Wednesday, March 31, 2010

உயிர்கொல்லிகளாகும் மருந்துகள்..?

விஞ்ஞானம் எத்துணை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், மாண்டார்

மீண்டு வருவதில்லை. உயிரினும் அரிதான விஷயம் வேறில்லை. அரி

தான இந்த உயிரை காப்பாற்றத்தான் மருந்துகளும் மாத்திரைகளும்.

இன்றைய சூழலில் பலரது உயிர்களை மருந்து, மாத்திரைகளே தாங்கி

நிற்கின்றன. இவ்வாறிருக்க, மருந்துகளே மரணதேவனாய் மாறும் செய்தி

யறிந்து அதிர்ந்து போகிறோம். குப்பைமேட்டில் கொட்டப்பட்ட காலாவதி

யான மருந்துகளை லேபில் மாற்றி, ஒரு கொடூரகும்பல் விற்பனை செய்

திருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


காலாவதியான மருந்துகளை, உற்பத்திநிறுவனங்களே மருந்துகடைகளிட

மிருந்து திரும்ப பெற்று அழிக்க வேண்டும் என்பது, சுகாதாரதுறை விதித்

திருக்கும் நடைமுறை. ஆனால், சிலநிறுவனங்கள், இடைத்தரகர்களிடம்

இந்த பணியை ஒப்படைத்து விட்டதே, மோசடிக்குக் காரணமாய் கருதப்

படுகிறது. இதில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இம்மருந்துகள் சென்னையில் மட்டும் தான் விற்பனைக்கு விடப் பட்டதா,

அல்லது நாடு முழுமையுமா, என்பதெல்லாம் இனிதான் தெரிய வரும்.

மருந்துகள் அனைத்தும் ரசாயனங்கள் என்பதும், நாளாகிவிட்டால் ரசாயன

மாற்றம் ஏற்பட்டு நச்சுதன்மை கொண்டதாகி விடும் என்பதும், தெரிந்ததே.

இதற்கான தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும், காலாவதியான

மருந்துகளை அழிப்பதற்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட

வேண்டும் என்றெல்லாம் குரல்கள் வழக்கம் போல எழுகின்றன.



`ரி நெர்வ் ப்ள்ஸ்’ எனும் நரம்புகளுக்கு பலம் சேர்க்கும் சத்துமாத்திரை

களே அதிக அளவில் மோசடி செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. இவை

விலைஅதிகமுள்ளவை. சுகாதாரதுறை மக்களுக்கு சில அறிவுறுத்தல்கள்

வழங்கியுள்ளன.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் வாங்குதல் கூடாது.

மருத்துவரிடம் காட்டிய பின்னரே மருந்துகளை உபயோகித்தல் வேண்டும்.

ஏதேனும் மாறுதலோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் உடனடியாக மருத்து

வரை அணுக வேண்டும்.

போலிமருந்துகள் முற்றிலுமாக கண்டுபிடித்து அழிக்கப்படும் வரை இவை

களை பின்பற்றுவது நல்லது.



என்மகன் சிறுவனாயிருந்த போது நடந்த சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்

அவனுக்கு `ப்ரைமரி காம்ப்ளக்ஸ்' இருந்ததால், அடிக்கடி சளி,தும்மலால்

அவதி படுவான். மாத்திரைகள் ஊசிகள் என மருந்துகளோடு, நானும்,

அவனும் ஐக்கியமாயிருந்தோம். ஒருமுறை நல்லகாய்ச்சலும், இருமலும்

இருந்ததால் மருத்துவரிடம் காண்பித்து, அவர் எழுதிக் கொடுத்த மருந்து

சீட்டுடன், அருகிலிருந்த மருந்துகடைக்கு வந்தோம். கடையில் ஓரளவு

கூட்டமிருந்தது. மருந்துகடைக்காரர் கொடுத்த மாத்திரைக்கும், சீட்டிலிருந்த

பெயருக்கும் சம்பந்தமே இல்லாததை பார்த்த நான்,` வேற மாத்திரை

மாதிரியிருக்கே, என்றேன் ஐயத்துடன். வாங்கிபார்த்த கடைக்காரர்,`அதே

தான், வேற பிராண்ட். ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். எனக்கு

சமாதானமாக வில்லை. இருமல் மாத்திரைகள் அடிக்கடி வாங்கி பழக்கமி

ருந்ததால், ஏதோ தவறு இருப்பதாகபட்டது. என் கணவரிடம், டாக்டரிடம்

கேட்டு விட்டு வருகிறேன்’ என்று மறுபடி மருத்துவமனை சென்றேன்.



சீட்டையும்,மாத்திரையையும் வாங்கிப்பார்த்த டாக்டர்,சட்டென மேஜை

யின் மேல் தூக்கிப் போட்டார். `மருந்தை கொடுத்தது யார்?’ என கோப

மாக கேட்கவும், நான் நடந்ததை சொன்னேன். அவர் கோபத்தின்உச்சிக்கே

போய்விட்டார். `மருந்தை தூக்கி அவன் மூஞ்சியிலே எறி மா, இவனுக்

கெல்லாம் யார் லைசென்ஸ் கொடுத்தாங்களோ தெரியல’ எனவும் தான்,

ஏதோ விபரீதம் என புரிந்தது. அதன்பின் என்னிடம், `இது, சர்க்கரை

நோயாளிக்கு, ரத்தத்தில், சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக

கொடுக்கப் படும் மாத்திரை. இதை சாதாரணமாயிருப்பவர்கள் சாப்பிட

கூடாது. அதுவும் குழந்தைகளுக்கு கொடுத்தால், `கோமா ’ஏற்பட்டு

உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்’ எனவும் நான் நடுங்கி போய்விட்டேன்.

என் கணவர் கடைக்காரனை நன்றாக திட்டிவிட்டு, `கம்ப்ளெயிண்ட்

கொடுத்தால், உன் லைசென்ஸ் கேன்சலாகி விடும் தெரியுமா, இனி

யாவது ஜாக்ரதையாக இரு’ என எச்சரித்து விட்டு வந்தார். யார் செய்த

புண்ணியமோ, அந்த கடைக்கு விரைவிலேயே `மூடுவிழா’ நடத்தப்

பட்டுவிட்டது.



ஆண்டுகள் சில கடந்து விட்ட போதிலும், இந்த சம்பவத்தை நினைக்கும்

போதெல்லாம், ஒருவித நடுக்கமேற் படும். அன்றிலிருந்து, உறவினர்கள்,

தோழிகள் அனைவரிடமும் இச்சம்பவத்தைக் கூறி, எச்சரிக்கையாய் இருக்

குமாறு கேட்டுக் கொள்வேன். ஆனால், இப்படி காலாவதியான மருந்துகளை

லேபில் மாற்றி சப்ளை செய்தால் யார் தான் என்ன செய்ய முடியும்?

பணத்துக்காக, இப்படி உயிர்களோடு விளையாடும் இந்த இழிபிறவிகளை

என்ன செய்தாலும் தகும்.

15 comments:

சொர்ணா said...

மிக அருமையான, அவசியமான இடுகை.

Unknown said...

நீங்கள் குறிப்பீட்டிருந்த சம்பவம்...
பகீரென்றது.

\\பணத்துக்காக, இப்படி உயிர்களோடு விளையாடும் இந்த இழிபிறவிகளை

என்ன செய்தாலும் தகும்.\\
ஆமாங்க.

ராமலக்ஷ்மி said...

கடைசியில் சொன்னீர்களே, அதுவே எல்லோரது மனக்குமுறலும். நல்ல இடுகை அம்பிகா.

Chitra said...

ஆனால், இப்படி காலாவதியான மருந்துகளை

லேபில் மாற்றி சப்ளை செய்தால் யார் தான் என்ன செய்ய முடியும்?


...... :-(
வேதனைக்குரிய விஷயம் மட்டும் அல்ல, உடனடியாக சட்ட பூர்வமாக கவனிக்கப் பட வேண்டிய விஷயமும் கூட.

முகுந்த்; Amma said...

மனதை மிகவும் பாதித்தது நீங்கள் விவரித்த செய்தி.

//பணத்துக்காக, இப்படி உயிர்களோடு விளையாடும் இந்த இழிபிறவிகளை
என்ன செய்தாலும் தகும்//

சரியாக சொன்னீர்கள். என்ன செய்வது இவர்களை.

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான, அவசியமான இடுகை.

மாதவராஜ் said...

தேவையான, பிரக்ஞை ஏற்படுத்தும் பதிவு. நல்ல பார்வை.

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு....

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு சகோதரி

பெருங்காயம் said...

நல்ல இடுைக.
சீட்டையும்,மாத்திரையையும் வாங்கிப்பார்த்த டாக்டர், ? இப்ப டாக்டர பார்க்றேத ெபரிய விசயம், ேடாக்கன் மற்றும் காத்திருப்பு, இதில் எங்ேக மருத்துவரிடம் மருந்ைத காட்டுவது? மருந்து மற்றும் மருத்துவதுைறயில் ேதாண்ட ேதாண்ட ேமாசடிகள் வரும், இைதப்பற்றி எழுத ேவண்டுமானால் தினம் ஒரு இடுைக ேபாட ேவண்டும், ஆனால் மாற்றம் ஏதும் ஏற்பட ேபாவதில்ைல,
http://mvkumars.blogspot.com/2010/03/h.html

Deepa said...

மிக அவசியமான இடுகை அக்கா. நறுக்கென்று எழுதி இருக்கிறீர்கள்.

என்ன அநியாயம். நீங்கள் செய்த புண்ணியம் கவீஷுக்கு அந்த மருந்தைக் கொடுக்காமல் இருந்தீர்கள். நினைத்தாலே நடுங்குகிறது.

\\பணத்துக்காக, இப்படி உயிர்களோடு விளையாடும் இந்த இழிபிறவிகளை
என்ன செய்தாலும் தகும்.\\ சத்தியமாக.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

சுந்தரா said...

பயனுள்ள இடுகை அம்பிகா.

உங்க சொந்த அனுபவம் திடுக்கிடவைத்தது.

பணத்துக்காக உயிர்வாங்கும் இந்தக் கூட்டத்தை என்ன செய்தாலும் தகும்தான்.

ஹுஸைனம்மா said...

நிச்சயம் மருந்துக்கடையில் தரும் மருந்துகளை, மருந்துச்சீட்டின் பெயர்களோடு சரிபார்த்தல் வேண்டும். ஆனால் எல்லாரும் செய்வதுமில்லை; செய்ய முடிவதுமில்லை. இம்மாதிரிச் சம்யங்களில் இறைவனே துணை என்றுதான் இருக்க முடிகிறது.

அம்பிகா said...

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி சொர்ணா.

வாங்க ரமணா.
உண்மைதான். பகிர்வுக்கு நன்றி.

நன்றி, ராமலக்ஷ்மி.

என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
பகிர்வுக்கு நன்றி சித்ரா.

நன்றி முகுந்த் அம்மா.
எல்லோரது மனக்குமுறலும் அதுவே.

நன்றி குமார்.

நன்றி மாதண்ணா.

நன்றி சரவணகுமார்.

நன்றி சங்கவி.

தோண்ட தோண்ட மோசடிகள் தான் வருகின்றன.
வருகைக்கும் பகிர்வுக்கும்
நன்றி விஜய்.

நன்றி தீபா.

பகிர்வுக்கு நன்றி சுந்தரா.

நீங்கள் கூறுவது உண்மைதான் ஹூஸைனம்மா.
பகிர்வுக்கு நன்றி.