நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதப் போகிறேன் என்றதும் என் மகன்கள் இருவருக்கும் நான் காமடிபீஸ் ஆகிவிட்டேன். என் புத்திரசிகாமணிகள் செய்த அலம்பல்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இதற்கெல்லாம் அசந்து விடுவோமா என்ன?. சிறுவயதில் அண்ணன்கள், தம்பியோடு சரிக்கு சரியாக சண்டை போட்டது இப்போது பையன்களோடு தொடர்கிறது.
கண்டிப்பாக எழுதியே தீர்வதென்று முடிவானதும், தலைப்பு தேடும் படலம் ஆரம்பமானது. ‘அம்பிகாவின் அவலங்கள்’, `ஆந்தையார் அலறுகிறார்’, இவை என் பெரிய மகன் முன்மொழிந்த தலைப்புகள். `ஆண்டிபண்டாரம் பாடுகிறார்’ னு வைங்கம்மா, சூப்பரா இருக்கும் இது சின்னவர். நம்ம அம்மா ரொம்ப நல்லவங்க, எவ்வளவு கேலி பண்ணாலும் தாங்குவாங்க என்று பாராட்டு வேறு. நானே யோசித்து வைத்துக் கொள்கிறேன். உங்க வேலைய பாருங்க என்று இருவரையும் விரட்டிவிட்டேன்.
நானே யோசித்து, `சொல்லத்தான் நினைக்கிறேன்’, னு வைக்கப் போகிறேன் என்றேன். நினைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எதையும் சொல்லிவிடாதீர்கள், என்று மறுபடியும் ஆரம்பித்தனர். அதென்னவோ தெரியவில்லை, எதற்கெடுத்தலும் அடித்துக் கொள்ளும் இவர்கள் இருவரும் என்னை கேலி செய்யும்போது மட்டும் உலக மகா ஒற்றுமையாகி விடுவார்கள். ஒரு வழியாக, `சரி ஏதோ எழுதிக்கோங்க, ஆனா மாமா பேர கெடுத்திராதீங்க’என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினர்.
இங்கே பலரது எழுத்துக்களை படிக்கும் போது, நாம் புதுசா என்ன எழுதிவிடப் போகிறோம் என்ற பயம் வருகிறது. ஆனால் இந்த அழகான வலையுலகில் நானும் ஓர் அங்கமாகும் ஆசையுடன் தொடர்கிறேன்.........
27 comments:
அம்பிகா!
வருக.... வருக....
வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும்.
உன்னால் அருமையாக எழுதிட முடியும் என்பது எனக்குத் தெரியும்.
வருக..வருக! வலையுலகை வசப்படுத்துக! :-)
சொல்லவிட்டு போயிற்று, ப்லாக் தலைப்பு நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்!
அண்ணா! உன் வாழ்த்துக்களுடனும்
ஆசியுடனும் தொடர்கிறேன்...
வரவேற்புக்கும், வாழ்த்துக்களுக்கும்
நன்றி, சந்தனமுல்லை.
வாழ்த்துக்கள் அம்பிகா,
முன்னுரையே முத்தாய்ப்பாக உள்ளது.
நிறைய எதிர்பார்க்கிறோம்
அண்ணா வாழ்த்துக்களுக்கு
நன்றி
அன்பு அம்பிகா அவர்களுக்கு
எனது வரவேற்பு வாழ்த்துக்கள்.
உங்கள் மகன்களின் கிண்டல் மொழிகள் உங்கள் மொழியில் சுவாரசியமாகவே இருக்கின்றன. அதெல்லாம் சரி, அவர்களது வயதை அறிய முடிந்தால் இன்னும் கூடுதல் இனிமை வாய்க்கும்.
சொல்லத்தான் நினைக்கிறேன் என்பது,
பெண்களின் உள்ளத்தின் குரல் என்கிற விதத்தில்
ஓர் அதிர்ச்சி வாக்கியமாகவே படுகிறது.
கால காலமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்ட ஒரு சொற்றொடர்தான் என்றாலும், ஒரு பெண் சொல்லும் போது அதன் பொருள் கனமாகிறது. சொல்பவரால்தான் ஒரு சொல் அதன் பொருளைக் கொள்கிறது. சொல்லும் விதமும், சொல்லும் நேரமும் கூட முக்கியமாகிறது.
டிசம்பர் 11 என்ற தேதியை யோசித்துத் தேர்வு செய்தீர்களா தெரியாது. பாரதியின் பேரால் உற்சாக வாழ்த்துக்கள்.
நிறைய எதிர்பார்ப்புகளோடு
உங்கள் அனுபவ வாசலில்
காத்திருக்கிறோம்.
எஸ் வி வேணுகோபாலன்
வாங்க வாங்க அம்பிகா அக்கா!
//‘அம்பிகாவின் அவலங்கள்’, `ஆந்தையார் அலறுகிறார்’, இவை என் பெரிய மகன் முன்மொழிந்த தலைப்புகள். //
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்!
முன்னுரையே அதிரடியா இருக்கு. ஆவலுடன் எதிர்பார்ர்க்கிறேன் உங்கள் எழுத்துக்களை!
நன்றி. வேணுகோபாலன் ஸார்.
தேதி அமைந்தது தற்செயல் தான்.
ஆனால் தெரிந்தபின், நல்ல நாளைத் தான் தேர்வு செய்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டேன்.
நீங்களும் அதையே குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
மீண்டும் நன்றிகள்.
வேணுகோபாலன் ஸார்,
என் பெரிய மகன், கவீஷ், 23 வயது. MCA படித்திருக்கிறான். கேலி செய்தாலும் அவன் தான் ப்ளாக் க்ரியேட் பண்ணிக் கொடுத்தான்.
இளையவன் மனோதீப் 18 வயது.
நன்றி தீபா.
ஆமாம். தீபா
என் பொழப்பு ஒரே சிரிப்பாத்தான் போச்சு.....
அம்பிகா
பெருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
த்யாகு, சாரதா
அண்ணா, அண்ணி,
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
வாழ்த்துக்கள்!!!!
அம்பிகா அண்ணி.
PONRAJ- TUTICORIN.
உங்களுடைய எழுத்து மழையிலும் நனைய வேண்டாமா? வாங்க மேடம், அன்பான வாழ்த்துக்கள்,
நன்றி. பொன்ராஜ்.
நான் ப்லாக் ஆரம்பிச்சது, உனக்கும்
தெரிஞ்சிடுச்சா?.
அமித்தம்மா!
உங்கள் அன்புக்கும்,
வாழ்த்துக்கும், நன்றி.
வாழ்த்துக்கள்
நன்றி. லதானந்த்.
வாங்க வாங்க . நல்லா கலக்குங்க
நன்றி. அண்ணாமலையான்.
வாங்க,வாங்க அம்பிகா!
என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்ததுமே தளம் வந்து பார்த்தேன்.அப்போ எதுவும் பதியாமல் இருந்தது.சரி,மாது தளத்தில் பின்னூட்டம் இடவென தளம் திருந்திருபீர்கள் போல என்று நினைத்து கொண்டேன்.இன்றைய உங்கள் பின்னூட்டம் பார்த்தே "அட,அம்பிகாவும் களத்தில் குதிச்சாச்சா?"என!
ரொம்ப சந்தோசமாய் இருக்கு!முன்னதாக மாதுவின் தளத்திலேயே உங்கள் பின்னூட்டம் பார்த்து நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன்.அதை அங்கும் சிலாகித்து இருந்தேன்.
அது சரி,எழுதுகிற கைகள் எல்லாம் இப்படி ஒரே குடும்பத்தில் இருந்தா புறப்பட்டு வரவேணும்?கூடுதலாக அங்கத உணர்வும் உங்களிடம் வெளிப்படுகிறது.அருமையான விசிட்டிங்க கார்ட் இது!
கவீஷ்,மனோவிற்கு உதை என்று சொல்லி வையுங்கள்! :-)
மாது,காமுவிற்கு என் அன்பை தெரியபடுத்துங்கள்!
உங்களால் முடியும்,அம்பிகா.வாழ்த்துக்கள்!
வாங்க, பா.ரா.
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும்,
நன்றி
வாங்க வாங்க. தயக்கங்களை உதறி தள்ளிவிட்டு எழுதுங்க. இங்கு எழுதும் பலரும் இணையத்தில்
அ போட பழகியவங்கத்தான் என்னையும் சேர்த்து. படிக்க நிறைய பேர் இருக்கிறோம்.
வாழ்த்துக்கள்
உஷா
வாங்க உஷா,
நீங்கள் எனக்கு பின்னூட்டமிட்டிருப்பது
மகிழ்ச்சியளிக்கிறது.
உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.
அன்பின் அம்பிகா
சொல்லத்தான் நினைக்கீறேன் - தலைப்பு அருமை. தோழர் மாதவராஜ் முதல் மறுமொழி இட்டு வாழ்த்தி வரவேற்றிருக்கிரார்.
சுவீஷ் மனோதீப் - - அம்மாவ நல்லாக் கவனிச்சீங்கப்பா
நல்வாழ்த்துகள் அம்பிகா
Post a Comment