
சாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.
திரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே!
டைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.
இளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.
அன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.
ஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...!
சுஜாதா...! எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.
.
20 comments:
I know her through few of classic Rajini movies. It is sad to know that she is no more. May her soul rest in peace.
அலட்டலில்லாத அருமையான பெண்..
வணக்கம் சகோதரம், சுஜாதாவின் மறைவு... மனதினை ஒரு கணம் நிலை குலையச் செய்கிறது,
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
சுஜாதாவின் அந்த மானைப் பாருங்கள் அழகு பாடல் எனக்கு எப்போதுமே பிடிக்கும்...
அமைதியான குணமும், அதிகமாக சர்ச்சைகளில் சிக்காத பக்குவமும் தான் இன்று வரையான அவரது நற் பெயருக்கு காரணம்.
சுஜாதா ஒரு சிறந்த நடிகை.
மனப்பூர்வமான ஆழ்ந்த அனுதாபங்கள்.
எனது அஞ்சலிகள்.
நல்ல கலைஞர் சுஜாதா. அவருக்கு நம் ஆழ்ந்த அஞ்சலிகள்.
அவருக்கு நம் அஞ்சலி....
நல்ல குரல்வளமும் அழகும் உள்ள நடிகை.என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அம்மா நடிகையான பிறகு அவரது நடிப்பை வெகுவாக ரசித்திருக்கிறேன், அந்தச்சிரிப்பு கபடமற்ற தன்மையைக்காட்டும்..
எனது அஞ்சலிகள்..
பழைய நடிகைகளில் எனக்குப் பிடித்தவர்.அவர் குரலில் ஒரு வசீகரம்.ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம் !
’மயங்குகிறாள் ஒரு மாது’ சுஜாதா நடித்ததில் எனக்கு மிகப்பிடித்த திரைப்படம்.
எனது அஞ்சலிகள்.
Nalla kalaignar. Anjaligal.
மறைந்த சுஜாதாவுக்கு அஞ்சலிகள்!
யாருக்குமே ‘பிடிக்காது’ என்று சொல்லமுடியாத ஒரு நடிகை. கதாநாயகியை மையப்படுத்தும் கதைகள் நிறைய இவரது நடிப்பால்தான் சினிமாக்களில் வந்தன எனலாம்.
அருமை அழகான உணர்சி பூர்வமான நடிப்பு சுஜாதாவின் நடிப்பு,என் ஆழ்ந்த அனுதாபஙக்ள்
நல்ல ஒரு நடிகையை திரை உலகம் இழந்து விட்டது....
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
சுஜாதாவுக்கு அஞ்சலிகள்!
மிக அருமை.. சுஜாதா நினைவில் ஆடினார்.;)
Post a Comment