Monday, March 15, 2010

பாடாத பாட்டெல்லாம்...

2009 ம் ஆண்டின் சிறந்த பாடகிக்கான விருதுக்கு, எதிர்பார்த்தபடி அவள்

பெயரே அறிவிக்க பட்டது. பாராட்டுக்கள் குவிகின்றன. தமிழ்நாட்டுக்கு

மீண்டும் ஒரு பி.சுசீலா கிடைத்துவிட்டார், தென்னகத்தின் லதாமங்கேஷ்கர்

என பாராட்டு மழையில் நனைகிறாள். சட்டென அனைத்தும் கலைந்துபோக,

அட... சே.... அத்தனையும் கனவா..? எரிச்சலுடன் மணியை பார்த்தேன்.

விடியற்காலை நான்கு மணி. இந்த விடிகாலை கனவு நிச்சயம் பலிக்கப்

போவதில்லை. நேற்று தூங்க போகும்முன், பழைய பாடல்களை கேட்டுக்

கொண்டிருந்ததன் விளைவு என புரிந்தது.



என் அம்மா முறைப்படி சங்கீதம் கற்றவர்கள். சாரீரமும் இனிமையாக

இருக்கும். நன்றாக பாடுவார்கள். அந்த சங்கீத ரத்தம் என்னையும் பாட

தூண்டியது. ஆனால் நான் பாட வாயை திறந்தாலே, என் உடன்பிறப்புகள்

சும்மாயிருக்க மாட்டார்கள். என் இரண்டாவது அண்ணன்,` அம்மா, கதவு

இடுக்கில் எங்கேயோ ஒரு எலி மாட்டிக் கொண்டது' என்பான். என் இளைய

சகோதரன் எனக்கு `பஞ்சகல்யாணி' என நாமோதயம் சூட்டியிருந்தான்.

இது ஒரு தடவை என்றில்லை, நான் வாயைத் திறந்தாலே தொடரும்.

ஆனாலும் நான் சளைக்க மாட்டேன். ஒரு இளம் குயிலின் சிறகுகள்

முடக்க படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.


கல்லூரிபடிப்புக்காக ஹாஸ்டல் சென்றிருந்தபோது, இந்த நையாண்டிகளில்

இருந்து, விட்டுவிடுதலையாகி நின்றேன். கேட்பாரில்லாமல் பாடிதிரிந்தேன்.

ஆனால், என்அறைத் தோழிகளும், மற்றவர்களும், நான்நன்றாக பாடுவதாக

சொன்னார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எப்படி என தெரியாது,

அந்த நேரம் பிரபலமான பாடல்கள், பழைய பி.சுசீலா பாடல்கள் எல்லாம்

முழுவதுமாக தெரியும். ஓரிருமுறை கேட்டாலே மனனம் ஆகிவிடும்.

அதனால் தைரியமாக பாடுவேன்.விடுதிவிழாக்கள், எங்கள் துறைசார்ந்த

விழாக்களில் பாடியிருக்கிறேன். அதை வீட்டில் சொன்னபோது, இரங்கல்

தீர்மானம் நிறைவேற்றினார்கள்.



இங்கே வீட்டிலும் நல்ல மூடில் இருந்தால் பாடஆரம்பித்து விடுவேன்.

என் கணவரும், பையன்களும், நான் நல்ல மூடில் இருக்கக் கூடாது என

வேண்டிக் கொள்வார்கள். என் பையன்களும் நான் பாடினால் கத்துவார்கள்.

ஆனால் நான், `உங்க மாமா நாலு பேர் கேலி பண்ணியே பயப் படல,

நீங்க சொல்லியா கேட்க போறேன். போங்க, போய் தண்ணிய குடிங்க’ன்னு

விரட்டி விடுவேன். என் இளைய மகன் கொஞ்சம் இறங்கி வந்து, `பழைய

பாட்டு பாடாதீங்க, புது பாட்டு ஏதாவது பாடுங்க.’ என்பான், சத்புத்திரன்.



ஏதாவது விசேஷம், கோயில்கொடை என கூடும் போது அரட்டைகச்சேரி,

பாட்டுகச்சேரி எல்லாம் நடக்கும். எங்கள் பெரிய அண்ணி, மிகவும் இனிமை

யாக பாடுவார்கள். அற்புதமான குரல் வளம் அவர்களுக்கு உண்டு. பழைய

பாடல்களை, பாடச் சொல்லி கேட்டு ரசிப்போம். அப்போது தான் நம்மை

ஏன் இப்படி கேலி செய்கிறார்கள் என்பது புரியும். ஆனால் வெளிப் படுத்திக்

கொள்ள மாட்டேன். நானும் கூட சேர்ந்து கோரஸ் பாடுவேன்.



எப்படியோ, நேற்றைய கனவு, ஒரு பதிவுக்கு வழிவகுத்தது.

கனவுகள் + கற்பனைகள் = பதிவுகள்.

அட ; இது கூட நல்லாயிருக்குதே..!

27 comments:

Paleo God said...

அட நானும்தான்..:)
என்னுடைய அம்மாவும் முறைப்படி சங்கீதம் கற்றவர்கள்...
எனக்கு வெறும் காத்துதான் வரும்.::))

கண்ணகி said...

அட உங்க வீட்டிலும் இதே கதைதானா..

ராமலக்ஷ்மி said...

கனவுகள் + கற்பனைகள்+ முயற்சிகள்(கூட சேர்ந்து கோரஸ் பாடுவேன்)= கைகூடும் ஓர்நாள்!

வாழ்த்துக்கள்:)!

சந்தனமுல்லை said...

:-) அழகான நினைவலைகள் அம்பிகா அக்கா! உங்கள் அண்ணாக்கள் செய்த கிண்டல்களும் நீங்கள் விவரித்த விதமும் படிக்க ஜாலியாக இருந்தது! எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம்...சுமார் 100 கிமீகள்! :-))

அண்ணாமலையான் said...

சரி சீக்கிரம் மேடையேறுங்கள்.

க.பாலாசி said...

//நான் நல்ல மூடில் இருக்கக் கூடாது என
வேண்டிக் கொள்வார்கள்//

நாங்களும்... (ஹி...ஹி....)

//கனவுகள் + கற்பனைகள் = பதிவுகள்.//

கனவுகள் + கற்பனைகள் + அனுபவம் = பதிவுகள்.... இதுவும் நல்லாயிருக்குல்ல....

எறும்பு said...

அருமை..

நல்லா பாடுங்க..

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)நல்ல கனவு..

அது என்னமோ பாடறவங்களுக்கு இனிமையா இருக்க்றது கேக்கறவங்களுக்கு இருக்கறதில்ல.. நானே கூட என் பாட்டை ரெக்கார்ட் செய்து கேட்டுப்பாத்தேன்.. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.. ஆனாலும் பாடறத விடமுடியுமா.. நம்ம மகிழ்ச்சிதான் நம்க்கு முக்கியம்.. நல்லா பாடுங்க..

மாதவராஜ் said...

சிரித்துக்கொண்டே படித்தேன். இந்த விஷயத்தில் உன் அபார தன்னம்பிக்கை எப்போதும் என்னை வியக்க வைக்கிறது.

ponraj said...

நம் சொந்தங்களில் எத்தனை பாடகர்கள், பாடகிகள்.....

எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்!!!!

அருமையான பதிவு!!!

VijayaRaj J.P said...

கதவிடுக்கில் அன்று சிக்கிய எலி
இன்னமும் மீள முடியாமல் தொடர்ந்து
கத்துகிறது[பாடுகிறது]...

முயற்சி தொடரட்டும்.

பழைய நினைவுகளும், புதிய நினைவுகளும்
இணைந்த பதிவு.

ரிஷபன் said...

பாடறதா முக்கியம்.. ஃபீலிங் தான் முக்கியம்..

காமராஜ் said...

நல்ல நினைவலைகள்
சங்கீத நினைவலைகள்.
நல்லாருக்கு அம்பிகா.

Deepa said...

:-))))

//இளம் குயிலின் சிறகுகள்

முடக்க படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.
// jollyaana idukai akkaa...

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

ராகவன் said...

அன்பு அம்பிகா,

நல்ல பதிவு...

அன்புடன்
ராகவன்

ஹுஸைனம்மா said...

நல்ல தன்னம்பிக்கையும், தைரியமும். விடாமல் தொடர்ந்து பாடுங்கள்!!

முடிந்தால் முறைப்படியும் பயின்று, நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுங்கள்.

Priya said...

//கனவுகள் + கற்பனைகள் = பதிவுகள்.//....நானும் அப்படியே கனவில் கண்டதை கவிதைகளாக்க, பின் பதிவாகியது!

முகுந்த்; Amma said...

விடாமுயற்சியுடன் தொடர்ந்து பாடுங்கள் ஒரு நாள் கனவு நிச்சயம் நனவாகும்.

Thenammai Lakshmanan said...

அட எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கனவு இருக்கிறதா அம்பிகா

சாந்தி மாரியப்பன் said...

அம்பிகா,நீங்கள் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டுளீர்கள். உங்க கருத்துக்களை எழுதுங்க.

http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

பா.ராஜாராம் said...

:-))

செம்ம ஜாலி இடுகை அம்பிகா!

நம்பிக்கையை விட்டுறாதீங்க... (கிடு..கிடு..)

:-))

அமுதா said...

நல்ல நினைவலைகள்... அழகா சொல்லி இருக்கீங்க

அம்பிகா said...

பின்னூட்டங்கள் வாயிலாய் வாழ்த்தும் அன்பும் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா..... நல்லா எழுதி இருக்கீங்க.

பனித்துளி சங்கர் said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . குடியைக் கெடுக்கும் தண்ணி பற்றி அதிகமாக சிந்திப்பவர்கள் . குடிக்கும் தண்ணீர் பற்றி சற்று சிந்திக்கலாம் .

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!