Sunday, February 21, 2010

கண்ணீரை வென்ற பெண்ணாக...

கண்ணீரை வென்ற பெண்ணாக வேண்டும்,
என்று தான் விழைகின்றேன் நானும்,

ஆனால்;


செய்திகள் கூறும் குண்டு வெடிப்புகள்,
பூகம்ப புதைவுகள், சாலை விபத்துக்கள்;


மனதுக்கு நெருக்கமானவர்கள்
பகிரும் சோக நிகழ்வுகள்;


படித்த கதையில் பிடித்த
பாத்திரத்தில் லயித்து போதல்;

”வீட்டுக்கு வரனும் போல் இருக்கும்மா”
விடுதியில் இருக்கும் மகனின்
அலைபேசி குரல்;

ஏதாவது ஒன்று;

தினம் தினம்
தோற்று போகிறேன்.

20 comments:

ராமலக்ஷ்மி said...

//ஏதாவது ஒன்று//

தொடர்ந்தபடியேதான்:(!

Anonymous said...

அருமையா இருக்கு.

மாதவராஜ் said...

தோற்றாப் போகிறோம்!

ponraj said...

அன்பு.பாசம்,பரிதாபம்,
இரக்கம்/கருணை...
இவைகள் இருந்தால்...
வாழ்க்கை இப்படிதான் இருக்கும்!!!!!!
நல்லது தானே?????? மகிழ்ச்சி அடையுங்கள்.....

இது தோல்வி அல்ல...!!!

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

அருமையா இருக்கு.///

சற்று அழுகையுமாக இருந்தாலும், வெற்றியை நோக்கிச்செல்லும் வாழ்க்கை பயணத்தில், அருமையாகவே இருக்கும்!

அகநாழிகை said...

கவலைப்படாதீங்க சீக்கிரமே ஜெயிப்பீங்க.

அழுதா கண்ணுக்கு ரொம்ப நல்லதுங்க.

VijayaRaj J.P said...

வீட்டைப்பிரிந்து விடுதியில் இருக்கும்
மகன் மீது பாசம் இருக்கலாம்...

பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்படுபவர்கள் மீது
பரிவு...இரக்கம் ஏற்படலாம்...

இவை எல்லாம் தோல்விகள் ஆகாது.

அம்பிகாவுக்கு இளகிய மனசு.

Deepa said...

அருமை அக்கா!

//தோற்றா போகிறோம்!//
இதுவும்...

கண்ணகி said...

”விட்டுக்கு வரனும் போல் இருக்கும்மா”
விடுதியில் இருக்கும் மகனின்
அலைபேசி குரல்;

இது பாச அழுகை...இது தோல்வி அல்ல....

சந்தனமுல்லை said...

:-)

க.பாலாசி said...

உண்மைதாங்க.. எப்டியாவது கண்ணீர் வந்திடுது... ஏதோவொன்றால்...

ஹேமா said...

அம்பிகா மிக யதார்த்தமான மன உளைச்சலை வரிகளாக்கி அசத்திவிட்டீர்கள்.
அருமை தோழி.

முகுந்த்; Amma said...

நெகிழ்ச்சியான வரிகள். அருமை.

சுந்தரா said...

கண்ணீர்விடுகிறோமோ இல்லையோ கலங்கிப்போவது நிஜம்.

கவிதை நல்லாருக்கு அம்பிகா.

Vidhoosh said...

கண் கலங்குவதோடு நின்று விடுவது சாம்பம்தான்.

நன்றாக மனம்வெடிக்க அழுது விடும் வாய்ப்பும், ஒரு மடியும் கிடைப்பது வரம்...

வாழ்த்துக்கள்

வித்யா

ஹுஸைனம்மா said...

எல்லார் சார்பாவும் எழுதின மாதிரி இருக்கு.

ராகவன் said...

அன்பு அம்பிகா,

தினம் தினம் தோற்றுப்போகிறேன்...

அழகான கவித்துவமான வரிகள்...

கற்பூர நாயகியே கனகவல்லின்னு ஒரு எல் ஆர் ஈஸ்வரி பாடிய ஒரு பக்தி பாடல், அதில் ஒரு வரி வரும்...

தோற்றாலும், ஜெயித்தாலும் வாழ்வாகினாய், தொழுதாலும், அழுதாலும் உறவாகினாய்... எனக்குப் பிடித்தது...
தோல்வியா இது என்று நிறைய பின்னூட்டங்களில் எதிரொலிக்கிறார்கள்... தோல்வி ஆரோக்கியமான விஷயம் தானே அம்பிகா??!!

அன்புடன்
ராகவன்

Thenammai Lakshmanan said...

நிஜம்தான் நெகிழ்ந்துவிட்டேன் தோழி

அம்பிகா said...

ராமலக்ஷ்மி said...
//ஏதாவது ஒன்று//

தொடர்ந்தபடியேதான்:(!

உண்மைதான். தொடர்ந்தபடியேதான்.
பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி, சின்ன அம்மிணி.

இல்லை மாதண்ணா, எல்லோரும் சொல்வது போல் இது தோல்வி இல்லை தான்.


நன்றி பொன்ராஜ். அடுத்து உன் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி, ஆயில்யன்.

நன்றி அகநாழிகை.
\\அழுதா கண்ணுக்கு ரொம்ப நல்லதுங்க\\
அப்ப அழலாம்ங்குறீங்க.

நன்றி விஜியண்ணா.

தீபா,
கண்ணகி,
சந்தனமுல்லை
நன்றி.

\\க.பாலாசி said...
உண்மைதாங்க.. எப்டியாவது கண்ணீர் வந்திடுது... ஏதோவொன்றால்...\\
உங்களுக்குமா?

ஹேமா,
வருகைக்கும், பகிர்வுக்கும்
நன்றி தோழி.

முகுந்த் அம்மா,
உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நன்றி சுந்தரா.

நன்றி விதூஷ்.

நன்றி ஹூஸைனம்மா.

வாங்க ராகவன்
\\தோற்றாலும், ஜெயித்தாலும் வாழ்வாகினாய், தொழுதாலும், அழுதாலும் உறவாகினாய்...\\
அழகான வரிகளை மேற்கோள் காட்டி என் பதிவுக்கே பொருள் சேர்த்து விட்டீர்கள்.
நன்றி ராகவன்.

நன்றி தேனம்மை.

ரிஷபன் said...

அந்தப் பட்டியலில்
‘ஆணும்’ உண்டு..