.
.
.
.நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு
நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை
நடனநிகழ்ச்சி அது. கொஞ்சம் ஆண் சாயலோடு இருக்கும் பெண்களை,
`கணியான் மாதிரி இருக்கா’ என்று புறம் பேசுவது வழக்கமாயிருந்தது.
அப்போதெல்லாம் நிஜமாகவே அப்படி ஒரு பிரிவினர் இருப்பது தெரியாது.
கொஞ்சம் விவரம் தெரிந்த பின், அரவாணிகள் பற்றி தெரிய வந்தது.
அதுவும், சித்திரை மாதம் அவர்கள் நடத்தும் கூத்தாண்டவர் திருவிழா,
மிஸ்கூவாகம் பற்றிய பத்திரிகைசெய்திகள் வழியாய் புரிந்தது. அரவாணி
என்றழைக்க படும் இவர்கள், தங்களை மகாபாரத அரவாணின் மனைவி
யாக பாவித்து தாலி கட்டிக் கொள்வதும், மறுநாளே தாலியறுத்து ஒப்பாரி
வைப்பதும் செய்திகளாக வந்தன.
ஆனால் நிஜத்தில் இவர்கள் நிலையென்ன? பால்திரிபு காரணமாய் பெற்றோ
ராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்டு், பிச்சையெடுப்பவர்களாகவும்,
பாலியல் தொழிலாளியாகவும் வாழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 1,50,000 திலிருந்து 2,00,000 அரவாணிகள் இருப்ப
தாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் முதல் HIV பாஸிட்டிவ்
ரிசல்ட், தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்த பின்னர் தான், அரசாங்கம்
பாலியல் தொழிலாளிகள் பற்றியும், அரவாணிகளாக வாழ்பவர்கள் குறித்
தும் கவனம் கொள்ளத் தொடங்கியது. அவர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க,
பேச ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப் பட்டது.
திருநங்கையாக பிறந்து, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்த
நர்த்தகி நடராஜ், சக்திபாஸ்கர், இவர்களுக்கு தஞ்சை ராமையாப் பிள்ளை
அவர்களின் மாணாக்கராகும் வாய்ப்பு கிடைத்தது. அபார கலைத்திறமை
யால் முன்னேறிய இவர்களில் நர்த்தகி தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்
நடனத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஒரு பேட்டியில், இந்த
வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திராவிட்டால் நீங்கள் என்னாவாகியிருப்பீர்கள்
என்ற கேள்விக்கு, `மற்ற துர்பாக்யசாலிகளைப்போல நானும், மும்பை
யிலோ, அல்லது வேறு எங்காவதோ விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்
என்கிறார்.
தமிழ்நாடு அரவாணிகள் நல சங்கத்தின் தலைவாராகவும், SIDA எனும்
அமைப்புக்கு மேனேஜிங் ட்ரெஸ்டியாகவும் திகழும் பிரியாபாபு எனும்
மற்றொரு திருநங்கை, அரவாணிகளின் தற்போதைய நிலை தேவலாம்
என்கிறார். 15 வருட போராட்டங்களின் வெற்றியாக அவர் குறிப்பிடுவது,
அரவாணிகளை, `மற்றவர்கள்’ எனும் பிரிவின் கீழ் கொணர்ந்து, அவர்
களுக்கு ரேஷன்கார்டு, வோட்டர் ஐடி, ஓட்டுரிமை வழங்க சுப்ரீம்கோர்ட்
அணையிட்டது,
பால்மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமாக்கியது,
சுயவேலை வாய்ப்பு திட்டங்கள்,
பள்ளி, கல்லூரிகளில் பால்திரிபை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி
மறுக்கக் கூடாது போன்றவைகள்.
`சகோதரி பவுண்டேஷன்’ எனும் அமைப்பை நடத்தி வரும் கல்கி எனும்
மற்றொரு திருநங்கை ஜர்னலிசம் படித்தவர். பள்ளி,கல்லூரிகளில் விழிப்
புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இளம்வயதில், பள்ளி, கல்
லூரிகளில் அவமானப் படுத்தப்பட்டு, அதன் காரணமாக தன்னை திடமான
வராக, தைர்யசாலியாக வளர்த்துக் கொண்டவர். திருநங்கைகளுக்காக
முதல் திருமண தளம் ஒன்றை இணையத்தில் நிறுவியிருக்கிறார். சென்ற
வருடம் `வாழ்நாள் சாதனையாளர்’ விருது அரிமாசங்கத்தினரால்,
இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
விவரம் புரியாவயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தை புரிந்து கொள்ள
முடியாமல், பெற்ற தாய் உட்பட அனைவரின் புறக்கணிப்புக்கும் ஆளாகும்
இவர்களுக்கு தேவை அரவணைப்பும், பாதுகாப்புமே. ஆனால் அதை இந்த
சமூகம் தருவதில்லை. மாறாக எள்ளி நகையாடுகிறது.
`ஆணாகி, பெண்ணாகி நின்றானவன்’ என்ற அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை
ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால், உயர்திணையில் பிறந்தும்,இவர்களை
அஃறிணையாகவே சமூகம் பார்க்கிறது. `பேடி‘, `அலி’ என எத்தனை
கேவலமான சொற்கள்.... முதலில் இந்த திரைப்படங்களில், எங்களை
கேவலமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிப்பதை நிறுத்துங்கள்’ எனக்
குமுறுகிறார்கள். உண்மைதானே! அரவாணிகள் என்றாலே, பெண்புரோக்
கர்கள், பாலியல் தொழிலாளிகள் என்பதாகத்தானே சித்தரிக்கிறார்கள்.
டி.ராஜேந்தரின், ஒருதலைராகம் தொட்டு ( கூவாத கோழி கூவுற வேள)
அமீரின் பருத்திவீரன் ( ஊரோரம் புளிய மரம்) வரை இவர்கள் நகைச்
சுவை பாத்திரங்களாகத்தானே சித்தரிக்க பட்டிருக்கிறார்கள்..
அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்
கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்ற
வர்களின் கையில் தான் இருக்கிறது.
.
29 comments:
நல்ல பதிவு தோழி. அவர்களும் மனிதர்கள் தானே! ஆனால் இரயில் பயணங்களின் போது அவர்களில் சிலர் செய்யும் தொல்லைகள் தாங்கமுடியவில்லை.
விழிப்புணர்வூட்டும் பதிவு.
அவர்களும் மனிதர்களே. நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.
விவரம் புரியாவயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தை புரிந்து கொள்ள
முடியாமல், பெற்ற தாய் உட்பட அனைவரின் புறக்கணிப்புக்கும் ஆளாகும்
இவர்களுக்கு தேவை அரவணைப்பும், பாதுகாப்புமே
உண்மை தான் அம்பிகா
இவர்களுக்கு நாம் ஆதரவுக்கரம் நீட்டாவிட்டாலும் பரவாயில்லை
அவமானப்படுத்தாமல் இருந்தால் போதும்...
அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு. அதுவும் அந்த இறுதி பத்தியில், கட்டுரையின் essence எடுத்து நன்கு கொடுத்து இருக்கிறீங்க. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு அத்தை. பலருக்கும் சரியான புரிதல் இல்லாத தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இது ஒரு சிறப்பான முயற்சி.
விழிப்புணர்வூட்டும் பதிவு.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com/
திரைப்படங்களைப்பார்த்து செய்திகளைப் பார்த்து அவர்களைப் பற்றி முதலில் அறிந்து போக, அவர்களாலேயே எழுதப்பட்ட புத்தகங்கள் ,பதிவுகள், பேட்டிகள் என உண்மையில் விழிப்புணர்வு இப்போது தான் வரத்தொடங்கி இருக்கிறது.. மதிக்கப்படுபவர்களாக முழுமையாக அங்கீகாரம் கிடைக்கபெற்றவர்களாக இன்னும் காலம் எடுக்கிறது..
அற்புதமான பதிவு.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்...
மனிதாபிமான வெளிப்பாடு உங்கள் பதிவு ச்கோதரி. பல தகவல்களையும் பகிர்ந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி சகோதரி
ஒரு ஆரோக்கியமான, அக்கரையான பதிவு.பகிர்வுக்கு நன்றி.
பல ஆண்டுகளாக பதிவுலகில் செயல்பட்டு வரும் தோழர் லிவிங் ஸ்மைல் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.
பதிவுலகில் திருநங்கைகள் குறித்து விழிப்புணர்வு உருவாக்கியவர் இவர். இத்துடன் கூடவே பதிவுலகில் நடைபெற்ற பல்வேறு ஜனநாயகப் பூர்வ போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர்.
http://www.livingsmile.blogspot.com/
//அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்றவர்களின் கையில் தான் இருக்கிறது.//
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தோழி. நம் பார்வையின் கோணத்தை இனியாவது நாம் மாற்றவேண்டும்...அவர்களும் தங்களை தனிமை படுத்தி கொள்ளாமல் துணிந்து நல்ல முறையில் வாழ முயல வேண்டும்...
முன்பை விட விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி தோழி.
குடும்பத்திலுள்ளவர்களே இவர்களை ஒதுக்குவதும், பெற்றவளே புறக்கணிப்பதும்தான் சுயபரிதாபமும் வேதனையும் தந்து சமூகத்திலிருந்து இவங்களை ஒதுங்கச்செய்கிறது.. பாவம்தான்.
அருமையான பதிவு அக்கா.
நர்த்தகி நடராஜ் பற்றிய தகவல்கள் அறிந்திராதவை.
நன்றி.
நல்ல பகிர்வு அம்பிகா. இப்போதுதான் ஓரளவு சமூகம் இவர்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
nalla pathivu sakothari...
சிறப்பான பதிவு! நன்றிகள்!
நர்த்தகி நடராஜின் நாட்டியம் இங்கு 2 வருடத்திற்கு முன் பார்க்க முடிந்தது. அவர்கள் (அவர் friend -ம் சேர்த்தி) இந்த நிலைமை மேர்ப்படித்திகொள்ள அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நன்கு எடுத்துச் சொன்னார்கள். உங்கள் பதிவில் வரும் ஒவ்வொன்றுமே ஒரு நல்ல நோக்கோடு வருகிறது. நன்றிங்க.
Finally, I wrote the post - thodarpadhivu:
http://konjamvettipechu.blogspot.com/2010/10/blog-post_13.html
Thank you for inviting me. :-)
அவசியமான பதிவு அம்பிகா.
தற்போது,ஓரளவு புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வு, மக்களிடையே விரைவில் வரவேண்டும்.
நல்ல பதிவு.
சு.சமுத்திரத்தின் வாடாமல்லி என்ற நாவல் படித்த பிறகுதான் இவர்களின் நிலைமை நன்றாக புரிந்தது. இயற்கையாலும் வஞ்சிக்கப்பட்டு சக மனிதர்களாலும் வஞ்சிக்கப்படுபவர்கள்.
விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு...
தற்போது பொதுமக்களிடம் ஓரளவு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், (சரியான முறையில் செல்லாத) அரவாணிகளிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் இவர்களின் கடமையே.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
/*அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்
கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்ற
வர்களின் கையில் தான் இருக்கிறது.
*/
உண்மை. சினிமா போன்று மக்களை எளிதில் அடையும் ஊடகங்களில் பாசிடிவ்வாகச் சொல்வது மிக அவசியம்
அன்பு அம்பிகா அவர்களுக்கு
மிகவும் தெரிந்த, திரும்பத் திரும்ப வாசித்த-விவாதிக்கிற விஷயங்களை இத்தனை உணர்வுபூர்வமாகவும், அறிவார்ந்த விதத்திலும் ஒருசேர செறிவாகப் பதிவிட்டிருப்பது வியப்புக்குரியது. வாழ்த்துக்கள்.
Bank Workers Unity என்ற இதழில் மாதாமாதம் ஒரு சிறப்பு விருந்தினரை எமது ஆசிரியர் குழு கூட்டத்திற்கே அழைத்துவந்து கலந்துரையாடல் நிகழ்த்தி, அவர்களது பேச்சை அடுத்த இதழில் வெளியிடும் பகுதி இருந்த சமயம், ஏப்ரல் 2006 இதழுக்காக பிரியா பாபு வந்திருந்தார். அவரோடு தொலைபேசியில் பேசியிருந்ததைத் தொடர்ந்து நேரில் காண அரவாணிகள் மாநில மைய அலுவலகம் சென்ற போது ஏற்பட்ட மரியாதைக்குரிய தோழமை அனுபவம் மறக்க இயலாதது. அடுத்த நாள் எங்கள சங்க அலுவலகத்தில், வங்கி ஊழியர்கள் பதினைந்து பேர் எதிரில் தமது தோழியுடன் வந்தமர்ந்த பிரியா பாபு பகிர்ந்து கொண்ட செய்திகள் பின்னர் ஏப்ரல் 2006 இதழில் வெளியான போது பரந்த விவாதத்தைக் கிளர்த்தியது.
சில அருமையான புத்தகங்களும் இந்த இடைக் காலத்தில் வந்திருக்கின்றன. இரா நடராசனின் மதியெனும் மனிதனின் மரணம் குறித்து...என்ற சிறுகதை அரவாணிகள் மீதான சமூகப் பார்வை குறித்த அதிர்ச்சிப் பதிவு எனலாம். சு சமுத்திரம் வாடாமல்லி படைத்திருந்தார். அரவாணிகள் சிலர் அற்புதமான எழுத்துப் பதிவுகளை இப்போது தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரயில் பயணங்களில் அரவாணிகள் சீண்டல் செய்வது, பொதுவாக வசூலுக்கு இறங்கும் யாரும் கொடுக்க மறுப்பவர்களை, கொடுக்க யோசிப்பவர்களை அணுகும் விதங்களின் பாலியல் திரிபு வடிவம் தான் இந்த சங்கடப்படுத்தி பணத்தைக் கேட்கும் நடைமுறை. அவர்களை சமூகம் கவுரவத்தோடு வாழ அனுமதிக்குமானால் அவர்கள் என் கை தட்டி கை தட்டி காசுகளுக்கு அலைய வேண்டும்? கேவலமான பாலியல் தொழில்களுக்குள் சிக்கிக் கிடக்க வேண்டும்?
சிறந்த எழுத்துப் பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்களுடன்
எஸ் வி வேணுகோபாலன்
நல்ல பதிவு. இது ஒரு biological phenomenon. அதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைக் கேலிக்கு உட்படுத்துவது மிகவும் கீழ்த்தரமான செயல்.
useful writing..
Post a Comment