Sunday, January 15, 2012

இனிய பொங்கல்வாழ்த்துகள்

அனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள்.


.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.


.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.-

.

12 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

கோலம் சூப்பரா இருக்குங்க. :))

Rathnavel said...

எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

கோலம் மிக அழகு அம்பிகா!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

மீண்டும் எழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். தொடருகிறோம்:)!

திண்டுக்கல் தனபாலன் said...

கோலம் மிகவும் அழகு! பண்டிகை கால நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

விமலன் said...

அழகான கோலம்.வாழ்த்துக்கள்.

Lakshmi said...

கோலம் மிக அழகு பொங்கல் நல் வாழ்த்துகள்.

venu's pathivukal said...

அன்பு அம்பிகா அவர்களுக்கு

தெரிந்தவர்கள் வெளியூர் போய்விட்டால் அந்தப் பக்கம் போகிறபோதெல்லாம் அங்கிட்டு ஒரு எட்டு நடைபோட்டு திரும்பத் திரும்ப பூட்டிய வீட்டைப் பார்த்து ஏக்கம் சூழ்கிற மாதிரி ஆகிவிட்டது, சுஜாதா மறைவை அடுத்து நீங்கள் எழுதியிருந்த அன்னக்கிளி உன்னைத் தேடுதே பதிவை மட்டும் நிரந்தரமாகப் பார்க்கும்படி ஆனபோது..
இருந்தாலும் தெரு பக்கம் எட்டிப் பாத்துப் போவதை நிறுத்தவே இல்லை நானும் எப்பொழுதும்..

அவ்வளவு ஏன், கணினியின் இணையதள முகவரியில், am எழுத்தை அடிக்குமுன் அது
http://ambikajothi.blogspot.com/
முகவரியை பளிச்சென்று எடுத்துக் கொண்டு வந்து சேர்த்துவிடும்..அங்கே போனாலோ சுஜாதா..

சாத்தூர் சென்று உங்கள் சகோதரர் தோழர் மாதவராஜ் அவர்களை நேர்காணல் செய்யச் சென்றபோது கேட்டேன், எங்கே அம்பிகா எழுதுவதை அடியோடு நிறுத்திவிட்டார் என்று. உங்களது அன்புத் தந்தை அத்தனை உற்சாகமாகச் சொன்னார் உங்களைப் பற்றி. உங்களது எழுத்துக்கள் பற்றி நான் சொல்லச் சொல்ல அவ்வளவு ஆனந்தமாகக் கேட்டுக் கொள்ளவும் செய்தார்.

அன்னக்கிளி சுஜாதாவைத் தேடிக் கொண்டிருந்தால்,
அம்பிகையை வாசகர்கள் தேடிக் கொண்டிருந்தோம்..
வண்ணமயமாகத் திரும்பி இருக்கிறீர்கள் ஒரு ரங்கோலியோடு, சொந்த இல்லத்திற்கு..
தனது வருகையைத் தனது கோலத்தாலேயே அறிவித்துக் கொண்டிருப்பது கோலாகலமான மறு பிரவேசமாக அமைந்துவிட்டது..

நெகிழ்ச்சியான பகிர்வுகள், உறவுகளின் மீதான அன்பின் கொடி படர்ந்த வரைபடங்கள், வாழ்க்கையை சாதுரியம், வஞ்சகம், வர்த்தகம் என்று ஆக்கிக் கொண்டிருக்கும் சம கால பண்பாட்டுச் சூறாவளிக்கிடையே நேயம், கரிசனம், உள்ளார்ந்த மனிதம் என்று பார்க்கக் கற்றுத் தரும் பாடங்கள்...என்று மீண்டும் ஓடத் தொடங்கட்டும் உங்களது எழுத்து நதி..

பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

எஸ் வி வேணுகோபாலன்

வியபதி said...

எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

அமைதிச்சாரல் said...

மறுபடியும் எழுத்துப் பணியைத் தொடருவதில் மகிழ்ச்சி :-)

கோலம் ரொம்ப அழகாருக்கு. பொங்கல் நல்வாழ்த்துகள்..

ஹுஸைனம்மா said...

போனதுதான் போனீங்க, ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல? :-))) நல்லவேளை வந்துட்டீங்க. சின்னவர் படிப்பு நல்லமதிரியா முடிஞ்சுதா?

அழகான கோலம், என்னா பெரீசு!! சுற்றுவட்டத்துல உள்ள ஆர்ச்செல்லாம் அளவெடுத்து போட்டது போல ஒரே அளவா இருக்கு!!

வாங்க, தொடர்ந்து வாங்க.

VijayaRaj J.P said...

அழகான கோலம்.

மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.