Tuesday, August 3, 2010

ஆடிப் பெருக்கு ; தங்கம் பெருகுமா..?

.
.
. .``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...


சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம்

தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல். ஆனால் இப்

போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப்

பெருக்கை நினைவூட்டுகின்றன.


ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது

ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாட

படுகின்றது. விவசாயிகள் காவேரிஅன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது

மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந்

நாளின் சிறப்பம்சங்களாகும்.
நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் இத்தகைய

திருவிழாக்கள், இன்று நகை வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக்

கொண்டிருக்கின்றன.


.

.
ஆடிப்பெருக்கு என்றலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் உறவுக்கார பெண் என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு நீங்க என்ன

வாங்க போறீங்க.?’’ என்றாள்.

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.


காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப்

பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

13 comments:

rk guru said...

ஆடிபெருக்கை ஓடிபெருக்கு......நல்ல பதிவு வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆடிப்பெருக்குக்கு நான் எம்ஜிஆர் வளையல்கடைக்குப் போய் புதுசா மேட்சிங் க்லரில் தோடு வளையல் பாசி வாங்கிட்டு காவேரில போய் பூஜை செய்து காப்பரிசி சாப்பிட்டுட்டு மஞ்சகயிறு கையில் கட்டிக்கிட்டுவரது நினைவுக்கு வருது.. எப்படியும் அன்னிக்கு காவேரியில் தண்ணிவிட்டுருவாங்க.. ஓடும்படி..

தண்ணீரை ஒழுங்கா கும்பிட்டு அதன்முக்கியத்துவம் புரியனும்ன்னு வச்சிருக்காங்க பழயகாலத்துல..
ஆனா என்ன சொல்லுங்க தள்ளூபடியில் நல்லபடியா சேலை வாங்கறதும் அந்த சமயத்துல முக்கியமான விசயம் தான்.. நிஜம்மான தள்ளுபடி நடக்கிறதடுபிடிக்கமட்டும் தான் திறமை வேணுமாக்கும்.. :)

தங்கமா? அது மட்டும் வாங்க காசு இருந்தா எப்பவேணா வாங்கலாங்க :)

வினோ said...

/ ``ஆடிப்பெருக்குக்கு நீங்க என்ன
வாங்க போறீங்க.?’’ என்றாள்.
``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக. /

கலக்கல் சகோ.

/ காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப்
பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான். /

உண்மை..

சங்கவி said...

//காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப்
பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம்//

இந்த வருசம் தண்ணீர் வருதுங்க..

தமிழ் உதயம் said...

எல்லாம் வியாபாரம் தந்திரம். வேறென

அன்பரசன் said...

அதெல்லாம் ஒரு காலம்ங்க ஆடில வெள்ளம் பெருகுணதெல்லாம்..
இப்ப எங்க...

Chitra said...

இப்போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப்பெருக்கை நினைவூட்டுகின்றன.


.....commercial elements க்கு culture பலி கடா ஆகி விட்டது. :-(

ரொம்ப நல்ல இடுகை.....கரிசனையுடன் நல்லா எழுதி இருக்கீங்க..

r.v.saravanan said...

என் பசுமையான நினைவுகளை கொண்டு வந்த இடுகை நன்றி அம்பிகா

புவனேஸ்வரி ராமநாதன் said...

உண்மை தான்.

ஹேமா said...

ஈழத்தில் நான் காணவில்லை இப்படி ஒரு நிகழ்வை.இருக்கான்னு தெரில !

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்தேன் ஆடியாலும், தீபாவளியாலும் கூட்டம் தவிர்க்க முடியாது வீடு மாறி விட்டேன்..

சே.குமார் said...

எல்லாம் வியாபாரம் தந்திரம்.

நல்ல இடுகை.

ponraj said...

///``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.////

அருமையான பதிவு!!