Monday, October 18, 2010

குலசை, தசரா திருவிழா

.
.மூன்று ச.கிமீ. பரப்பளவேக் கொண்ட சிறிய கடற்கரை கிராமம், இன்று

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி தசராதிருவிழா இங்கு தான் பிர

பலம்.மைசூரைப் போல பிரம்மாண்டமோ. ஆடம்பரமோ கிடையாது.

இந்த திருவிழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்

வதாக கூறப்படுகிறது. குலசை என்று சுருக்கமாக அழைக்கப் படும் குல

சேகரப்பட்டிணம் முற்காலத்தில் பாண்டியர்களின் துறைமுகமாக திகழ்ந்

தது. தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக மாற்றப் பட்டபின்னர், இதன்

முக்கியத்துவம் குறைந்தாலும் 300ஆண்டுகள் பழமையான முத்தாரம்மன்

கோயில் அனைவரையும் ஈர்த்துள்ளது.


இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், பக்தர்கள் விதவிதமான மாறுவேட

மணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது தான். நவராத்திரி

தொடக்க நாளன்று, மாலையணிந்து, காப்பு கட்டி விரதம் தொடங்குவர்.

அவரவர் விருப்பத்திற்கேற்ப அம்மன், காளி, ராமர், சீதை, முருகன்,

ஹனுமன், கரடி என பலவிதமான வேடமணிந்து, வீடுவீடாக வந்து,

அம்மனுக்கு காணிக்கை வாங்கி கோயிலுக்கு செலுத்துவர். இந்த பத்து

நாட்களிலும், ``முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க’’ எனும் குரல்களை

தினம் பலமுறை கேட்கலாம். கிறிஸ்டியன், முஸ்லீம் என அனைத்து

மதத்தவரும் இவர்களுக்கு காணிக்கை போடுவது ஆச்சர்யமான

விஷயம்.
ஞானமூர்த்தியாக சிவனும்,முத்தாரம்மனாக சக்தியும்

ஒன்றாக காட்சி அளிப்பது மற்றோரு சிறப்பம்சம்.
``வாராளே..., வாராளே.., முத்தாரம்மா ; நாங்க

வேஷம் கட்டும் அழக பாக்க ...

என்னும் பாடல் அழகான நாட்டுப்புற மெட்டில், நெல்லை, தூத்துக்குடி

மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஒலிக்கக் கேட்கலாம்.. வேடம்

அணிந்த பக்தர்கள், காலை ஏழுமணியிலிருந்து, இரவு பதினொருமணி

வரையிலும் கூட வருகின்றனர். சிலர் குழுக்களாக சேர்ந்து மேளதாளத்

துடன் ஆடியபடி வருவர். வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை,

வருடாவருடம் அதிகரித்து வருகிறது.


எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த பக்தர்கள்

காளி


அம்மன்.
ஹனுமன்

லட்சகணக்கான மக்கள் கூடுவதால், இந்த சிறியகிராமம் திணறித்தான்

போகிறது. அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறிய

விஷயம் இது. வேடமணியும் பக்தர்கள் உலோகத்தாலான சூலம், வேல்

கொண்டு வருவது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும் தடையை

மீறி பலர் கொணர்வதால், கூட்டநெரிசலின் போது பலருக்கு குத்தி

கிழித்து காயம் ஏற்படுகிறது. அவர்களுக்கு தையல் போடுவது,ம் , கட்டு

போடுவதுமே எங்களுக்கு பிரதான வேலை என்றார்.


நேற்று முந்தினம், இப்படித்தான் கரடி வேடமணிந்து வந்த பக்தரின்

ஆடையில் ( கருப்பு நிற பாலிஸ்டர் துணியில் இழைஇழையாக தைத்து

இருக்கும் ) கூட வந்த அம்மன் வேடமணிந்தவரின் கையில் வைத்திருந்த

தீச்சட்டியில் இருந்து நெருப்பு பொறி பறந்து விழுந்து தீப்பிடித்து விட்டது.

உடலெல்லாம் பலத்த தீக்காயம். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்

பட்டார். கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு

விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும்.


மொத்தத்தில் ஓர் அழகான நாட்டுப்புற திருவிழாவாக இதை ரசிக்கலாம்.

.

27 comments:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மத நல்லிணக்கம் மிக நல்ல விடயம். படங்கள் அருமைங்க..அம்பிகா. நேரில் சென்று அம்மனை தரிசித்த திருப்தி. சக்தி தலமல்லவா.... இது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காளி என்ன ஒரு மேக்கப் அப்பா..!!

படங்களுக்கும் விவரங்களுக்கும் நன்றி அம்பிகா.
ஆபத்தான விசயங்களை களைந்து விழா நல்லபடி
செயல்பட விதிகளும் , இட்ட விதிகளை
மீறாமல் தற்காத்துக்கொள்ளவும் வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறீர்கள்.
உண்மை.

அம்பிகா said...

காளி மட்டுமில்லை, இன்னும் எமதர்மன், சிவன் என பல வேஷங்கள், பார்க்க மிக அருமையாக இருக்கும்; ஆச்சர்யப் படுத்தும்.

சுந்தரா said...

வேஷம் கட்டியவர்களை நேரில் பார்த்தது போலவே இருக்குது அம்பிகா.

சின்ன வயசில் விதவிதமான வேஷங்களுக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சதெல்லாம் ஞாபகம் வருகிறது :)

Chitra said...

கூட்டமும் நெரிசலும் மிக அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு விதிகள் இன்னமும் அதிகப் படுத்த வேண்டும்.


..... It is very essential.

அமைதிச்சாரல் said...

இந்த திருவிழாவைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. போலீஸ், திருடன் மாதிரியெல்லாம் கூட வேஷம்போட்டு வருவாங்களாமே. நிஜமாவா????

sakthi said...

அருமையான பகிர்வு அம்பிகா

எஸ்.கே said...

மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்! நன்றி! வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

\\அமைதிச்சாரல் said...
இந்த திருவிழாவைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.. போலீஸ், திருடன் மாதிரியெல்லாம் கூட வேஷம்போட்டு வருவாங்களாமே. நிஜமாவா????\\

நிஜம் தான் அமைதிசாரல். போலிஸ் வேஷம், உண்மையில் பாதுகாப்புக்கு வந்த நிஜபோலிஸோ என நினைக்க தூண்டும். இன்னும் பீமன், விநாயகர், என பல வேஷம் போடுவார்கள்.
பகிர்வுக்கு நன்றி அமைதிசாரல்.

வெறும்பய said...

அருமையான பகிர்வு..

ஜெயந்தி said...

நேத்து வசந்த் டிவியில லைவ் காட்டினாங்க.

மங்குனி அமைசர் said...

good :-))))

ராமலக்ஷ்மி said...

படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை அம்பிகா. சுவாரஸ்யமா விவரங்கள். நேர்ந்த விபத்து வருத்தம் தருகிறது. உண்மைதான் பாதுகாப்பு விதிமுறைகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும் இது போன்ற விழாக்களில்.

கடந்த வருடம் இத் திருவிழாவினைப் பற்றிய இளவஞ்சியின் புகைப்படப்பதிவு தமிழ்மணம் விருது 2009-ல் இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது: http://ilavanji.blogspot.com/2009/10/2009.html
படங்களுடன் இங்கே நீங்கள் காட்டியிருக்கும் காளியின் நடனமும் வீடியோவாகப் பகிரப் பட்டுள்ளது. நேரமிருந்தால் பாருங்கள்:)!

அம்பிகா said...

ராமலெக்ஷ்மி,
நீங்கள் குறிப்பிட்டிருந்த பதிவைப் பார்த்தேன். அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி ராமலெக்ஷ்மி

RajaS* Forever * said...

உங்கள் பதிவு மிக அருமை...நானும் சனி கிழமை இரவு சென்று இருதேன் ...வருடா வருடம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் உள்ளது ....

Sriakila said...

தசரா விழா பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படித்தான் கொண்டாடுவார்கள் என்று உங்கள் பதிவைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்.

பகிர்வுக்கு நன்றி!

சே.குமார் said...

படங்களுடனான பகிர்வு மிகவும் அருமை...
அருமையான பகிர்வு.

மாதவராஜ் said...

சுருக்கமாக இருக்கிறது பதிவு. ஊர் ஞாபகங்கள் வந்தன.

Sethu said...

இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் (ஆறுமுகநேரி) எங்கே இருக்குனு பார்த்தேன். அதில் அருகில் காயல் பட்டினம் என்று இருக்கு. குலசேகரப் பட்டினம் தான் காயல் பட்டினமா? திருவிழா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

தியாவின் பேனா said...

படங்கள் அருமை

அம்பிகா said...

Sethu said...
\\இப்ப தான் கூகுள் map இல் உங்க ஊர் (ஆறுமுகநேரி) எங்கே இருக்குனு பார்த்தேன். அதில் அருகில் காயல் பட்டினம் என்று இருக்கு. குலசேகரப் பட்டினம் தான் காயல் பட்டினமா? திருவிழா பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

இல்லைங்க. இரண்டும் வேற ஊர்கள். குலசேகரப்பட்டிணம், திருச்செந்தூர் ல இருந்து 13 கிமீ தொலைவில், திருசெந்தூர் கன்னியாகுமரி ரோட்டில் உள்ளது.
பகிர்வுக்கு நன்றி.

ponraj said...

காளி படம் பயம்!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமையான பகிர்வு அம்பிகா.. நன்றி..

ponraj said...

நேரம் கிடைத்தால் என் பதிவை பார்கலாமே..

Haiku charles said...

Nalla visayam.

ஹுஸைனம்மா said...

எங்கேப்பா ஆளைக் காணோம்? நலம்தானே? இனிய தீபாவளி வாழ்த்துகள்.

polurdhayanithi said...

parattugal
polurdhayanithi