Monday, February 15, 2010

தோழீ...

கடன் வாங்கிப் போன தோழி,

வரவே இல்லை...

கொடுத்ததே மறந்து போயிற்று.

பலமாதங்கள் கழித்து

பணம் மட்டுமே வந்தது.

சந்தோஷமாய் இருந்தது,

அவள் செளக்யமாய் இருக்கிறாள்

என்பது புரிந்ததினால்.


* * * * * *


தோழியிடம் வாங்கிய கடன்,

கொடுக்கவும் இயலாமல் - முகத்தில்

விழிக்கவும் முடியாமல்;

அன்பு பரிசாய் குழந்தைக்கு

அவள் அளித்த மோதிரம்,

பணமானது - மனம்

நிம்மதியானது.

20 comments:

அகநாழிகை said...

எளிமையாக நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

VijayaRaj J.P said...

நட்பை விளக்கும் கவிதை..

நல்ல உள்ளங்களின் சிந்தனை..

அழகு.,அருமை.

சந்தனமுல்லை said...

ரசித்தேன்! :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை , ரொம்ப நல்லாருக்கு .

கண்ணகி said...

நல்லா இருக்குக்குங்க,,

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

Anonymous said...

அருமை

காமராஜ் said...

நல்லா இருக்கு.

ட்விஸ்ட்.

கவிதை.

மாதவராஜ் said...

:-))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் கவிதை படித்த உடன்.. என் தோழியும் கடனை திருப்பித்தரவேண்டுமென்று (திருப்பிதரும் அளவுக்கு நிலை உயர்ந்து) வேண்டிக்கொள்கிறேன் .......

க.பாலாசி said...

அன்பை முறிக்காத கடன்....

நல்ல கவிதை....ரசித்தேன்....

ponraj said...

எல்லாம் நன்மையே!!!

நட்புக்கு மரியாதை!!!!

அருமையான பதிவு!!!

வாழ்த்துக்கள்!!!!

ஹேமா said...

இயல்பு வரிகளில் அழகு கவிதை

ஹுஸைனம்மா said...

//அவள் அளித்த மோதிரம்,
பணமானது//

முதல் தோழியும் இதை மாதிரி எதாவது செஞ்சுட்டு தர்மசங்கடத்துல உங்களைப் பாக்க வரலையோ என்னவோ?

//பணம் மட்டுமே வந்தது//

வசதி வந்தாலும், பழச மறக்காம திருப்பித் தந்தாங்களே!!

எளிமையான கவிதை. நல்லாருக்கு.

Thenammai Lakshmanan said...

இருவேறு மன நிலைகளைப் பிரதி பலிக்கும் கவிதை அருமை அம்பிகா

சுந்தரா said...

//சந்தோஷமாய் இருந்தது,

அவள் செளக்யமாய் இருக்கிறாள்

என்பது புரிந்ததினால்.//

கடன் வாங்கினா உங்களமாதிரி நல்லமனசுக்காரங்ககிட்டதான் வாங்கணும் அம்பிகா :)

கவிதை நல்லாருக்கு.

Deepa said...

இர‌ண்டில் எது அதிக‌ம் பிடித்திருக்கிற‌து என்று சொல்ல‌வே முடிய‌வில்லை!
:)

Unknown said...

நீங்க ரொம்ப நல்லவங்களோ.., ஒரு 500 ரூபா கிடைக்குமா

அம்பிகா said...

நன்றி அகநாழிகை,

விஜியண்ணா, நன்றி.

முல்லை, நன்றி.

நன்றி ஸ்டார்ஜன்.

நன்றி கண்ணகி.

நன்றி சின்னஅம்மிணி

நன்றி அண்ணாமலையான்.

நன்றி காமராஜ் அண்ணா.

மாதண்ணா, நன்றி.

முத்துலெட்சுமி நன்றி

நன்றி பாலாசி.

நன்றி ஹேமா.

நன்றி பொன்ராஜ்

நன்றி ஹூசைனம்மா,

நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

நன்றி சுந்தரா.

நன்றி தீபா.

நன்றி பேநாமூடி.
கடன் தந்தா போச்சு.

Sakthi said...

Nice poem தோழீ.. naanum eluthi irukken sorry kirukki irukken.. plz check out mine..! http://sakthispoem.blogspot.com/