Tuesday, February 8, 2011

ஹீரோக்களின் சாகசங்கள்; பாதிக்கப்படும் பிஞ்சுகள்.

.

திருச்சியிலிருந்து நெல்லைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தோம். ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், எட்டுஅல்லது ஒன்பது வயதிருக்கும், `துறுதுறு’ வெனஅதீத சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். அடிக்கடி வாசலை நோக்கி செல்ல முற்பட்ட அவனைக் கட்டுப் படுத்த அவன் அன்ன பெரும் பிரயத்தனம் பட வேண்டியிருந்தது. ``ஏம்மா வெளிய எட்டி பாக்க வுட மாட்டேங்குறீங்க?’’ கோபமாக கேட்ட அவனிடம், ``வேண்டாம்ப்பா, வெளிய வுழுந்துருவ’’ என்றாள் அன்னை. ``வுழுந்தா என்ன... ட்ரெய்ன மிஸ் பண்ணுவேன், பின்னாலேயே ஓடி வந்து கடைசிப் பெட்டிய ஜம்ப் பண்ணி புடிச்சி, டாப் ல ஏறி வந்துருவேன்’’ என்றான் வீரமாக. பதறிப் போன அன்னை, அவனுக்கு யதார்தத்தை புரிய வைக்க திணறிப் போகிறாள்.


சிறுவனின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போன நான், அதைப் பற்றி என் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் கூறிய இன்னொரு சம்பவம் மனதை அப்படியே உறைந்துப் போகச் செய்தது. அவள் மகன் படிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காவது படிக்கும் சிறுவன் ஒருவன், தன்னை சினிமா ஹீரோவாக பாவித்துக் கொண்டு அந்த விபரீத செயலில் இறங்கி யிருக்கிறான். மண்ணெண்ணெயை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, கையில் தீக்குச்சியை பற்ற வைத்து, அதில் வாயிலிருந்த எண்ணெயை ஊத முற்பட்டிருக்கிறான். குபீர் குபீரென நெருப்பு பறந்து போகும் என நினைத்தவனின் முகமெங்கும் நெருப்பு பிடித்துக்கொள்ள, இரண்டொரு நாட்கள் உயிருக்கு போராடியவன் பரிதாபமாக இறந்து போனானாம்.


என்னக் கொடுமை இது... இந்த அளவுக்கா குழந்தைகள் மனம், ஹீரோக்களின் சாகசங்களுக்கு அடிமை பட்டுக் கிடக்கிறது? இப்படித்தான், முன்பு `சக்திமான்’ என்ற சீரியல் ஒளிபரப்பான போது இரண்டு குழந்தைகள் `சக்திமான் எங்களை காப்பாற்று’ எனக் கூறியபடி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து, அந்த சீரியலை தடை செய்ய வேண்டுமெனக் கண்டனங்கள் எழுந்ததும் நினைவிருக்கலாம்.


கட் அவுட், பாலாபிஷேகம் என இளைஞர்கள் தான் இந்த `ஹீரோ வொர்ஷிப்’ புக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்தால், இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஈன்று புறந்தருவதோடு கடன் முடிந்து விடுவதில்லை. பேணிக்காப்பதும், இத்தகைய மாயைகளை புரிய வைப்பதும் பெற்றோரின் கடமை தான்.

.

18 comments:

ஞாஞளஙலாழன் said...

அருமையான பதிவு. உண்மை தான். இதில் இன்றைய பெற்றோர்களின் தவறும் நிறைய உள்ளது.

MANO நாஞ்சில் மனோ said...

//இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது///

என்னத்தை சொல்ல.....

மதுரை சரவணன் said...

arumaiyaana kulanthaikal parriya pathivu.. naan thaan kavanamaaka kulanthaikalai valarkka vendum.pakirvukku nanri.

Chitra said...

குழந்தைகள் என்ன மாதிரி நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள் - அதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பேசி - guide செய்ய பெற்றோர்கள் நேரம் ஒதுக்க, முதலில் இருந்தே பழகிக் கொள்ள வேண்டும். Thats what my children's pediatrician told me.

ஹேமா said...

அம்பிகா...இன்றைய குழந்தைகளில் சினிமாவின் தாக்கம் நிறையவே !

Unknown said...

நெஞ்சு பத பதைக்குது.

நம்மளால முடிஞ்சது வீட்டுல டிவியில் கேபிள் connection கொடுக்காம இருந்தாலே, மத்ததே யோசிக்க நிறைய நேரம் கிடைக்கும்.

எங்க வீட்டு குமரன் பெரிய ஆளுங்க. துளி அசந்தாலும் நாம் காலி. நான் சவரம் செய்வதைப் பார்த்து, தனக்கு தானே ட்ரை பண்ணிய பெரியவரு. நல்ல வேலை வெட்டு சின்னதாப் போச்சு.
Sethu(S)

sathishsangkavi.blogspot.com said...

உண்மை தான்....

sakthi said...

நிதர்சனமான பதிவு

KAVEESH M said...

டாக்டர் விஜயகாந்த தான் இதற்கு காரணம். அவரது சாகசங்களை பார்த்து தான் பிள்ளைகள் கெட்டுப் போய் விடுகிறார்கள். அவரது நடிப்பையும், கட்சியையும் தடை செய்ய வேண்டும். ஆடுத்தது விஜய், தான் விஜயகாந்ததின்
சிஷ்யன் என்று நினைப்பு வேற.

ராமலக்ஷ்மி said...

அவசியமான பதிவு அம்பிகா.

'பரிவை' சே.குமார் said...

//கட் அவுட், பாலாபிஷேகம் என இளைஞர்கள் தான் இந்த `ஹீரோ வொர்ஷிப்’ புக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்தால், இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. //

ithu unmai... eppo thirunthapporom..?

Angel said...

good post.naan vasikkum naattil tv {tamil)connection edhum illai.thappitheen.

சி.பி.செந்தில்குமார் said...

ASATHTHAL AMBIKA

Sriakila said...

எவ்வளவு முக்கியமான பதிவு இது. இன்று சின்னப்பிள்ளைகளின் மனதை அந்தளவுக்கு சினிமா கெடுத்து வைத்திருக்கிறது. பிள்ளைகள் பார்க்கும் சுட்டி டிவியிலும் கூட பஞ்ச் டயலாக்குகள், சினிமா ஹீரோக்கள் செய்யும் சாகசம் அத்தனையும் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளைக் கண்கொத்திப்பாம்பாக கவனித்துக்கொண்டே இருப்பது மட்டும் தான் பெற்றோகள் செய்ய வேண்டியது.

என்ன செய்ய? எப்போதும் ஒருவித பதைபதைப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டியதிருக்கிறது. நல்ல எச்சரிக்கை பதிவு அம்பிகா அக்கா.

ponraj said...

அவசியமான பதிவு...
அருமையான பதிவு...

kanagaraj said...

Hi, iam kanagaraj from sivakasi, ungaludaya sollathan ninaikiren padikka nernthadhu, inrullamediakkal cinimavaithavira veru onrum TV il kattuvathu illaiye, sirappu nikazhchikal enru nadiga nadigai yi than kattukinranar kulanthaikalum athai thane pinparrum. Mediakkalukku panam than mukkiam makkal allve nanri.

ஈரோடு கதிர் said...

பதிவு - பாடம்

Pranavam Ravikumar said...

Good one.. Whom we need to pinpoint? Is it the media/cinema, Parents or Children..?

"Prevention is better than cure.."

My wishes...