Tuesday, January 25, 2011

தலைவர் சிலை திறப்புவிழாவும், தண்ணீர் பஞ்சமும்...

.

ஐந்து நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. எங்கேயாவது உடைப்பு ஏற்பட்டிருக்கும்; சரி செய்ததும் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இரண்டு நாட்கள் காத்திருந்த மக்கள் மூன்றாவது நாளும் வராததால், வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துபோர்டு நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னர் தான் விஷயமே தெரிய வந்தது.


அரசியல்தலைவரின் சிலை திறப்புவிழாவு்க்கு வருகை தரும் மத்தியமந்திரி ஜி.கே. வாசனை வரவேற்க கட்அவுட்கள், பேனர்கள் வைப்பதற்காக குழிதோண்டிய தொண்டர்களின் கைங்கர்யத்தால் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாம். சரிசெய்ய வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ, அவர்கள் பேனரை அகற்றினால் தான் நாங்கள் சரி பண்ண முடியும் என மிகப் பொறுப்பாக பதிலளித்துள்ளனர். ஏனெனில் பஞ்சாயத்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர்.


நேற்றிரவே விழா முடிந்து விட்டது. தலைவர் வருகைக்காக நான்கு நாட்கள் முன்னரே சுறுசுறுப்பாக பேனர் வைக்க குழிதோண்டிய புண்ணியவான்கள், இன்னும் அதை அகற்றாததால், வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை.

மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

.

23 comments:

தமிழ் உதயம் said...

பொதுமக்கள் அனைவரும் வாசன் வந்த விழாவை புறக்கணித்திருக்க வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ said...

//மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்//

கஷ்ட்டம் யார்கிட்டே சொல்லி அழ......

சந்தனமுல்லை said...

என்னவொரு முரண்!!

சே.குமார் said...

//மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.//

இது எப்பவும் நடப்பதுதானே.... அழகாக போட்ட ரோட்டில் குழி தோண்டி வளைவுகள் வைப்பார்கள். வளைவுகளை அகற்றினாலும் குழியை மூட மாட்டார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடக்கொடுமையே!

செ.சரவணக்குமார் said...

//மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்//

அடடா.. இவனல்லவோ தலைவன்.

மாணவன் said...

என்ன செய்வது??? ஒன்றும் சொல்வதற்கில்லை...

வினோ said...

இடம் எப்போ காலி ஆகும்ன்னு பார்க்க வேண்டியதா இருக்கு.. :(

Kousalya said...

மக்களின் இயலாமை தெரிந்தவர்கள் தலைவர்கள் ?!! :((

ராமலக்ஷ்மி said...

//வெற்றிகரமான ஐந்தாவது நாளாக//

//ஐம்பதடி பேனரில்//

எப்போது மாறுமோ:((??

Sriakila said...

நம்நாடு??

அந்த பேனரைக் கிழித்து, தரையில் விரித்து, அதில் குடங்களையும் அடுக்கி வைத்து மக்கள் அனைவரும் அதில் அப்படியே நடுரோடு என்று பார்க்காமல் உட்கார்ந்து விட வேண்டும்.

நாடு போகும் நிலையில் அசிங்கம் பார்த்தால் வேலை நடக்காது.

சங்கர் குருசாமி said...

Very Bad attitude from the administration... (As usual..) :-(

As common public we have to cross our fingers and wait...

Very Sad...

http://anubhudhi.blogspot.com/

சுந்தரா said...

:( திருந்தவேமாட்டாங்க இவங்க...

Sethu said...

முன்னெல்லாம் எங்க ஊருக்கு அமைச்சர் யாராவது வராங்கன்னா, முதல்ல ரோடு, எலெக்ட்ரிசிட்டி, தண்ணியெல்லாம் சரி பார்த்து விடுவாங்க. உங்க ஊரில வித்யாசமா இருக்கே. இதிலிருந்தே அமைச்சரின் பவர் தெரியுதே.

உங்க பழைய template நல்லா இருந்துதுங்க.

அமைதிச்சாரல் said...

//வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை//

அடப்பாவமே :-(

Chitra said...

மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

......சமூகத்தில் உள்ள அவலத்தையும் முரணையும் சரியா சொல்லி இருக்கீங்க.

ஆயிஷா said...

//வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை//

கொடுமை

jayakumar said...

nice post...pls come to my blog also...kmr-wellwishers@blogspot.com mail id?...send to kmrjayakumar@gmail.com please

jayakumar said...

thank you verymuch for your comments on my blog...please follow....thank you

elavenil said...

கொஞ்சம் பொறுங்க சகோ.. இன்னும் மூன்று மாதத்தில் நாம் யாரென்று (மக்களாகிய) கட்டுவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்துவோம்

ஹுஸைனம்மா said...

இப்ப தண்ணி வந்துடுச்சா?

மதுரை சரவணன் said...

விழா அருமை தான் போங்க... வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

நலம்தானே? ஆளையேக் காணோம்? பிஸியா?