Friday, May 7, 2010

விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போதலும்... எதுவரை...?

.
.
இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர்

வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை

யில், தன் ஒன்றரை வயது பெண்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு தற்

கொலை செய்து கொண்டாள். திருமணமாகி, தன் கணவனுடன் திருப்

பூருக்கு வாழச் சென்றவள், வாழ்க்கையையே முடித்து கொண்ட செய்தி

போன் மூலம் வந்திருக்கிறது.குடிகார கணவன் கொடுமைப்படுத்தினான் என்பதற்காக, அப்பகுதியில்

கிடைக்கும் சாணிபவுடர் என்பதனை உட்கொண்டு தற்கொலை செய்து

கொண்டிருக்கிறாள். ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லையாம், வெளியே

யாருடனும் பேசவோ பழகவோ விடுவதில்லையாம், குடித்துவிட்டுஅடிப்பது

கருப்பு என்பதை காரணம் காட்டி வேறு கல்யாணம் செய்து கொள்வேன்

என்ற மிரட்டல் வேறு. இவையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன் தாய்வீடு

வந்தவள் கூறிய காரணங்கள். போகமாட்டேன் என்று அழுதவளை சமா

தானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.எம்பெண்கள் முன்னேறுகிறார்கள் என சந்தோஷமாக நினைக்கும் நேரம்,

இதைப்போன்ற கோழைத்தனமான நிகழ்வுகள், அதிர்ச்சியையும், ஆயாசத்

தையும் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பெற்றோருக்கும் பெரும்

பங்கு இருக்கின்றது. குழந்தைகளுக்கு தைரியத்தையும், போராடும் குணத்

தையும் பெற்றோர் தான் உருவாக்கித் தரவேண்டும். தொட்டாற்சுருங்கியாக

சாதுவாக இருப்பதுவும் கூட தவறுதான். அந்த பெண்ணும் அத்தகையவள்

தான். சதா சிரித்த முகமாக மிகவும் அமைதியாக இருப்பாள். அதிர்ந்து

கூட பேச மாட்டாள். திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து

விடுவதில்லை. கட்டியகணவனும், வாய்த்தவாழ்க்கையும் சரியில்லையா,

`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை

பெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும். இத்துணைக்

கும், அந்தபெண் +2 படித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில்

மூன்றுவருடம் நர்சாக பணியாற்றிய அனுபவம் கொண்டவள். கணவனைப்

பிரிந்து வந்தாலும், நிச்சயம் அவள் சொந்த காலில் நின்றிருக்க முடியும்.விட்டுக் கொடுத்துப் போ..., அனுசரித்துப் போ... என்று அனுப்பி வைக்க

கிறார்கள். அது நம் ஜீன்களிலேயே இருக்கிறது. வாழ்வதற்காக விட்டுக்

கொடுக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் விலைமதிக்க முடியாத

உயிரையே விட்டு தர வேண்டியதில்லை.
.
.

19 comments:

கண்ணகி said...

இத்தகைய நிகழ்வுகளில் பெற்றோருக்கும் பெரும்

பங்கு இருக்கின்றது. குழந்தைகளுக்கு தைரியத்தையும், போராடும் குணத்

தையும் பெற்றோர் தான் உருவாக்கித் தரவேண்டும். தொட்டாற்சுருங்கியாக

சாதுவாக இருப்பதுவும் கூட தவறுதான். அந்த பெண்ணும் அத்தகையவள்

தான். சதா சிரித்த முகமாக மிகவும் அமைதியாக இருப்பாள். அதிர்ந்து

கூட பேச மாட்டாள். திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து

விடுவதில்லை. கட்டியகணவனும், வாய்த்தவாழ்க்கையும் சரியில்லையா,

`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை

பெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும்....உண்மை..அம்பிகா...பிறந்தவீட்டில் ஆதரவு இல்லாத பெண்கள்தான் இத்தகைய முடிவை எடுக்கின்றனர்...

அமைதிச்சாரல் said...

//திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை//

உண்மைதான். எத்தனை பெற்றோர்கள் புரிதல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒண்ணு அக்கறைங்கிற பேர்ல எதுக்கெடுத்தாலும் அவ வாழ்க்கையில தலையிடுவாங்க. இல்லைன்னா, என்ன நடந்தாலும் கண்டுக்காம உன் தலைவிதி இப்படி ஆகிப்போச்சேன்னு ஒப்பாரி வைக்கிறதோட கடமை முடிஞ்சுபோச்சுன்னு ஒதுங்கிடுவாங்க. ஏன்னா.. தலையிட்டா பிரச்சினை இன்னும் பெரிசாகி அவ வாழ்க்கை கேள்விக்குறியாகிடும்ன்னு பயம். உண்மையான ஆதரவு கிடைக்கிறது குறைந்த அளவில்தான்.

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு அம்பிகா.எங்கள் பெண்கள்தான் உறவுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பவர்கள்.சரியான முடிவு எடுக்கத் தெரியாததால்தான் திடீரென இப்படி ஏதாவது செய்துகொள்கிறார்கள்.
விட்டுக்கொடுப்பதும் சமாளிப்பதும்தான் வாழ்க்கை.
ஆனால் அது எதுவரை என்பதுதான் கேள்வி.ஓரளவு துணிவும் நம்பிக்கையும் இருத்தல் நல்லது
நம் பெண்களுக்கு.

Anonymous said...

சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற உணர்வைக்கொண்டு வருவதும் பெற்றோருடைய கடமையே. இல்லாவிட்டால் இப்படித்தான். :(

thenammailakshmanan said...

உண்மை அம்பிகா சமூகத்துக்காக வாழ்ந்து் வாழ்ந்தே நமக்காக வாழ மறந்தவர்கள் நாம்

தாராபுரத்தான் said...

ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவம்மா.

padma said...

பாதி துன்பம் சமூகம் சார்ந்தே தான் .அதில் நாமும் உள்ளோம் தோழி .பெண்களும் கொஞ்சம் மாற கற்றுக்கொள்ள வேண்டும் தானே ?

காமராஜ் said...

அதானே உயிர் எவ்வளவு விலை மதிப்பற்றது. பாவம் அந்தப்பெண்.

rajasurian said...

ஊர் என்ன சொல்லுமோ என்பதற்க்குத்தான் பல பெற்றோரும் முதலிடம் தருகிறார்கள். துன்பம் மட்டுமே தரும் கணவனும் ஆதரவு தர தவறும் பெற்றோரும் அமைந்த வாழ்க்கையை எதிர்கொள்ள அசாத்திய தைரியம் வேண்டும்.
இந்த எளவெடுத்த கல்யாணத்திற்கு ஜாதி, நாள்,நட்சத்திரம், ஜாதகம், மாப்பிள்ளையோட சொத்து,வருமானம் என்று ஆயிரத்தெட்டு பாக்குரான்களே மாப்பிள்ளை குணம் என்னன்னு விசாரிக்கவே மாட்டாங்களா. நல்ல (பெரிய) எடத்துல சம்பந்தம் பண்ணிட்டோம்னு இவுங்க பீத்திக்க, பலியாகறது இவுங்கள நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட வாழ்க்கை.
:(

க.பாலாசி said...

//`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை
பெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும்//

சரியாக சொன்னீர்கள்... இதுபோன்ற ஆதரவை பெற்றவர்கள் தருவதே...இதுமாதிரியான பெண்களுக்கு துணையாகவும் தைரியமாகவும் இருக்கும்....

வருந்தத்தக்க நிகழ்வு....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கொடுமை :(

--

ஏங்க இன்னுமா அந்த சாணி பவுடர தடை பண்ணல?

சுந்தரா said...

தன்னுடைய பிரச்சனைகளை மட்டுமே நினைத்துத் தற்கொலைசெய்துகொண்டவள்
தன் பிள்ளையையும் கொஞ்சம் நினைத்திருக்கலாம்.

வருத்தம்தான் மிஞ்சுகிறது.

க.பாலாசி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஏங்க இன்னுமா அந்த சாணி பவுடர தடை பண்ணல?//

அட நீங்கவேற திருப்பூர்லையும், ஈரோட்டுலயும் மூட்டமூட்டையா வாங்கி வித்துகிட்டுதாங்க இருக்காங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வாழ்வதற்காக விட்டுக்

கொடுக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் விலைமதிக்க முடியாத

உயிரையே விட்டு தர வேண்டியதில்லை.
\\
ரொம்ப சரியாச் சொன்னீங்க

அன்புடன் அருணா said...

:(

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நானும் பார்த்து விட்டேன்.. குடிப்பவன் வீட்டில் எதுவுமே ஒழுன்கில்லை. இவனுக்கெல்லாம் மனைவி ஒரு கேடு..

அதனால் தான் என் தங்கையை சம்பளம் குறைவாக வாங்கும் ஒருவனுக்கு கட்டிக் கொடுப்பேனே அன்றி ஒரு குடிகாரனுக்கு ஒருபோதும் கொடுப்பதாயில்லை..

நன்றி..

பா.ராஜாராம் said...

வேலைகளில்,வாசிக்காமல் வந்து ஓட்டு மட்டும் போட்டு போனேன் அம்பிகா.

சொல்ல வருவதை நேர்த்தியாக சொல்வதை,

கொஞ்சம் கடன் கொடுங்க அம்பி.. ;-)

ஜெஸ்வந்தி said...

உண்மைச் சம்பவம் என்றதால் மனதை உலுக்கி விட்டது. இது சில நிமிட விரக்தியினால் எடுக்கப் படும் முட்டாள் தனமான முடிவு. சற்றுச் சிந்தித் திருந்தால் தன் குழந்தையின் நிலையை எண்ணியாவது உயிர் வாழ நினைத்திருப்பாள். பெண்கள் தங்கள் மனதைத் திறந்து
வெளிப்படையாகப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.
இது பெண்களுக்கு மட்டுமல்ல , பையன்களுக்கும் தான் .பிரச்சனைகளை மனதில் அமுக்கி வைக்கும் பழக்க முள்ளவர்கள் தான் இப்படியான முடிவுகளை எடுக்கிறார்கள்.

ponraj said...

//விட்டுக் கொடுத்துப் போ..., அனுசரித்துப் போ... என்று அனுப்பி வைக்ககிறார்கள். அது நம் ஜீன்களிலேயே இருக்கிறது///

இதை மாற்ற வழியே இல்லையா???

மிகவும் சோகமான பதிவு!!