Thursday, May 27, 2010

டி.வி. சீரியல்கள்.

.
.
போனமுறை அப்பா வந்தபோது

பார்த்தது ;

இப்போதும் புரிகிறது

முன்கதை சுருக்கம்

ஏதும் இல்லாமலே.




கெட்ட வார்த்தையால்

மாமியாரை திட்டும் மாமியாரிடம்

மருமகள் சொன்னாள்,

`மெதுவா அத்தை,

`மாமியார் கொடுமை’ னு

பக்கத்து வீட்ல நெனைக்க போறாங்க’.



நிழல் பார்த்து நிமிர்ந்ததற்கே

தலையை வெட்டிய பரசுராமன்,

இந்த சீரியல்களை

பார்க்க நேர்ந்தால்...?
.
.

15 comments:

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா..அருமை! :-))

க ரா said...

ஒரு வேளை அவரும் சீரியல் பாக்க ஆரம்பிச்சுருவாரோ :-).

Chitra said...

இராமசாமி கண்ணண் said...

ஒரு வேளை அவரும் சீரியல் பாக்க ஆரம்பிச்சுருவாரோ :-).



........ ha,ha,ha,ha,ha....

Mahi_Granny said...

ஒரு வருடம் கழித்து வந்தாலும் புரிகிறது முன் கதை சுருக்கம் இல்லாமலே . அருமை

ராமலக்ஷ்மி said...

அருமை அம்பிகா:)!

செந்தில்குமார் said...

சொல்லத்தான் நினைக்கிறேன்

நல்லாதான் இருக்கு.....

Kousalya Raj said...

என்னதான் சொன்னாலும் திருத்தவே முடியாது இந்த சீரியல் அடிமைகளை!!!

அமைதி அப்பா said...

நல்ல கவிதை.

பாராட்டுக்கள் மேடம்.

Priya said...

//இப்போதும் புரிகிறது

முன்கதை சுருக்கம்

ஏதும் இல்லாமலே.//....டிவி சீரியல்ன்னா இப்படிதான் இருக்கனுமோ!!!!:)

ஈரோடு கதிர் said...

சித்தி-யில ஆரம்பிச்ச வியாதி

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

ஹேமா said...

அம்பிகாவின் ஆதங்கம் இப்போ சீரியல் மேலயா....திருந்துறத்துக்கும் சீரியல் போட்டுச் சொல்லிடுவாங்க !

ஹுஸைனம்மா said...

//மாமியாரை திட்டும் மாமியாரிடம்
மருமகள் சொன்னாள்,//

பாவம் அந்த மருமகள்-கம்-மாமியார்!!

;-)))))))))

நறுமுகை said...

ஒரு வருசம் இல்லங்க.. பர்ஸ்ட் 5 எபிசோட் லாஸ்ட் 5 எபிஸோட் எத்தனை வருசம் கழிச்சு பார்த்தாலும் புரியும்

www.narumugai.com

goma said...

இந்த சீரியல்களை

பார்க்க நேர்ந்தால்...?
.
பார்ப்பவர்கள் தலையையும் சேர்த்து வெட்டுவான்