Thursday, August 26, 2010

நம்பிக்கையின் கரம் ; நம்பமுடியாத நிஜம் !!!

.

.ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி

யாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில

உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை

`ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக்

பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை

யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து

21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து

அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க

தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும்.இந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர்

என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள்.

சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை

செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி

வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற்

கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு

மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி

கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம்

நிகழ்ந்தது.21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம்,

அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக

நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது.

அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்ப

வத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி

நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’,

என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான்

போகிறோம்.தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப்

படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)' என்ற பெயரோடு, அந்த

படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19,

1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத்

துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ்

என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம்

தான், கீழே நீங்கள் காண்பது. 25 yard backstroke நீச்சல் போட்டியில்

முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது

முதல் புகைப்படம் ( 21 வார) பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு

டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’

இருப்பதாக கூறுகிறான்.


`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்

களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!

.

22 comments:

வினோ said...

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சாட்சி.. நல்ல பகிர்வு சகோ..

Sethu said...

Wow. Nice one and thanks for sharing.

அன்பரசன் said...

நீங்கள் கொடுத்துள்ள படம் மிக அருமை

Priya said...

உண்மையிலேயே நம்ப முடியாத நிஜம்தான்! அபூர்வமான படம்தான் இது... 21 வார குழந்தையின் கைகளை பார்க்கும் போது சற்று சிலிர்க்கத்தான் செய்கிறது.

santhanakrishnan said...

ஆச்சர்யங்கள் நிகழும் போது
கடவுளை நினைக்காமலிருக்க
முடிவதில்லை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .
பகிர்வுக்கு நன்றி .

யாதவன் said...

சும்மா சொல்ல கூடாது நல்லா இருக்கு

வெறும்பய said...

உண்மையிலேயே நம்ப முடியாத நிஜம்தான்!

Chitra said...

oooooohhh...... The photo is ......is..... is......

கண்ணகி said...

சிலிர்த்துவிட்டது...

காமராஜ் said...

யாரிது அம்பிகாவா...
அடடா செய்தியை விட அதை பகிர்ந்த விதம் சிலிர்க்க வைக்கிறது. அழகு அபாரம்.

ஹேமா said...

படம் மெய்சிலிர்க்க வைக்கிறது அம்பிகா.கை கொடுத்து நம்பிக்கையை வாங்கிக்கொண்டதோ !

Sriakila said...

மெய்சிலிர்க்க வைக்கிறது இந்தப் படம்!

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

நன்றி அம்பிகா.

சே.குமார் said...

நம்ப முடியாத நிஜம்தான்!

நல்ல பகிர்வு.

பத்மா said...

நல்லதொரு பகிர்வு ...நன்றி அம்பிகா

ஜெஸ்வந்தி said...

Well written.

R.Gopi said...

மிக மிக பிரமாதமான செய்தி அம்பிகா..

நிஜமாகவே படித்து முடித்தவுடன், ஒரு பிரமிப்பு கலந்த நெகிழ்வான ஒரு நிலையில் இருக்கிறேன்....

கண்கள் தானாகவே கலங்குகிறது.... இந்த கண நேரத்தில் படைத்தவனை மனதார வணங்குகிறேன்....

ஜெயந்தி said...

அறிவியல் அற்புதம். அருமையா சொல்லியிருக்கீங்க.

Deepa said...

அருமையான பகிர்வு. அந்த முதல் படத்தைப் பார்த்திருக்கிறேன். வளர்ந்தபின் அந்தப் பையனின் படத்தைப் பார்க்கச் செய்தமைக்கு நன்றி; மகிழ்ச்சி!

அஹமது இர்ஷாத் said...

மெய்சிலிர்ப்பு..

சுந்தரா said...

மருத்துவ உலகம்தான் எவ்வள்வு முன்னேறியிருக்கிறது!!!

இரண்டு படங்களையும் சேர்த்துப்பார்க்கையில் சிலிர்த்துப்போகிறது.

அருமையான பகிர்வு அம்பிகா.