப்பட்டு உழைப்பவர் வாழ்க்கையில் தம்முடைய நலனுக்காக எதுவும் செய்யமுடியாத நிலை. ரொம்ப கஷ்டமான ஒன்று.

/// ராமலக்ஷ்மி said...

// `கொடரிப்பேர்... என்ற குரல் மழையில் கரைந்து போகிறது.//

வாசிப்பவர் மனதும். நல்ல இடுகை அம்பிகா. ///

சரிதான். எங்கள் மனதும். நல்ல கதை.

sakthi said...

அம்பிகா நிஜத்தின் வலி உங்கள் படைப்பில் தெரிகின்றது அருமை தோழி!!!!

'பரிவை' சே.குமார் said...

அருமைங்க...
சிறிய கதைக்குள் பெரிய விஷயம்...
வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

(ரிப்பேரான) குடைகள் தன்கையில் இருந்தபோதும், அதைச் சரிசெய்து பயன்படுத்தாமல், மழையில் நனைந்துகொண்டே செல்லுமளவு மழை அவரை பாதிக்கவில்லை போல!!

சுந்தரா said...

கவிதையாக ஒரு கதை.

ரொம்ப நல்லாருக்கு அம்பிகா.

venu's pathivukal said...

அன்புத் தோழர் அம்பிகா

அற்புதமான ஒரு குறும்படம்
கவித்துவக் காட்சி மொழியில்...
அபாரம் உங்களது பதிவும், பார்வையும்..

எஸ் வி வேணுகோபாலன்