எல்லாம் அவனே; என்றுதான்
அனுப்பி வைத்தனர்,
எதுவாகவும் இல்லை
நீ எனக்கு..
விதியை எண்ணி
விட்டத்தை வெறித்து கிடந்தேன்;
`என்ன் நெனச்சுட்டுருக்க?
மௌனமாய் தலையசைக்கிறேன்,
யாரை நெனச்சுட்டுருக்க?
அருவெறுப்பில் குறுகி போகிறேன்.
என்னை முறைப்பவனை
நீ முறைத்தால்,
என் மீதான அன்பு எனலாம்;
ஆளுமை எனலாம்,
என்னையே முறைத்தால்;
உன் மன விகாரமன்றி
மற்றென்ன?
கோயில், கோயிலாக வேண்டவில்லை,
மடிப் பிச்சையும் கேட்கவில்லை; ஆனாலும்,
மடி நிறைந்த மழலையை
தந்தவனுக்கும் தெரிந்திருக்கிறது,
எனக்கோர் பிடிமானம் வேண்டுமென்று.
20 comments:
பிடிமானத்தில் தொடருகிற வாழ்க்கைகள்..
நல்ல கவிதை அம்பிகா!
அருமையான பதிவு!!!
யாருக்காக இந்த பதிவு???
\\ponraj said...
அருமையான பதிவு!!!
யாருக்காக இந்த பதிவு???\\
சந்தேக குணம் படைத்த எல்லாருக்காகவும் தான்.
கண்டுக்காம இருக்கத்தானே சொல்லிக்கொடுக்கறாங்க!
நிறைய கேள்விகளை, பலருடைய வாழ்க்கையையும் இந்த கவிதை முன்வைக்குது அம்பிகா அக்கா.
தெளிவான பார்வை
அருமையான பதில்!!!!
//சந்தேக குணம் படைத்த எல்லாருக்காகவும் தான்.//
உங்கள் பதில் ஆண்களுக்கு மட்டும் அல்ல,பெண்களுக்கும் பொருந்தும்....
அழுத்தமான கவிதை... புண்ணாகிப்போன சில பெண்களின் வாழ்க்கையை நினைவுப்படுத்துகிறது...
நல்ல கவிதை
ச்சும்மா நச் விஷயம் பளிச்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
கவிதையில் விரக்தியும்..... இயலாமையும்....
உணர்வை அப்படியே படம் பிடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
எல்லாத்தையும் பொருத்துக்கோ ன்னு கல்யாணம் ஆனதும் நமக்கு மட்டும் ஏன் தான் சொல்லி அனுப்பறாங்களோ?
நல்ல கவிதை.
சும்மா நச்சுன்னு இருக்கு அம்பிகா சந்தேகப்படுறவங்களையே நம்பி வாழ்வதுதான் கஷ்டம்
நச்
அனைத்து வரிகளும் அழுத்தம்,
இருந்தும் எனக்கு பிடித்தது...
//கோயில், கோயிலாக வேண்டவில்லை,
மடிப் பிச்சையும் கேட்கவில்லை; ஆனாலும்,
மடி நிறைந்த மழலையை
தந்தவனுக்கும் தெரிந்திருக்கிறது,
எனக்கோர் பிடிமானம் வேண்டுமென்று.//
அருமை ...
அன்பு அம்பிகா,
எளிமையாய் அழகாய் இருக்கிறது... தீபாவின் எழுத்தும், உங்களுடைய எழுத்திலும் ஒரு பொதுத்தண்மை இருக்கிறது என்று நினைக்கிறேன். எழுதும் போதே அறைந்து சாத்தத் தோன்றுகிறது உங்களுக்கு, சந்தேகப்படுபவர்களைப் பார்க்கும் போது, இது பெண்கள் பக்கத்திலும் இருக்கிறது அம்பிகா!
அன்புடன்
ராகவன்
கவிதை நெகிழ்வு அம்பிகா.என்றாலும் சந்தர்ப்பங்களும் சிலருடைய அடிப்படைக் குணங்களுமே சந்தேகப்பட வைக்கும் அடுத்தவர்களை .
பெண்களும்கூட !
நன்றாக ஆரம்பித்த கவிதை. கடைசி வரிகள் இடறியது போலிருக்கிறது. சொல்ல வந்த விஷயம் முக்கியமானது.
உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
பொன்ராஜ், ஹேமா, ராகவன் குறிப்பிட்டது போல், பெண்களிலும் சந்தேக குணம் படைத்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். சந்தேகங்கள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடாக இருந்தாலும், அளவுக்கு மீறும் போதும் போது ஆளையே சாகடித்து விடுகிறது. அதைத் தான் வெளிப்படுத்தியிருந்தேன்
அனைவருக்கும் நன்றிகள்.
வாழ்க்கை ஒரு விசித்திரம் .எதாவது ஒன்றுக்கு நாம் வருத்தப்படத்தான் வேண்டியிருக்கும் போல .ஆணாய் இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி .அதனால் நாம் அறியாமல் நமக்கு அளிக்கப்பட்ட வரங்களை இருக்க பற்றி கொள்ள வேண்டும் .நச் கவிதை அம்பிகா .
அன்பு பத்மா,
உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
Post a Comment